Content Team, NTK.. Belongs to Thamizh Race!
தமிழ் என்பது வெறும் மொழி அல்ல; அது ஒரு தேசிய இனம்! தமிழ் எனது அடையாளம்! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்த்தேசியம்!
இன்றோடு 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது, #வந்தான்_ஒருவன்_வந்தான். மார்ச் 7, 2021 - சென்னை ராயப்பேட்டையில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திரையிடப்பட்டது. பாட்டும் என்னால் எழுத முடியும் என என்னிலிருந்த இன்னொருவனைக் காட்டிய கன்னிப் பாடல். நிறைவாய் திரும்பிப் பார்க்கிறேன்.
தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும்,
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக,
ஆடி 25ஆம் நாள் (10.08.2025) காலை 10 மணியளவில்
சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம்! ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்து ஏமாற்றும் திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது; திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டில் அன்னைத்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும்!
மொழி என்பது நம் இனத்தின் உயிர் உரிமை; அதைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனின் பிறப்புரிமை!
@CMOTamilnadu | @mkstalin
தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும், தெய்வத்தமிழ் பேரவையும் இணைந்து திருச்செந்தூரில் முன்னெடுத்த அறப்போராட்ட பொதுக்கூட்டத்தினால் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியின் விளைவாக, தற்போது திருச்செந்தூர் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தமிழ்த்திருமுறைகள் முற்றோதல் நடைபெறும் என்றும், அதுதான் தமிழ் குடமுழுக்கு என்றும் ஏமாற்றும் வெற்று அறிவிப்பினை திமுக அரசு வெளியிட்டிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 'தமிழிலும்' குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது வெட்கக்கேடானது. குடமுழுக்கு முழுமையாக தமிழில் நடத்தப்பட வேண்டும். தாய்த்தமிழில் குடமுழுக்கு என்பது திமுக அரசு வேண்டா வெறுப்பாக இடும் பிச்சையோ, சலுகையோ அல்ல; திருச்செந்தூர் ஒன்றும் ஆந்திராவிலோ, கர்நாடாகவிலோ, கேரளாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இல்லை. நாங்கள் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலோ, சபரிமலை ஐயப்பன் கோவிலிலோ, மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலிலோ தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டில், தமிழ் முன்னோர்கள் கட்டிய தமிழர் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் திருக்கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பது மானத்தமிழினத்தின் வழிபாட்டு உரிமை. அதனை வழங்குவதில் அமைச்சருக்கு ஏன் இத்தனை சலிப்பு? இத்தனை வெறுப்பு? திமுக அரசு யாரும் கேட்காமல் முழுமையாக தமிழில் குடமுழுக்கு நடத்தும் என்றால் அதனை அறிவிப்பதில் இன்னும் ஏன் தாமதம்? நாங்கள் போராட்டம் நடத்தும்வரை அமைச்சர் சேகர்பாபு வாய் திறவாதாதது ஏன்?
திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோபுர கலசங்கள் நன்னீராட்டப்படும் போதும், வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் அறிஞர்கள், மெய்யன்பர்கள் மற்றும் தமிழ் மக்களின் கோரிக்கையும், விருப்பமுமாகும். குறைந்தபட்சம் சம்ஸ்கிருத்திற்கு இணையாக சரிபாதி வேள்விச்சாலைகள் அன்னைத்தமிழுக்கு வழங்கப்பட வேண்டும். கோபுர கலசங்கள் நன்னீராட்டின்போது கோபுர உச்சியிலும் தமிழ் மந்திரங்கள் ஒலிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாகும்.
அதனை விடுத்து, தமிழ் ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்துவிட்டு, அதனை தமிழில் குடமுழுக்கு நடத்தியதாக ஏமாற்றும் திமுக அரசின் வழக்கமான ஏமாற்று அறிவிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது.
தமிழ்நாடு அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் அன்னைத்தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பது உயர்நீதிமன்றமே தம்முடைய தீர்ப்பின் மூலம் உறுதி செய்துவிட்டது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் திமுக அரசிற்கு ஏன் இத்தனை தயக்கம்? ஏன் இத்தனை நடுக்கம்? தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று உதட்டளவில் உச்சரித்து தமிழரை ஏய்த்து கிடைத்த அதிகாரத்தை வைத்து பிழைக்கும் திமுக அரசு, தமிழர் உரிமையை காவு கொடுக்கும் இழிசெயலை எப்போது கைவிடப்போகிறது?
சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதி, ஆரிய வழிப்பாட்டு முறையில் கடைபிடிப்பதில் திமுக அரசிற்கு ஏன் இத்தனை ஆர்வம்? வடமொழி வழிபாட்டைக் கடைபிடிப்பதுதான் திராவிட மாடலா? இதுதான் தமிழ் மொழியை, தமிழ் பண்பாட்டை, தமிழர் உரிமையை திமுக அரசு காக்கும் முறையா?
