விஜய்சேதுபதி Leadership Quality பற்றி சொன்னால், அனைத்து கட்சிகளும் கடந்துபோகும் போது,
தவெகவினர் மட்டும் அவரை கடித்து வைக்கிறார்கள் என்றால் விஜய்க்கு Leadership Quality இல்லை என்று அவர்களே முடிவு செய்துவிட்டார்கள் போல..🤣
@TVKVijayHQ
தமிழ்நாடு, புரட்சி போன்ற சொற்களை, சொற்களாக அல்லாமல் கருத்துருவாக்கங்களாகத் தமிழருக்கு அறிமுகம் செய்த என் பிரியமாகவிஞன் பாரதிக்கு என் வணக்கங்கள். அவர்தம் நினைவு நாளில், காலத்தால் சோபையிழந்து போய்விடாத அவரது கவிதைகளை மனங்கொள்வோம்.
முதல்வரின் உடல்மொழி:
___________________
மனித மாண்புகளுக்கு எதிரானதாகும்! _______________________________
காவல்துறை மானியத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.
எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.
அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.
முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்.
மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். மாண்புமிகு அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர்,விசிக.
அதுல பாருங்க இந்திய கடந்த 3 மாதங்களில் சுமார் 64,000 கோடி முதலீட்டை மட்டுமே பெற்றுள்ளது..
ஆனா யாருக்கும் தெரியாம நம்ம விஜய் 1,00,000 கோடி தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கார் .. ஆனா யாருக்குமே அட நாட்டின் நிதி அமைச்சருக்கே தெரியாதவர்கள் பாருங்களேன்..
நைஸ்..
பொய் சொல்லலாம் ஆனா இவ்வளவு பொய் சொல்ல கூடாது. மொத்த பொய் என்ன என்பதை விரிவாக 2 நாட்களில் வெளியிடுகிறேன்..
விஜய் Vs உதயநிதி
இன்று சட்டமன்றத்தில் பேசியது என்னவோ சினிமா படம் போல பேசப்படுதே ஒழிய என்ன சொன்னார் உதய்? என்ன பதில் கொடுத்தார் விஜய் ? என்ற உருப்படியான விளக்கத்தை மீடியாக்கள் முன்வைக்கவில்லை.
உதயநிதி கேட்டது குறுவை சாகுபடி வறட்சி நிவாரணம் பற்றி இந்த அரசு திட்டமிட்டுள்ளதா என.
விஜய் சொன்னது பேப்பர் படிப்பீங்களா.. அது அறிவித்துவிட்டோம் முன்பே. குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு என்று..
யார் சொல்வது சரி ?
சிறப்பு தொகுப்பு என்பது : குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள அவர்களுக்கு ஆதரவாக உரிய உபகரணம் ஆரம்பித்து உரம் தேவை வரை எல்லாவற்றிற்கும் உதவிகரமாக இருக்க ஒதுக்கப்படும் தொகை... இது ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும். ஆனால் உதய நிதி கேட்டது முற்றிலும் வேறு. அவர் கேட்டது வறட்சி நிவாரணம் - Drought Relief.
விஜய் சொல்வது Investment Support என்பது வேறு உதயநிதி கேட்கும் Compensation என்பது வேறு... குறுவை சாகுபடிக்கு Investment Support நிதி வேளாண் பட்ஜெடில் இருந்து ஒதுக்குவார்கள் - அதுவே இழப்பீடு என்பது Compensation - பேரிடர் மேலான்மை வாரியத்தின் நிதியில் இருந்து ஒதுக்குவது... இரண்டுமே வேறு வேறு துறைகள் ஆனால் விவசாயிகள் சார்ந்தது.
சென்ற வாரம் இதற்காக தெலுங்கானா அரசு தன் விவசாயிகளுக்கு சுமார் 800 கோடி ஒதுக்கீடு செய்தது.. வறட்சி நிவாரணத்திற்கு என்பது கூடுதல் செய்தி.
