செப்டம்பர் 2025
நவம்பர் 2025
மார்ச் 2026.
இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம்னு அமைச்சர் சொல்றாரு.
ஏது நாமளா?
தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி.
நீங்க வந்து இரண்டு மாசத்தில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பஞ்சாயத்து.🤧
எ. வ. வேலு அவர்கள் மீதான வழக்குக்கு ஆளுநரிடம் அனுமதியே வாங்கலையாமே..
அவர் மேல ஊழல் வழக்கு போட்டே ஆகணும் என இவங்களாவே அனுமதி கொடுத்து வழக்கு போட்டு இருக்காங்க
உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசை நல்லா வெச்சு செஞ்சிருக்காங்க போல
தவெகவுக்கு எதுக்கு இவ்வளவு வெறுப்புணர்வு 🤔🤔
நவீன கால 'கொத்தடிமை' ஒப்பந்தம்! ஆத்தூர் நகராட்சியில் நடக்கும் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை பணியமர்த்த 'எஸ்.ஆர். என்டர்பிரைசஸ்' என்ற தனியார் நிறுவனம், 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அவர்களை நவீனக் கொத்தடிமைகளாக மாற்றியுள்ளது.
பணியாளர்கள் அரசின் எந்த சலுகையையும் கேட்கக்கூடாது; இஎஸ்ஐ (ESI), பிஎஃப் (PF) போன்ற அடிப்படை உரிமைகளைக் கோரக்கூடாது எனப் பத்திரத்தில் நிபந்தனை விதிக்கப்படுகிறது.
பணி நிரந்தரம் கேட்டு எந்த சங்கமும் போராட்டம் நடத்தக்கூடாது; மீறினால் நிர்வாகம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு பணியை விட்டு விலக வேண்டும் எனத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது.
இந்த அராஜக ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களை அடிமைகளாக மாற்றும் இந்தச் செயல், தவெக ஆட்சியில் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகும்.
துப்புரவுப் பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களைப் போராட விடாமல் தடுக்கும் இந்தத் தனியார் நிறுவனத்தின் அராஜகத்தை, 'தூய சக்தி' என்று பேசும் தவெக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது? கேமரா முன் வேஷம் போடும் அதிகாரிகள் மற்றும் இந்த நிறுவனத்தின் மீது உடனடியாக விசாரணை நடத்தி, தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும்!
ஜனநாயக நாட்டில் தொழிலாளர்களைப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அடிமைப்படுத்தும் இந்த அவலத்தை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்! உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்களா அல்லது இந்தத் துரோகத்திற்கு நீங்களும் உடந்தையா?
அமைச்சர் ரமேசு இங்கே வாப்பா..
இந்த பழனி நிலம் மீட்கப்பட்டது 2025.
அதற்கான ஆணையை நீதிமன்றம் கொடுத்து அது பின் யாருக்கும் பாத்தியமாகாத வகையில் சர்குலர் அனுப்பட்டது.
இது ஒட்டுமொத்த பத்திர பதிவாலளார் அலுவகமும் அறியும்.
பின் எப்படி ஒரு பத்திர பதிவாளார் லீவில் சென்ற நேரத்தில் இன்னொரு பதிவாளர் 100 கோடி நிலத்தை விற்பனை செய்ய அனுமதித்தார்?
ஆக இது தெரியாமல் நடந்தது அல்ல.
சரி அவர் ஒருவர் தான் குற்றவாளியா? இல்லை..
100 கோடி அளவு மதிப்புள்ள நிலம் என்றால் மாவட்ட சார்பதிவாளாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். அல்லது அவர் கேட்டுக் கொண்டால் மட்டுமே கீழே இருக்கும் பத்திர பதிவாளார்கள் பதிவு செய்ய வாய்ப்புண்டு - ஆக ஏன் மாவட்ட பதிவாளர் மீது விசாரனை இல்லை?
இதில் சந்தேகமே அமைச்சர் ரமேஷ் தரப்பில் இந்த நிலத்திற்கு உரிய முறையீடு செய்ய வேண்டிய அதிகாரி மாரிமுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் விற்பனை ஆனதும் மாற்றப்பட்டது தான்.
