2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.
கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் க���கத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.
உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!
(1/2)
#DMK4TN
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று!
தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களைத் தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்!
இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்!
#DMK @arivalayam
ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான க��ப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி @PremallathaDMDK அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!
1991 சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு மறுநாள்... கோபாலபுரம். காலை 9 மணி.
திமுக தனது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தேர்தல் தோல்வியைச் சந்தித்திருந்தது.
கலைஞர் மட்டும் துறைமுகம் தொகுதியில் வென்றிருந்தாலும், தோல்விக்கான தார்மீகப் பொறுப்பை ஏற்று கட்சியின் ஒரே உறுப்பினரான தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜின��மா செய்தார்.
அன்று கோபாலபுரம் வீடு வழக்கம்போல பரபரப்பாக இல்லை.
கழக நிர்வாகிகள் இல்லை.
பத்திரிகையாளர்கள் இல்லை.
தேர்தலுக்கு பிறகு காணப்படும் கூட்டமும் இல்லை.
உதவியாளர் சண்முகநாதன் கலைஞர் அறைக்குள் சென்று,
"தலைவரே... இன்னும் யாரும் வரவில்லை..."
அதற்கு கலைஞர் அமைதியாக,
"யாரும் வரலேன்னா என்ன? ஆற்காட்டார் வருவாரே.."
"அவரும் காணல தலைவரே."
"பால்காரன் வரலேன்னாலும் ஆற்காட்டார் ��ருவார். சற்று பொறுய்யா".
அடுத்த 30 ஆவது நிமிடத்தில் ஆற்காடு வீராசாமி வந்தார். ஒரு தலைவருக்கு தன் இரண்டாம் கட்ட நிர்வாகி மீது எவ்வளவு பெரிய நம்பிக்கை..
பிறகு ஒருவர்... இருவர்... நால்வர்..
மெல்ல மெல்ல உடன்பிறப்புகள் வரத் தொடங்கினர்.
சில நாட்களிலேயே கோபாலபுரம் மீண்டும் அரசியல் தலைமையகமாக மாறியது.
அதுதான் தலைவர் என்பதன் அர்த்தம்.
வெற்றியில் கூட்டம் சேர்ப்பது எளிது.
தோல்வியில் கூட்டத்தைத் தக்கவைப்பதுதான் தலைமை.
1991-ல் கடுமையான பின்னடைவு.
1996-ல் அதே இயக்கம் தமிழக அரசியலில் மாபெரும் மீள்வருகையை நிகழ்த்தியது.
"த��ைவர்கள் வெற்றியால் உருவாக மாட்டார்கள்; தோல்விக்குப் பிறகும் கதவைத் திறந்து உட்கார்ந்திருக்கும் தைரியத்தால்தான் உருவாகிறார்கள்."
- பகிர்வு..