ஆகவே முதலில் விஜய்-க்கு கேள்வி புரியவில்லை. இரண்டாவது 2 நிதிக்கும் வித்தியாசம் தெரியவில்லை... அதை தாண்டி விஜய் தினமும் செய்திதாள் படிப்பது கூட இல்லை என நினைக்கிறேன். அப்படி படித்திருந்தால் தெலுங்கான அரசு முன்னெடுப்பு என்னவென்று தெரிந்திருக்கும்... சென்ற வாரம் hindu பேப்பர் பார்க்கவும்.
இது ஆரோக்கியமாக விவாதமாக சென்று இருந்தால் இன்னேரும் ஒரு முக்கிய பிரச்சனைக்கு விடை கிடைத்திருக்கும். ஆனால் விஜய் பேப்பர் படிக்க சொல்லிட்டார் பிரண்ட் என்று வழக்கம் போல சினிமா காட்சி போல் ஆக்கிவிட்டார்கள் சட்டமன்றத்தை...
இப்படியே போனால் எதற்கும் தீர்வு இருக்காது - எல்லாமே ரீல் தான் சினிமா தான்.
தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர் லயோலா கல்லூரி உரிமையாளர் லயோலா மணியை தேர்ந்தெடுத்த தமிழக அரசிற்கு வாழ்த்துகள் .
காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்பது போல .
விஜய்க்கு ஓட்டு போட்டால் லயோலா மணிதான் பாடநூல் கழக தலைவரா வருவார் .
சர்வநாசம் .
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
விவசாய கடன் 5 ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் அனைவருக்கும் தள்ளுபடி என கூறிவிட்டு தற்போது ஏமாற்றும் வேலையை செய்கிறார் விஜய்.
விஜய்-க்கு முட்டு கொடுக்கும் கும்பலுக்கு : யூரியா + DAP + Potash இதை ஒரு சீசனுக்கு விவசாயிகள் வாங்கவே 16,000 ரூபாய் குறைந்தது தேவை... உங்க அண்ணன் அறிவித்திருப்பது அதை விட குறைவு.. அதில் 1 லட்சத்திற்கு மேல் கடன் என்றால் 5000 ரூபாய் தான் தள்ளுபடி.. மொத்தம் 2044 கோடி - சுமார் 14.5 லட்சம் விவசாயிகளுக்கு என்றால் சுமார் 14,000 ரூபார்.. ஆக இது உரம் வாங்கும் காசு கூட கிடையாது.
ஒரு மாததிற்கு உரம் வாங்க காசு தருவேன் இலவசமாக என்று சொல்லிட்டு போயிருக்கலாமே! எதற்கு விவசாய கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுக்க வேண்டும்? ஆக அப்பட்டமாக ஏமாற்றியுள்ளார் உங்க நொண்ணன்...
இது முன்பு எப்படி ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவசம் சொல்லிட்டு - ஆட்சிக்கு வந்து இரண்டு மாதத்திற்கு 100 யூனிட் கூடுதலாக இலவசம் அறிவித்த பித்தலாட்டதை விட பெரிய பித்தலாட்டம்.
இதை கூட எதிர்த்து கேள்வி கேட்கவில்லை என்றால் நீ மனநோயாலியாக இருக்க வேண்டும் இல்லை ரத்த்திற்கு பதிலாக உடம்பில் சாக்கடை உடம் ஓடும் அடிமையாக இருக்க வேண்டும்..
அடுத்த கற்பழிப்பு சம்பவம் :
இடம் தூத்துக்குடி .
24 வயது பெண் 3 இளைஞர்கள் கடத்தி கூட்டு பலாதகாரம்.
பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்.
விஜய் ஆட்சி பொறுப்பேற்று இன்றோடு 13 நாளில் 20க்கும் மேல் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதில் குற்றவாளி பட்டியலில் TVK நிர்வாகிகளும் உள்ளனர்.
கொடுத்த வாக்குறுதி :
ஒரு பெண் பாதிக்கப்பட விடமாட்டேன். நடப்பது வரலாற்றிலேயே அதிக கொலை கற்பழிப்பு சம்பவங்கள் இந்த 13 நாட்களில்.
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது,
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?