இன்றைய தினம் காலை, கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, 2025–2026 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, அவர்களின் சாதனைகளைப் பாராட்டிப் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கல்வியில் சிறந்து விளங்கும் இளம் தலைமுறையினரை அங்கீகரித்து ஊக்கப்படுத்துவது, அவர்கள் இன்னும் உயர்ந்த இலக்குகளை நோக்கிப் பயணிக்க உறுதுணையாக அமையும். இந்தச் சிறப்பான நிகழ்வை முன்னெடுத்த, கோவை கொங்கு நண்பர்கள் சங்க உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கனவுகள் நனவாகி, வாழ்வில் மென்மேலும் பல உயரங்களைத் தொட்டு, நம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். (1/2)
போரில் வென்று நாடு திரும்பும் முதலாளியை வரவேற்க கொத்தடிமைகள் பேரும் அளவில் திரும்பியிருக்கின்றனரே….
துபாயில் ஓய்வெடுத்துவிட்டு தாமதமாக வருகிறோம். வர வேண்டாம் என்று சொல்லக்கூடாதா ? @mkstalin@Udhaystalin
நமது @WTLFoundation தொடர்பான பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்ட, பல்லடத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தனது துடிப்பான செயல்பாடுகளால் அனைவரின் அன்பையும், கவனத்தையும் பெற்றிருந்த இளைஞர், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்தக் கடினமான நேரத்தில், சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
ஒரு நெருடலான, எரிச்சலூட்டும், சங்கடத்தை உண்டாக்கும் கேள்விக்கு,
இத்தனை confident-ஆ, சகஜமா, தட்டுத் தடுமாறாமல் பதில் சொல்ல முடியுதுன்னா அது மனசுல நேர்மையும் உண்மையும் இருந்தா மட்டும் தான் முடியும்…!
எளிமையே அடையாளமாகவும், மக்கள் சேவையே அரசியலாகவும் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது தொலைநோக்கு பார்வை, பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.
பதவியை விட மக்கள் நலனையே பெரிதாகக் கருதிச் செயலாற்றி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும், வலுவான அடித்தளத்தை அமைத்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் புகழ், என்றும் நிலைத்திருக்கும்.
ஆனைமலை Long Distance Runners குழுவின் நிறுவனர் திரு. லிங்கேஷ் காமாட்சி மற்றும் அவரது குழுவினர், 28 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடி வந்து, நமது 'போதை இல்லா தமிழகம்' மாநாட்டில் பங்கேற்றது, சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையைக் காட்டுகிறது.
இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கும் விழிப்புணர்வு முயற்சிக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட இளைஞர்களே மாற்றத்தின் உண்மையான தூதுவர்கள்.
மாறுவோம், மாற்றுவோம்!
நமது @WTLFoundation மிகவும் இளமையான அமைப்பு. நமது அமைப்பின் தலைவர்களில், 54% பேர், 39 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதும், ஏற்படுத்தப் போவதும் இந்த இளைஞர்கள்தான்.
காவல் துறை வரலாற்றில் ஒரு காவல் அதிகாரி தன்னுடைய பணியின் போது தான் அணிந்திருந்த சீருடை கிழிந்ததற்க்கு வருத்தப்படமா...
கோபப்படமா...
முதன் முதலா மகிழ்ச்சியா கடந்து போன தருணம்...
அத்தனை காவல் தெய்வங்களுக்கு அவர்களது முகத்தில் அத்தனை மகிழ்ச்சி
இந்தியன் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமையே. இந்தியாவில், நமது தமிழகம் முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் நாம் போராடுகிறோம்.
மதம், ஜாதி என்பது இந்த இயக்கத்திற்கு வெளியே. இந்த அரசியல் இயக்கத்தில் அனைவரும் சமம்!
தவெக அமைச்சரவையில் பெரும்பாலானோர் முதல்முறை அமைச்சர்கள். அவர்கள் தடுமாறுவது இயல்பு. அப்படித் தடுமாறுபவர்களை தட்டிக் கொடுப்பதுதான் ஒரு நல்ல சமூகத்துக்கு அழகே தவிர, அவர்களை கீழே அழுத்துவது அல்ல.
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!
இந்திய இசையின் இனிமையான குரலாக, பல தலைமுறைகளைக் கடந்து, கோடிக்கணக்கான இதயங்களை வசீகரித்த பின்னணிப் பாடகி, எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது மறைவு, இந்திய இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
இசையை உயிராக நேசித்த அந்த மாபெரும் கலைஞருக்கு, எனது சிரம் தாழ்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி.
Looking forward to joining our @WTLFoundation leaders in Pollachi this evening as we gather together, united by our shared resolve to build a drug-free Tamil Nadu.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் உறுதியுடன், இன்று மாலை பொள்ளாச்சியில் நடைபெறும் மாநாட்டில், @WTLFoundation தலைவர்களுடன் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
போதை இல்லா, பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
மாறுவோம், மாற்றுவோம்!
இன்றைய தினம், 2026–27 விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி முகாமில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பத்திரிகைத் துறையின் அடிப்படைக் கடமைகள், சமூகப் பொறுப்பு மற்றும் ஜனநாயக விழிப்புணர்வை, இளம் தலைமுறையினரிடம் வளர்க்கும் விகடன் குழுமத்தின் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி முகாம் வாயிலாக, பத்திரிகைத் துறை மட்டுமின்றி, கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல சாதனையாளர்கள் உருவாகியிருப்பது விகடன் குழுமத்தின் சாதனை.
நூற்றாண்டு காலமாக தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையையும், விழிப்புணர்வையும், புத்தகங்கள் படிக்கும் கலாச்சாரத்தையும் வளப்படுத்தி வரும் விகடன் குழுமத்திற்கும், அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. பா. சீனிவாசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். சமூக அக்கறையுடன் அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் விகடனின் பணி தொடர்ந்து சிறக்கட்டும்.
@JuniorVikatan@vikatan (1/2)