2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் 70750 வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், கழகம் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளித்த மாண்புமிகு கழகத் தலைவர் M. K. Stalin அவர்களுக்கும், மாண்புமிகு இளம் தலைவர் அண்ணன் Udhayanidhi Stalin அவர்களுக்கும், தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு.துரை சந்திரசேகரன் MLA அவர்களுக்கும் காலமுள்ளவரையில் என்றும் விசுவாசமாக இருந்து தொடர்ந்து கழகப் பணியாற்றுவேன்.
தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்த முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மூத்த முன்னோடிகள், மாவட்ட,மாநகர கழக நிர்வாகிகள், பகுதிச் செயலாளர்கள், ஒன்றிய - பேரூர் கழகச் செயலாளர்கள், துணை மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள், ஒன்றிய, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மற்றும் சார்பு அணி மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் மாவட்ட, மாநகரக் கழக நிர்வாகிகள், தலைவரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் நன்றியுடன்,
சண்.இராமநாதன்
தஞ்சை மாநகரக் கழகச் செயலாளர்.
இன்று (16.04.2026) தஞ்சை காமராஜர் காய்கறி சந்தையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன்.
அதிகாலையிலேயே சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும் இந்த மார்க்கெட்டில், சிறு வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் காய்கறி வாங்க வந்திருந்த தாய்மார்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினேன்.
அன்றாடம் வியர்வை சிந்தி உழைக்கும் பாட்டாளி மக்களின் உண்மையான தோழனாக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை அவர்களிடம் உரிமையோடு எடுத்துரைத்தேன்.
காய்கறி வியாபாரிகளும் தொழிலாளர்களும், உதயசூரியன் சின்னத்திற்குத் தங்கள் முழுமையான ஆதரவை அளிப்பதாக உறுதியளித்தனர்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #stalinwave2026 #sunramanathan
#sunforthanjai
இன்று (15.04.2026) காலை மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் La Orchid-ல் நடைபெற்ற 'BNI Desire' அமைப்பின் கூட்டத்தில் பெருமகிழ்ச்சியோடு கலந்துகொண்டேன்.
அங்கு வருகைதந்திருந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகப் பெருமக்களை நேரில் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு திரட்டினேன்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, தொழில் தொடங்குவதற்கான மிகச்சிறந்த கட்டமைப்பு வசதிகளை நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.
வணிக வளர்ச்சிக்கும், புதிய வேலைவாய்ப்புகளுக்கும் நாம் தொடர்ந்து வழங்கி வரும் முன்னுரிமையை அவர்களிடம் எடுத்துரைத்தேன்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #stalinwave2026 #sunramanathan
தஞ்சை மாநகராட்சியின் மேயராக நாம் பொறுப்பு வகித்த காலத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் @mkstalin
அவர்களின் வழிகாட்டுதலில், 'திராவிட மாடல்' அரசின் பல முத்தான திட்டங்களை நமது தஞ்சை மக்களுக்காகச் செயல்படுத்தியுள்ளோம்.
அதில் மருத்துவத் துறையில் நாம் செய்த சில முக்கிய முன்னெடுப்புகள் இவை.
மாமன்றத்தில் மக்கள் பணியாற்றியது போல், சட்டமன்றத்திலும் தஞ்சையின் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை இன்னும் பல மடங்கு உயர்த்துவோம்.
'மிளிரும் தஞ்சை' மென்மேலும் செழிக்க, வரவிருக்கும் தேர்தலில் 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து ஆதரியுங்கள்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #stalinwave2026 #sunramanathan
தஞ்சை மேயராக நான் ஆற்றிய மக்கள் பணிகளில் எனக்குப் பெரும் மனநிறைவைத் தரும் விஷயம் நமது ஆரம்ப சுகாதார மையங்களின் தரம் உயர்ந்தது தான்.
நமது திராவிட மாடல் அரசின் சிறப்பான செயல்பாட்டால், கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார மையம் தொடர்ந்து 3-வது முறையாகச் சிறந்த மையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அங்கு 1274 கர்ப்பிணிகளுக்கு 100 சதவீத வெற்றியுடன் பாதுகாப்பான முறையில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நேரில் அழைத்து கௌரவித்துள்ளோம்.
இந்த மக்கள் பணி சட்டமன்றத்திலும் இன்னும் சிறப்பாகத் தொடர்ந்திட, உங்கள் பொன்னான வாக்குகளை 'உதயசூரியன்' சின்னத்திற்கு அளியுங்கள்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #stalinwave2026 #sunramanathan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களைப் பின்பற்றி, உழைப்பு உழைப்பு உழைப்பு என்ற கொள்கையோடு, தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக முதல் 100 நாட்களை கடந்துள்ளேன். எனது பணிகள் பற்றிய நிறைகள், குறைகள் மற்றும் கோரிக்கைகளை இதில் பதிவிடவும்.
https://t.co/PX3pQkOyNx
இன்று (15.04.2026) தஞ்சை பழைய பேருந்து நிலையப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன்.
