கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள் சென்னை பள்ளியில் ஒரு விழாவிற்கு சென்றபொழுது தலைமை ஆசிரியர் இருக்கையில் அமராமல் , எதிர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எக்மோர் மருத்துவமனைக்கு சென்ற பொழுதும் இதே போல மருத்துவமனை தலைமை மருத்துவர் இருக்கையில் அமராமல் எதிர் பக்கம் அமர்ந்து அவரையும் அமர வைத்து பேசினார்.
இவை அதிகாரத்தை காட்டாமல் அலுவர்களுக்கு மரியாதை தரும் நல்ல அணுகுமுறைகள்.
தொடரட்டும்.
வாழ்த்துக்கள் 🤝.
சென்ற ஆட்சியில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் பார்வையிட செல்லும்பொழுது தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்தது இல்லை.
ஆனால் இந்த அணுகுமுறை உயர் அலுவலர்களிடம் காணப்படுவதில்லை. அவர்கள் வந்தால் முதலில் பிடுங்குவது அந்த அலுவலக தலைமை அலுவலரின் இருக்கையை.பெரும்பாலும் உயர் அலுவலர் எதிரில் இவர்கள் அமர மாட்டார்கள்.
இதே அதிகார பண்பை தலைமை ஆசிரியர் பிற ஆசிரியர்களிடம், ஆசிரியர்கள் மாணவர்களிடமும் கொண்டு செல்கிறார்கள். ஏன் பெற்றோரிடமும் கூட.
எதிரில் இருப்பவரை அமர வைத்து பேசுவது அடிப்படை மனித மாண்பு. இதை அரசு அலுவலகங்களில் முக்கியமாக காவல் நிலையத்தில் பொதுமக்களும்,பள்ளிகளில் ஆசிரியர்களும்,பெற்றோர்களும் பெற வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனைத்து அலுவலகங்களுக்கும் இதனை சுற்றறிக்கையாக தந்தால் சிறப்பாக இருக்கும் 🙏🙏