சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம்.
ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழகத்தின் மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை.
தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
~~~~~~~~~~
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ (SIR) நடவடிக்கைகளின்போது நடைபெற்றவை குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகள் தொடர்பாக 14 முறை முறையான ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனர் என அந்நாளிதழ் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு மாறாகவும், சட்டவிரோதமாகவும் செயல்பட்டு தேர்தல் ஜனநாயகத்தையே சீர்குலைத்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களது அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
இந்த உள்மோதலின் மையமாக 13 கோடி வாக்காளர்களின் பெயர்களைப் பாதிக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) உள்ளது. புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவம் 6-ல் “அங்கீகாரமற்ற, சட்டவிரோத மாற்றங்கள்” செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
மேலும், தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் மூலம் வாக்காளர் பட்டியல் தரவுத்தளம் படிப்படியாக மையப்படுத்தப்படுவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மையப்படுத்தப்பட்ட மென்பொருள், கள அளவில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களின் (ERO) முடிவுகளை மீறி செயல்படுவதால், தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவது தடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அமைப்புகளை இவ்வாறு மையப்படுத்துவது, தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பாரம்பரியமாகக் கொண்டிருந்த பரவலாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பை வலுவிழக்கச் செய்யும். சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அலுவலர்களின் அணுகலைக் கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை தலைமை இயக்குநருக்கு சட்டரீதியான அதிகாரம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கோவாவில் ஏற்பட்ட மென்பொருள் பிரச்சினைகளால், உச்சநீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், வாக்களிக்கத் தகுதியுடைய 97 பேர் வாக்களிக்கும் உரிமையை இழந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டின் சட்டம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருமித்த முடிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் உள்மோதல் அதன் அரசியலமைப்புச் செயல்பாடு குறித்த தீவிரமான கவலைகளை ஏற்படுத்துகிறது.
இந்த ஆட்சேபனைகளின் நகல்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் மட்டுமே வெளிப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களே முடிவெடுக்கும் செயல்முறையிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மிகவும் கவலைக்குரியது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாகிறது. SIR நடவடிக்கையின் அடிப்படையில் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்தல்களும் சட்டவிரோதமானவையே என அர்விந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கோருவதில் நியாயம் உள்ளது.
எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தாமாக முன்வந்து உடனடியாகப் பதவி விலக வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து SIR நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்நாடியாக இருப்பது வாக்குரிமையும் தேர்தலும்தான். மக்களின் வாக்குரிமையையும் தேர்தல் ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இவண்,
தொல். திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக அறிவுறுத்த வேண்டும்; அனைத்து எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்
குடியரசுத் தலைவருக்கு விசிக சார்பில் இன்று கடிதம் மூலம் கோரிக்கை வைத்தேன்!
பிரபல தொழிலதிபர் வீரமணி தொடர்புடைய வழக்கில் அடுத்தடுத்து வெடிக்கும் பூகம்பங்கள் – நேர்மையான, முழுமையான விசாரணைக்காக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க தவெக அரசு முன்வர வேண்டும்!
பிரபல தொழிலதிபர் வீரமணி தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
2025 ஆம் ஆண்டில்தான் இவ்வழக்கு தொடர்பாக புகார் பெறப்பட்டதாகவும், போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் வழக்கின் விசாரணையை முடித்துவிட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது 2024 ஆம் ஆண்டிலேயே இது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரசியல் பிரமுகர் ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் பூகம்பத்தையே கிளப்பியுள்ளது.
உரிய ஆதாரங்கள் இருந்தும் விசாரணை நடத்தாதது ஏன்? தீவிர விசாரணை நடைபெறுவதற்கு முன்பாகவே வழக்கை முடித்துவைக்க முயன்றது ஏன்? காவல்துறையின் விசாரணையில் அரசியல் ரீதியிலான அழுத்தம் இருந்ததா? குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு இவ்வளவு அலட்சியமாக கையாளப்பட்டது எப்படி? என அடுத்தடுத்து எழும் கேள்விகளின் பின்னணியில் மிகப்பெரிய வலையமைப்பு இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, இவ்வழக்கில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் தொடங்கி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களின் பெயர்களும் அடிபடுவதால், வழக்கின் விசாரணை நேர்மையான, வெளிப்படையான மற்றும் முழுமையான முறையில் நடைபெற ஏதுவாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
பாஜக 240 தொகுதிகளுக்குள் முடங்கிய போது, அவர்கள் மாநில கட்சிகள் வலுவாக வளர்ந்து வந்த உண்மையை புரிந்துகொள்ள ஆரம்பித்தனர்…
மம்தா தொகுதியில் 51,000 வாக்குகள் நீக்கப்பட்டன… அவர் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்…
முக ஸ்டாலினின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்...
அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டன… அவர் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்...
SIR அறிமுகப்படுத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுதானா?
- அபிஜித் தீக்தே
ராஜாஜி எது சொல்றாரோ அதுக்கு எதிரா செய்னு பெரியார் சொன்னது போல, நிர்மல் குமார் எது சொல்றாரோ அது கட்டாயம் பொய்யா தான் இருக்கும்னு முடிவுக்கு வந்துரலாம்🩳🤧
@aransei
https://t.co/Z0qsANCOac
தமிழ்நாட்டில் எந்தப் பக்கமும் சாதிப்பெயரே கண்ணில் தெரியாதவாறு மாற்ற அருமையான வாய்ப்பு.
நமது சமூகநீதித் துறை அமைச்சர் @VanniArasu_VCK முழுமூச்சாக இறங்கி வேலை செய்வார் என எதிர்பார்க்கலாம்தானே?
After a good theatrical run, #VishwanathAndSons is having a record-breaking run in Netflix too.
All time record for tamil movies in 1st week (5.5M+) and 2nd week as well (11.2M+)
Now, already in top 10 most viewed tamil movies of all time.
Need to see if it can cross Maharaja.
#conspirancyFelix: திமுக ஒரு ஊழல் கட்சி, மிசா, சர்காரியா….
#vicky : நீ எந்த கேசுல arrest ஆகுனேனு ஊருக்கே தெரியும், நீயொல்லாம் ஆளு மயிறுனு பேசிட்டு இருக்க
ணோவ் @vickykarikalan அண்ணா கைய கொடு 🤣👏🏻…..
இவலாம் இப்படிதா போட்டு பொலக்கனும்
#keepGoing…
#VishwanathAndSons has the highest views at the end of the 2nd weekend on Netflix of any Tamil film 🔥
⚡️11.3M views at the end of 2nd Weekend.
⚡️On 1st spot Worldwide (Non-English Movies)
Top 15 - Total views at the end of 2nd Weekend (Kollywood on Netflix, 2024 Onwards).
1.#VishwanathAndSons: 11.3M
2.#Maharaja: 9.3M
3.#IdliKadai: 8.1M
4.#Blast: 7.5M
5.#Amaran: 6.8M
6.#Kara: 6.7M
7.#TheGOAT: 6.2M
8.#GattaKusthi2: 5.7M
9.#Dude: 4.8M
10.#Meiyazhagan: 4.7M
11.#Retro: 4.6M
12.#Youth: 4.5M
13.#ThugLife: 4.4M
14.#VidaaMuyarchi/#Dragon: 4.3M
15.#Indian2/#Maareesan: 4.2M
#VishwanathAndSons becomes the highest-viewed Tamil film on Netflix at the end of its 2nd weekend💥 The One #Suriya Setting the new Record ⭐🔥
• 11.3M views at the end of 2nd weekend
• #1 Worldwide among Non-English Movies
• #1 in 11 countries
• Top 10 in 19 countries
Top 15 Tamil Films on Netflix by views at the end of 2nd weekend (2024 onwards):
1. #VishwanathAndSons - 11.3M 🔥
2. #Maharaja - 9.3M
3. #IdliKadai -8.1M
4. #Blast -7.5M
5. #Amaran - 6.8M
6. #Kara -6.7M
7. #TheGOAT - 6.2M
8. #GattaKusthi2 - 5.7M
9. #Dude - 4.8M
10. #Meiyazhagan - 4.7M
11. #Retro - 4.6M
12. #Youth - 4.5M
13. #ThugLife -4.4M
14. #VidaaMuyarchi / #Dragon -4.3M
15. #Indian2 / #Maareesan - 4.2M
😲😲😲
@Suriya_offl's #VAS reached at Global Trending No.1 Spot ( Non-English ) for the last week on Netflix 🙏🔥🔥
Now #VAS is also moving into the All-time Most Watched Tamil movie ever in Netflix very soon ☠️☠️
Maharaja's Record under threat 👀💥
#VishwanathAndSons #Suriya