2500 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் தமிழர் பண்பாட்டுத் தொன்மங்கள் கிடைத்துள்ளது பெருமை என்பதை ஏற்கும் திமுக அரசு, தமிழர் நிலத்தில் தமிழ்க் கடவுளுக்கு வடமொழியில் வழிபாடு நடந்துள்ளது என்பதை இன்னும் 1000 ஆண்டுகளுக்கு பின்வரும் தலைமுறை அறிந்தால் அது தமிழ் இனத்திற்கு அவமானமா? வெகுமானமா? தமிழர் வரலாற்று பெருமைக்கு அது மாபெரும் இழுக்கில்லையா? அதனை திமுக அரசு உணர மறுத்து வடமொழிக்கு வால் பிடிப்பதேன்?
ஆகவே, தாய்த்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கை! அதனை நிறைவேற்றும் வகையில், தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு குடமுழுக்கு நன்னீராட்டின் போதும், வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி தமிழில் குடமுழுக்கு நடந்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் திட்டமிட்டபடி நாம் தமிழர் கட்சி அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
@MeShankara@CinemaWithAB Blah, blah. You ppl dont have 'zha' syllable and say 'Katte' (Tamil-Origin Word) and we say "Kazhuthai".. The word Rice originates from the Thamizh word "arisi".. Lookout in Dictionary how many english words were originated from Thamizh and compare with Kannada (if there is any)
@MeShankara@CinemaWithAB First of all, it is not an apology letter, not even a vague one.. Cry Baby Cry.. 😂😂 But the fact remains that Kannada, Telugu, Malayalam, and Tulu were born out of Thamizh.. Thamizh is the mother of all mother tongues.. There are several evidences; go fetch.. Do some homework..
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் பரப்புரைக்குத் தடையை உருவாக்கினார்கள். தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை இருந்திருக்க வேண்டும் ஆனால் காவல்துறை கட்டுப்பாட்டில் தான் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இருந்தனர். சென்ற முறை அனுமதித்தது போல் எந்த ஒரு பரப்புரைக்கும் இந்த முறை அனுமதிக்கவில்லை. கூட்டம் போடுவதற்கான இடங்கள் எதுவென்று கடைசிவரை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. அனுமதி கேட்ட இடங்கள் எல்லாம் மறுக்கப்பட்டது. அதுவும் கடைசி நேரத்தில் மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டோம்.
ஒவ்வொரு நாள் கூட்டமும் கடைசி நொடி வரை சண்டை போட்டுதான் மேடை அமைத்தோம். கூட்டத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டு மேடை போடக்கூடாது என்று தடுத்தனர். பல கூட்டங்கள் தற்காலிக மேடையில் தான் நடந்தது. எந்தக் கூட்டமும் ஒழுங்கான நேரத்திற்குத் தொடங்கமுடியாதபடி பார்த்துக்கொண்டார்கள். கூட்டத்திற்கான நேரமும் வேண்டுமென்றே குறைக்கப்பட்டுத் தினமும் அதை மீறியதாக வழக்குப் போட்டார்கள். 8 நாள் பரப்புரைக்கு 8 வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது.
பரப்புரையின் நடுவே ஒரு நாள் சாலையின் நடுவே வாகன நெரிசலில் தலைமை ஊடக வாகனமும் ஒரு டாடா ஏஸ் வாகனமும் நகர்வத்தில் வந்த சிக்கலில் தலைமை அலுவலகப் பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுத் திட்டமிட்டுத் தலைமை அலுவலகப் பரப்புரை வாகனம் (டெம்போ) சிறைபிடிக்கப்பட்டது . வழக்கு கொடுத்தவர் வாபஸ் வாங்கிய பின்னரும் ஒரு நாள் முழுக்க அலைக்கழிக்கப்பட்டுத் தலைமை அலுவலகப் பணியாளர்களை 15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டுத் தேவையில்லாமல் பரப்புரை வாகனமும் வழக்கில் சேர்க்கப்பட்டு முழுவதுமாக முடக்கப்பட்டது. உயர் அதிகாரிகளிடமிருந்து வந்த உத்தரவின் பெயரில் காவல்துறையின் நோக்கம் பரப்புரை வாகனத்தை முடக்குவதில் தான் இருந்தது .
