ம���ிழ்ச்சியின் வடிவமாக வலம் வரும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் என் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தூய அன்பையும் - தன்னிகரில்லா கனவுகளையும் சுமந்து நிற்கும் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க என்றைக்கும் ��ுணை நிற்போம்.
ஒவ்வொரு குழந்தையும் அறிவின் துணையோடு வாழ்வில் வென்று சமூகத்தை உயர்த்த என் அன்பும் - வாழ்த்தும்!
#HappyChildrensDay
திராவிட முன்னேற்றக் கழகம் உருவான பெருமைக்குரிய சென்னை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர், ஆர்.கே.நகர் மற்றும் இராயபுரம் சட்டமன்றத��� தொகுதிகளில் உள்ள வார்டு- பாகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள @dmk_youthwing நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றோம்.
அன்றாடம் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளில் ஆர்வம் செலுத்தி, கொள்கை உறுதியுடன் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் கழகப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறி உரையாற்றினோம்.
2026-சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முனைப்புடன், கழக இளைஞர் அணியின் இக்கொள்கைக் கூட்டம் பணியாற்றும்!
@arivalayam @rdsekarmla @Joel_Dmk @JJEbenezer1
“யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!” - தந்தை பெரியார்
#Periyar
கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன் , @dmk_youthwing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்தவகையில், சென்னை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்!
தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கழகப் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்!
@arivalayam@Subramanian_ma@Joel_Dmk@PrabhakarRaja88
75-ஆண்டு கால ஆலமரமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை அணியாக 46-ஆம் ஆண்டில்
அடியெடுத்து வைத்திருக்கிறது நம் @dmk_youthwing. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தமான நம் இளைஞர் அணி, மாவட்டம்-மாநகரம்-ஒன்றியம்-நகரம்-பகுதி-பேரூர் வரை பரந்து விரிந்து வளர்ந்துள்ளது.
இந்தக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கழகத்தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன் தற்போது ஒன்றியத்துக்குட்பட்ட கிளைகளிலும் நகர-பகுதி-பேரூர் வட்டங்களிலும் மற்றும் அனைத்து பாகங்களிலும் இளைஞர் அணிக்கு அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இதன் முதற்கட்டமாக சென்னை மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட 43-வட்டங்களிலும், 712-பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்!
பெரியார், அண்ணா, கலைஞர் வழியில்
கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டுடன் கழகக் கொள்கைகளை மனத���லேந்தி மக்கள் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்!
@arivalayam @nchitrarasu @Joel_Dmk @Prakashbalara01
#திராவிடமாடல் அரசின் சாதனை மகுடத்தில், மேலும் ஒரு வெற்றிச் சிறகு. ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலப்பள்ளிகளில் படித்த 135 மாணவ – மாணவியர், IIT, NIT போன்ற தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில், சேர்ந்து படிக்கின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
கல்வி எனும் அழியாச்செல்வத்தை பெற்று, இம்மாணவர்கள் வாழ்வில் உச்சங்களைத் தொட அன்பும் வாழ்த்தும்.
கழகத் தலைவரும் - மாண்புமிகு முதலமைச்சருமான தளபதி M. K. Stalin அவர்களின் உத்தரவின்படி, ஆலத்தூர்கிழக்கு ஒன்றியம், கொளக்காநத்தம் ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அவரது சொந்த வாக்குச்சாவடியில் #ஓரணியில்_தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பரப்புரையை துவக்கி வைத்தார்