அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாமக சார்பில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் K.N.சேகர் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும், அதிமுக வேட்பாளர்கள் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி பென்ஜமின், மாதவரம் சட்டமன்றத் தொகுதி V.மூர்த்தி, திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி P.V.ரமணா, பொன்னேரி சட்டமன்றத் தொகுதி P.பலராமன், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி V.சுதாகர் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்திலும், ஆவடி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசிம்மன் மகேந்திரா அவர்களுக்கு தாமரை சின்னத்திலும், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் T.A.ஏழுமலை அவர்களுக்கு பிரஷர் குக்கர் சின்னத்திலும் ஆதரித்து சென்னையில் தேர்தல் பரப்புரை செய்த போது.!
#election2026 | #PMK | #NDA
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு அவர்களை ஆதரித்து, திருப்போரூரில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பரப்புரை செய்த போது.!
#election2026 | #PMK | #NDA
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல... காமெடியன்: 63 வாக்குறுதிகள் மீண்டும் இடம் பெற்றது தோல்வியின் அடையாளம்!
2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தத் திட்டமும் இல்லை; மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் திமுக தேர்தல் அறிக்கை என்பது இந்தத் தேர்தலின் கதாநாயகனும் அல்ல... கதாநாயகியும் அல்ல. மாறாக வில்லனாகவும், காமெடியனாகவும் தான் உள்ளது.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை அளித்த திமுக, அவற்றில் வெறும் 66-&-ஐ மட்டும் தான் நிறைவேற்றியது, 439 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியிருந்தேன். இப்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 517 வாக்குறுதிகளில் 63 வாக்குறுதிகள் முந்தைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தவை தான். அவற்றுக்கு வேறு நாமகரணங்களைச் சூட்டி புதிய வாக்குறுதிகளைக் காட்டி மோசடி செய்ய திமுக முயன்றிருக்கிறது. இது தோல்வியின் அடையாளம்.
2021-&ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் இடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியது. ஆனால், இப்போது ஒன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாகுமாம்; அப்போது அந்த இடங்கள் உடனடியாக நிரப்பப்படுமாம். ஏற்கனவே காலியாக உள்ள 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பத் துப்பில்லாத திமுகவுக்கு இப்படி ஒரு வாக்குறுதி அளிக்க எந்தத் தகுதியும் இல்லை.
தனியார் துறைகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்; தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அத்தகைய சட்டத்தையும் நிறைவேற்றவில்லை; 50 லட்சம் பேருக்கு வேலையும் வழங்கவில்லை. ஆனால், இப்போது 50 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்படும் என்ற பழைய வாக்குறுதியையே மீண்டும் அளித்து ஏமாற்ற முயல்கிறது திமுக. இத்தகைய மோசடிகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கானது என்று வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றித் தான் கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், நீட் தேர்வை ரத்தும் செய்யாமல், தமிழ்நாட்டிற்கு விலக்கும் பெறாததால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், கொஞ்சம் கூட தோல்வி உணர்வும், குற்ற உணர்வும் இல்லாமல், நீட் என்ற பெயரை மட்டும் தவிர்த்து விட்டு, மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம் (வாக்குறுதி எண் 1 (9)) என்று வாக்குறுதி அளித்திருக்கிறது திமுக.
அதேபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம் என்ற வாக்குறுதியை கடந்த 50 ஆண்டுகளில் 20-ஆம் முறையாக திமுக அளித்திருக்கிறது. 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அதற்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாகவும், கட்டாய பயிற்றுமொழியாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு வக்கில்லாத திமுக, தமிழையும், எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள பிற 21 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக்கப் போவதாக அறிவித்திருப்பது வெட்கக்கேடான நகைச்சுவையாகும்.
தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி 125 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என்பதை தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்திருக்கிறது. உண்மையில் கடந்த 2023-24ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியை 125 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அப்போதைய வேளாண் துறை இயக்குனரும், இப்போதைய வேளாண் துறை செயலாளருமான தட்சிணாமூர்த்தி அறிவித்திருந்தார். அதன்பிறகு மூன்று ஆண்டுகளாகியும் அந்த இலக்கை எட்ட முடியாத திமுக அரசு, இப்போது அடுத்த ஐந்தாண்டுகளில் எட்டுவதற்கான வாக்குறுதியாக அந்த இலக்கை அறிவித்திருப்பது தோல்வியின் வாக்குமூலம் ஆகும்.
எந்த வகையில் பார்த்தாலும் திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு பயனளிக்கக் கூடியதோ, வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடியதோ அல்ல. ஏற்கனவே 505 வாக்குறுதிகளை அளித்து அவற்றில் 87% வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்த திமுகவின் வாக்குறுத்க்களை மக்கள் நம்ப மாட்டார்கள். வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் உறுதி பூண்டிருப்பதால் அதன் தேர்தல் அறிக்கை யாருக்கும் பயன்படாத ஆணி தான். @CMOTamilnadu
அதிமுக தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!
