எப்போதோ என்னை
மறந்துபோனவர்கள்
திடீரென ஒரு நாள் மாலை
எனக்கு ' மிஸ் யூ' என
செய்தி அனுப்புகிறார்கள்
அன்று அவர்களுக்கு
வேலைகள் சீக்கிரமே
முடிந்துவிட்டன போலும்
அன்று அவர்களை
யாரோ காயப்படுத்தியிருக்கக் கூடும்
அன்று அவர்கள்
பேச்சுத்துணையின்றி
சலிப்படைந்திருக்கக்கூடும்
அன்று அவர்கள்
எப்போதெல்லாம் இந்த உலகத்தைப் பார்க்க ஜன்னல் சீட் கிடைக்குதோ அப்போதெல்லாம் உடனே தூக்கம் வந்துவிடுகிறது. இப்படித்தான் இன்னமும் உலகம் தெரியாத பிள்ளையாக இருக்கிறேன்.
-ஆண்டன் பெனி