நமது தொழிலாளர் முன்னேற்ற சங்க (தொமுச) நிர்வாகிகளுடன் இணைந்து, அங்குள்ள சிறு வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பயணிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினேன்.
அன்றாடம் உழைக்கும் சிறு குறு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் காக்கும் அரணாக நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதை அவர்களிடம் எடுத்துரைத்தேன்.
வியாபாரிகள் காட்டிய இன்முகமும், அவர்கள் உரிமையோடு அளித்த வரவேற்பும் நமது வெற்றிப் பயணத்திற்கு பெரும் ஊக்கமளிக்கிறது.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #stalinwave2026 #sunramanathan
கழகத் தலைவர் அவர்களின் அறிக்கைக்கிணங்க “Delimitation என்ற பெயரில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கிடும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரவுள்ள கருப்புச் சட்டத்துக்கு எதிராக நாளை (16.4.2026) தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் – பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்துவோம்.
- தலைமைக் கழகம் அறிவிப்பு
“Delimitation என்ற பெயரில், தனது லிமிட்டைத் தாண்டி, பா.ஜ.க. அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது! நாளை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில், தமிழ்நாட்டில் அனைவரும் நம்முடைய வீட்டில் கருப்புக் கொடியை ஏற்றுவோம். கருப்புச் சட்டத்தை எதிர்த்து நம் எதிர்ப்பின் அடையாளமாக, கருப்புக் கொடியை ஏற்றுவோம். இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துக் கொண்டு போகும், எதேச்சதிகார பா.ஜ.க. அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றுவோம்.” என மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கிணங்க;
அனைத்து கழக மாவட்டங்களிலும் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை என பட்டித்தொட்டி கிராமம் முதல் மாநகரங்களில் உள்ள அனைத்து இல்லங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் நாளை (16.4.2026) இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துக் கொண்டு போகும், எதேச்சதிகார பா.ஜ.க. அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
வெல்வோம் ஒன்றாக!
#TNwillFightTNwillWin
பாஜகவும், அதிமுகவும் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பதற்காக திட்டம் போடுகிறார்கள். தமிழ் மண்ணின் மாநில உரிமைகளை நாங்கள் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#VoteForDMK
தென்னிந்தியர்களுக்கு எதிராக ஏவப்பட்டுள்ள #Delimitation என்ற அநீதிக்கு எதிராக இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்பி, பத்மநாபபுரம்-கிள்ளியூர்-விளவங்கோடு-குளச்சல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள் தோழர் செல்லசாமி, சகோதரர்கள் ராஜேஷ் குமார், பிரவீன், சகோதரி @TharahaiC ஆகியோருக்கு ஆதரவாக இன்று மாலை வாக்கு சேகரித்தோம்.
நம் கல்வி-நிதி-அரசியல் உரிமைகளைத் தொடர்ந்து பறிக்கும் பாசிச பாஜகவையும் அவர்களை எதிர்க்க திராணி இல்லாத முரட்டு அடிமைகளையும் வரும் சட்டமன்றத் தேர்தலில் முற்றிலும் புறக்கணிக்க வேண்டுமென உரையாற்றினோம்.
தென்னிந்திய மக்களின் உரிமைகளை வெல்ல
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#DMK4TN #VoteForSPA #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை தஞ்சை மாநகர 39,40,41 ஆகிய வார்டுகளில் தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் அண்ணன்
திரு .துரை சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர்
திரு .ச.முரசொலி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு .டி.கே.ஜி.நீலமேகம் அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணன்
திரு .து.செல்வம் அவர்கள் கீழவாசல் பகுதி கழக செயலாளர் அவர்களோடு பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்குகள் சேகரித்தோம்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #stalinwave2026 #sunramanathan
தமிழ்நாட்டில் இருக்கும் மதநல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும். நம் மொழியை, மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.\
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#VoteForDMK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசின் சிறப்பான மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துத் தரப்பினரையும் வெகுவாக ஈர்த்துள்ளன.
அதன் விளைவாக, இன்று (13.04.2026) பல்வேறு மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
நமது கழகக் குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ள உடன்பிறப்புகள் அனைவரையும் வருக வருக என அன்போடு வரவேற்கிறேன்.
வெல்வோம் ஒன்றாக! 🖤❤️
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #stalinwave2026 #sunramanathan