சென்ற முறை பட்டியில் அடைந்ததைப் போல் இந்த முறை திமுகப் புதுவிதமாக மக்களை மந்தையாக மாற்றித் தெருத்தெருவாக நடக்கவிட்டுப் பணம் தந்தது. அப்படி கூட்டம் கூட்டமாக நடக்கும் மக்களிடம் கொடியோ சின்னமோ இல்லை. காரணம் எந்தவித அனுமதியும் இல்லாது அதைத் திமுக மேற்கொண்டது. அப்படி நடந்த மக்களை வேண்டுமென்றே நாம் தமிழர் கட்சி கூட்டம் நடக்கும் இடங்களில் அனுமதித்துச் சிக்கலை உருவாக்கியது. அப்படி நடந்து சென்றவர்களில் குழந்தைகள் இருந்தனர் அதையும் படம் எடுத்துப் புகார் அளித்தோம் . அதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.
சென்ற முறை அனுமதித்ததைப் போல அண்ணனின் வாகன பரப்புரைக்கு இந்த முறை அனுமதி மறுக்கப்பட்டது. கடைசிக் கட்ட பரப்புரைக்காவது அனுமதிக்க வேண்டும் என்று சண்டையிட்ட பின் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் பகல் நேரத்தில் அனுமதித்தனர். கடைசி நாள் பரப்புரை 6 மணி வரை என்று தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னரும் 5 மணி வரை மட்டுமே அனுமதித்து அதற்குப் பின்னரும் பேசியதாக மேலும் ஒரு வழக்கை போட்டனர் .
பகலில் பரப்புரை செல்லும் பொழுது கண்கூடாகப் பார்க்கும் படியாக இருந்தது திமுகவினரின் பணப்பட்டுவாடா. கூட்டம் நடக்கும் 100 அடிக்கு அருகிலயே பணம் விநியோகித்தனர். கூட்டத்தை வளைத்து வளைத்து வீடியோ எடுத்த தேர்தல் ஆணையத்தினரும் காவல்துறையினரும் அந்தத் திசை பக்கம் திரும்பவேயில்லை. பலமுறை தேர்தல் பறக்கும்படை வாகனத்தை நிறுத்தி தெரிவித்தபின்னரும் அதிலிருந்த அதிகாரிகள் கடந்து சென்றனர். அனால் ஒருநாள் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்த பிறகும் மேடை அமைக்க மறுத்த பொழுது சாலை மறியலில் ஈடுபட்டு அதே வாகனத்தை மறித்ததற்காக நாம் தமிழர் கட்சி மீது வழக்குப் போட்டார்கள்.
பணம் கொடுப்பது ஊடகங்களில் வந்த செய்தி ஆதாரத்தோடு வாக்கு சாவடியை கைப்பற்றிக் கள்ள ஓட்டு போட திமுகத் திட்டமிடுகிறது எனவும் அதிகக் காவலுக்குத் துணை ராணுவமும் வாக்குசாவடியை கண்காணிக்க முழுக்க CCTV பொருத்தப்பட்டு அது மக்கள் பார்வைக்கு அளிக்கப்பட்டடவேண்டும் எனத் தேர்தல் நாளுக்கு முதல் நாள் தமிழ்நாடு தலைமை தேர்தல் அகிகாரியை சந்தித்துப் புகார் அளித்தது நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை. உடனடியாகத் தலைமை தேர்தல் அதிகாரி தமிழக டிஜிபிக்கு உத்தரவாகப் பிறப்பித்தார் . ஆனால் எதுவும் நடைமுறைப்படத்தப்படாமல் திமுக நினைத்ததை நிறைவேற்றியது ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் கள்ளஓட்டுப் போடப்பட்டது . ஊடகங்களில் ஆதாரத்தோடு செய்தியாக வந்தது . மாலை 5 மணி அளவில் வீரப்பன்சாவடி வாக்ககத்தில் 40 ஓட்டுக்கள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் வெறும் பூத் ஸ்லிப் வைத்துப் பதியப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டு சென்று தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டோம். அங்கே இருந்த திமுகக் குண்டர்கள் நாம் தமிழர் கட்சினரை சூழ்ந்து கொண்டு கோஷமிட்டு தாக்க முயன்றனர். நாம் தமிழர் கட்சியினரை அந்த இடத்தை விட்டு நகர்த்த முயற்சித்த காவல்துறை அவர்களிடம் எந்தக் கடுமையும் காட்டவில்லை. கள்ள ஒட்டு போட்டது மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சியினர் கள்ள ஒட்டு போட முயன்றனர் என்று கூசாமல் பொய் சொல்லி பேட்டி கொடுக்கும் வரை காவல்துறை அனுமதித்தது. நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த இருவரை கைது செய்து அழைத்துச் சென்றனர் ஆனால் அவர்களைப் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்ததனர்.