சரி இந்த இடம் விற்பனை செய்ய அனுமதித்த அந்த மர்ம நபர் யார்?
{கீழே இணைக்கப்பட்டுள்ள ஆதாரத்தில் அதிகாரி மாரிமுத்து இந்த நிலம் பற்றி மாவட்ட பத்திர பதிவாளருக்கு கடிதம் 2 ஆம் தேதி எழுதுகிறார். அதையும் மீறு தான் பத்திரம் பதிவு செய்துள்ளனர். அதிகாரி மாரிமுத்துவிற்கு இந்த புகார் கொடுக்கப்பட்டதும் சில மாதம் முன்பு தான். ஆக அனைத்து அதிகாரிகளும் நன்கு தெரிந்தே செய்துள்ளனர்! ஆக வேலை முடிந்ததும் மாரிமுத்துவை சென்னைக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பி வைத்தது அமைச்சரா இல்லை IAS அதிகாரியா? இருவர் தவிர யாரும் முடியாது..}
இரண்டு துறைகள்(கோவில் + நிலம்) சம்மந்தபப்ட்ட ஒரு 100 கோடி ரூபாய் நிலம் மோசடியாக பதிவாக - இந்த இரண்டு துறையிலும் வழுவான influence இருக்கும் நபரால் தான் முடியும் ! அது யார் என்று தேடினால் கிடைப்பவர் இந்த இரண்டு துறைக்கும் இன்று செயல் அலுவலராக இருக்கும் குமரகுருபரன் IAS. நம்ம அமைச்சர் ரமேஷ்க்கு ஆளிலானல் அழகுராஜா அவர் தான்.
ஆக இந்து சமய அறநிலையத் துறை & பத்திர பதிவு துறை இரண்டுக்கும் Secretary to Government ஆக இருப்பவரான குமரகுருபரன் IAS முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவர்.
ஆக இந்த வழக்கில் ஒரே ஒரு பத்திர பதிவாளார் தான் காரணம் என்று முடிப்பதே - தவறு.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரனை செய்யப்பட வேண்டியவர்களே.
1.சார் பதிவாளார் : பத்திர பதிவு செய்தவர்.
2.மாவட்ட சார் பதிவாளர் : அந்த நிலம் பதிவு செய்ய கூடாது என தெரிந்தும் புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காதவர்.
3. மாரிமுத்து இணை ஆணையர் : நிலத்தை மீட்கவேண்டிய பொறுப்பு உள்ளவர் - மர்மமாக பதவி உயர்வு பெற்றவர்.
4.குமரகுருபாரன் IAS - கோவில் + நிலம் : இந்த இரண்டு சம்மந்தப்பட்ட துறை இரண்டுக்குமே இவர் தான் செயலாளார். இவர் மீது அதிக சந்தேகம் வழுக்கிறது.
5.இறுதியாக நம்ம அமைச்சர் ரமேஷ்.. Expire date கூட ஸ்டிக்ட்டா பார்க்கும் அமைச்சருக்கு இந்த மொத்த விசயமும் தெரியாம நடந்துட்டது? அதிலும் பதவி உயர்வு எல்லாம் இவருக்கே தெரியாம நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. இவர் தெரிந்து நடந்தால் இவர் மீதும் வழக்கு பதிவு செய்வது அவசியம். தெரியாமல் நடந்தது என்றால் பதவில் இருக்க தகுதியே இல்லை.
என்ன அமைச்சர் ரமேஷ் எப்போ வழக்கு போடுவீர்? iphone பரிசாக வந்ததா என்ன என்று ஆரம்பித்து அனைத்திற்கு துறை அமைச்சர் பதில் கொடுத்தாக வேண்டும். இது விஜய் படம் அல்ல - தீ சாரதீ என்று நீதிமன்றத்தில் வசனம் பேச...
ஆக மக்கள் முன் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுங்க... முடிந்தால் இந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்க.. முதலில் அந்த IAS அவர வச்சு ஆரம்பிங்க..
இவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,
ஆனால் பழநி ஆண்டவர் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்குத் தாரை வார்த்திருக்கிறார்.
பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பழநி ஆண்டவருக்கே மொட்டை போடுகிறது விஜய் அரசு...
மீண்டும் பணி ஆணை ஸ்டிக்கர் விழாவா?
இன்று காலை நடந்த அரசு நிகழ்ச்சியில் 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை 2) பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய்.
இவர்களுக்கான தேர்வை நடத்தி பட்டியல் தயாரித்தது மருத்துவப் பணியாளர் தேர்வாணையம். இது தமிழ்நாடு அரசு செய்தி வெளியீட்டில் உள்ளது. ஆனால் எப்போது தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற செய்தியை தமிழ்நாடு அரசு செய்தி - மக்கள் தொடர்புத் துறை மறைத்துள்ளது.
உண்மை என்ன?
உதவி மருத்துவர்கள் - Assistant Surgeon (General) பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது - 21 நவம்பர் 2025
தேர்வு நடைபெற்றது - 25 ஜனவரி 2026
இதற்கான பெயர்ப் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டது - 11 மார்ச் 2026
சுகாதார ஆய்வாளர்கள் நிலை II - பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது - 27 அக்டோபர் 2025
தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது - 13 ஜனவரி 2026
இன்று பணி ஆணை கிடைக்கப்பெற்றவர்களுக்கான பணி அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி, பணியமர்த்தத் தேவையான நபர்களைத் தேர்வு செய்து, பட்டியல் தயாரித்தது - திமுக அரசு - மு.க.ஸ்டாலின் அரசு
திமுக தயாரித்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடத்தி விளம்பரம் தேடிக் கொண்டுள்ளது தவெக அரசு
"தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" - FRC டெண்டர் வெளியிட்டது TNMSC 👏👏
Update: (அதில் 5,725/- என குறிப்பிட்டு இருப்பது Tender Documents Cost)
***
TNMSC இயக்குனர் திரு கிருஷ்ணன் உண்ணி IAS அவர்கள் நேற்று மாற்றப்பட்டு உள்ளார்
(இரண்டும் வேறு வேறு செய்திகள்)
Breaking
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது கோவை மாவட்டத்தில் மேற்கொண்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனங்களை சட்டவிரோதம் எனக் கூறி அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்
கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை மாநகராட்சிக்கு 54 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களை ஒரே நாளில் விளம்பரப்படுத்தி அந்த நாளிலேயே நேர்காணல் வைத்து ஆட்கள் சேர்க்கப்பட்டதாகவும் இதில் கடுமையான விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தது
54 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் சட்டவிரோதம் இருப்பதாகவும் விதிமுறைகள் மீறல் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாகவும் கூறி அவர்கள் அனைவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த பணியிடங்கள் பணம் பெற்றுக் கொண்டு நிரப்பப்பட்டதாக ஒரு புறம் புகார்கள் இருக்கும் நிலையில் எஸ்.பி வேலுமணிக்கு இதன் மூலமாக புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது
தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்க செயலாளர் நந்தகுமாருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய முன்னாள் அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்கள்
Bro thought it was content... turned into court content. 💀
OG DMK -கிட்ட Game ஆட நினைச்சா... End Screen Ready. 😎🔥
அதாவது செப்டம்பர் 2025, அப்புறம் நவம்பர் 2025, அப்புறம் இந்த மார்ச் 2026. இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம். ~ அமைச்சர்
ஏது நாமளா? தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி. தவெக ஆட்சில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பிராது.
என்ன நடக்குது தமிழ்நாட்டில் படத்தில் பார்ப்பதெல்லாம் நிஜமாகவே நடக்கிறது....
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்குள் இன்று ஒரு வழக்கில் வாதாட சென்ற வழக்கறிஞர் திரு.காந்தி அவர்களை வாதாட கூடாது என நீதியரசர் முன்னிலையில் மிரட்டும்ரவுடிகள் வேடிக்கை பார்க்க காவலர்கள் ...
விஜய் அங்கிள் ஆட்சியின் அவலம்