இத்தனை அடக்குமுறையையும் மீறி நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலை விட 123% அதிக வாக்குகளைப் பெற்று முன்னேறியிருக்கிறது. இது சீமான் அண்ணனின் அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டதற்கான அறிகுறி, நாம் தமிழர் வெற்றிக்கான அடித்தளம்.
கல்லூரிகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 7300க்கும் மேலான கௌர விரிவுரையாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி நடத்தி வரும் தொடர் அறப்போராட்டம் மிக நியாயமானது. அதனை முழுமையாக நாம் தமிழர் கட்சி ஆதரிக்கிறது.
கௌரவ விரிவுரையாளர்கள் எனப் பெயரளவில் கூறப்பட்டாலும் தற்காலிகப் பணியாளர்கள் என்பதால் மிகவும் இழிவான நிலையிலேயே அவர்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். தங்களது கல்வித்தகுதிக்கேற்ற ஊதியம் கிடைக்காவிட்டாலும், என்றாவது ஒருநாள் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் எனும் பெரும் நம்பிக்கையிலேயே அவர்கள் சொற்ப ஊதியத்திற்கு இப்போதுவரை பணியாற்றி வருகின்றனர். அதுவும் மே மாதம் விடுத்து, 11 மாதங்களுக்கே அவர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும், துறைத்தலைவர்கள் இல்லாத பல கல்லூரிகளில் இவர்கள்தான் தூணாக நின்று தாங்கிப் பிடித்து, இலட்சக்கணக்கானப் பட்டதாரிகளை உருவாக்கி வருகின்றனர்.
பல்கலைக்கழக மானியக்குழு கௌர விரிவுரையாளர்களுக்கு 57,500 ரூபாய் மாத ஊதியம் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. அதனை சென்னை, உயர் நீதிமன்றத் தீர்ப்பும் உறுதிசெய்திருக்கிறது. இருந்தும், அம்முடிவு இன்னும் செயலாக்கம் செய்யப்படவில்லை. ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பது முதுமொழி. ஆனால், இங்கு கற்பிக்கும் ஆசிரியப்பெருந்தகைகளுக்கே மதிப்பில்லை என்பதுதான் புறச்சூழலாகும். பல ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் கோரிப் போராடி வரும் இவர்களுக்குப் பணிப்பாதுகாப்பு செய்யப்படாது, தற்காலிகப்பணி என்பதுதான் நிரந்தரமாக ஆக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அறிவுக்கருவறையாகத் திகழ்பவைக் கல்விக்கூடங்கள். அதனையுணர்ந்தே, மேலை நாடுகளில் ஆசிரியர்களைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இங்கு ஆசிரியப் பெருமக்களே தங்களது வாழ்வாதாரத்துக்காகப் போராட வேண்டிய மோசமான நிலையிருப்பது வெட்கக்கேடானதாகும்.
ஆகவே, தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு தீர்மானித்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், அவர்களது பணியினை நிரந்தரம் செய்ய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக திமுக அரசுக்கு வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இன்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில் நெறியாளர் உட்பட அனைத்து பங்களிப்பாளர்களும் இதுவரை நாம் தமிழர் அல்லது சீமான் என்று உச்சரிக்காமல் இருந்து வாய்கள் இன்று பலமுறை உச்சரிக்க வைத்த எங்கள் அண்ணன் #சீமான் வாழ்க..!
#பிரபாகரகன்_வாழ்க#அண்ணன்_சீமான்_வெல்க
"Appa, will you be at home for my birthday?" My eldest son Maruthan had been asking me this question repeatedly for a month while I was working in Hyderabad. Each time, I replied, "I’ll try Maruthan". Unfortunately, I couldn’t make it.
It is his 12th birthday. I called him to wish him at midnight, just as I was boarding a flight from Mumbai to Hyderabad. I sensed a hint of sadness in his voice.
To console him, I said, "Don’t worry, every day is like a birthday for us if we choose to celebrate it that way. Get some rest and go to school in the morning."
"Okay, Pa," he replied with a smile.
Now I'm in the final phase of #Game_Changer works @ Hyderabad. From here, I wish my son Maruthan a very happy and prosperous birthday! 😊❤️
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, வனவம்பட்டியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - ஓமன் செந்தமிழர் பாசறையின் சலாலா மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி அன்பழகன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து பெரும்பணியாற்றி வந்த அன்புத்தம்பியை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பி அன்பழகன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி அன்பழகன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!
நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம், முசிறி, அய்யம்பாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி பா.செந்தமிழ் அவர்களின் தம்பியும், மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளருமான அன்புத்தம்பி பா.பாபு அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாசமிகு தம்பியை இழந்து வாடும் தம்பி செந்தமிழ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி பாபு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!