#election2026#PMK#ADMK#NDA
இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுக தான்: புதிய தேர்தல் அறிக்கை வெளியிடத் தேவையில்லை - நிறைவேற்றாதாத 439 வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிடலாம்!
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக மீண்டும் ஒரு பொய்மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது.
தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றி விட்டோம், 99% நிறைவேற்றி விட்டோம், 90% நிறைவேற்றி விட்டோம், 85% நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவரது அமைச்சரவை சகாக்களும் வாய்க்கு வந்தபடி பொய்களைக் கூறி வந்தார்கள். இந்த மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டும் தான் திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது. 66 வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றி விட்டு, 373 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பட்டியலிட்டு, விடியல் எங்கே? என்ற தலைப்பிலான ஆவணத்தைத் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26&ஆம் தேதி சென்னையில் வெளியிட்டேன்.
அதன்பின், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் எண்ணிக்கையை 80% ஆகவும், 75% ஆகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைத்துக் கொண்டார். ஆனால், இப்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி 100% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. கடந்த கால நாடகங்களைப் போலவே இந்த நாடகங்களும் எடுபடாது.
திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றால்....
1. சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட்டு விட்டதா?
2. டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டு விட்டதா?
3. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்பட்டு விட்டதா?
4. ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலையும், 50 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலையும் வழங்கப்பட்டு விட்டதா?
5. மாதந்தோறும் மின்பயன்பாடு கணக்கிடப்பட்டு, ஆண்டுக்கு ரூ.6000 அளவுக்கு மின்கட்டணம் குறைக்கப்பட்டு விட்டதா?
6. பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்பட்டு விட்டனவா?
7.இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் நடைமுறைக்கு வந்து விட்டதா?
8. அரசுத் துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களும், பகுதிநேர ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்பட்டு விட்டார்களா?
9. ஊரக வேலைத் திட்டத்தின் வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டு விட்டதா?
10. மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்களா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலேயே, ஏன் இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே மிகவும் மோசடியாக கட்சி என்றால் அது திமுக தான். 13 % மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 100% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன என்று கூறுவதன் மூலம் இதை திமுக மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டது.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 439 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக, இந்தத் தேர்தலுக்கு புதிதாக தேர்தல் அறிக்கையை வெளியிடத் தேவையில்லை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விடலாம். திமுக முழுமையாக நிறைவேற்றாத 439 வாக்குறுதிகளின் பட்டியலை நான் வெளியிட்ட விடியல் எங்கே? என்ற தலைப்பிலான ஆவணத்தைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களது வீட்டில் உள்ள பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க நீங்கள் விரும்பினால் கூ.தி. மு. க வுக்கு ஓட்டு போடாதீர்கள் யாரும் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தை சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.
#DMKFailsWomen#WomenWilEndDMKRule
தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து,
தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி,
மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில்,
பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும்,
பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும்
போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம்.
“தமிழகம் வாழ வேண்டும் என்றால்
திமுக வீழ வேண்டும்”
என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி!
நமது கூட்டணி ஒப்பந்தக் கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்களுக்கும், மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுக்கும், @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான திருமதி. @DrTamilisai4BJP அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் திரு. அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும்,
@ammkofficial பொதுச்செயலாளர் அன்பு சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும்,
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் திரு. @PaarivendharTR அவர்களுக்கும்
இத்தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும்.
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் கல்குவாரியில் இளைஞர் கொல்லப்பட்டாரா? விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்!
திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் உள்ள கல்குவாரி ஒன்றில், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சரளைப்பட்டி கல்குவாரியை திருவரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவரது மகன் விஜயபாரதி பெயரில் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞரை கடந்த 10 நாள்களாக காணவில்லை.
கருப்பசாமி காணமல் போன சில நாள்களிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் அவரது உறவினர்கள் கல் குவாரிக்கு சென்று விசாரித்த போது, அங்கு அவர் வரவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அவரது உடல் அங்கிருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் சாகசங்கள் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அறிந்தவை தான். கரூர் பகுதியில் அவருக்கு சொந்தமான குவாரியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தொலைகாட்சி செய்தியாளர்கள் குழுவை அவர் கடத்திச் சென்று தாக்கியதும், அந்த வழக்கில் அவர் கைது செய்யப்படாமல் இன்று வரை சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருப்பதையும் நாடே அறியும்.
எனவே, சரளைப்பட்டி கல்குவாரியில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டாரா? அதன் பின்னணியில் வேறு சதித் திட்டங்கள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.@CMOTamilnadu
இன்றைய தினம், சிவகங்கையில் நடைபெற்ற @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் திரு ராஜேஷ் அவர்கள் மீதே திமுகவின் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் என்ற நபரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இனி ஆட்சிக்கே வர முடியாது என்பது தெரிந்ததும் திமுகவினர் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் நிரம்பியுள்ள மூன்றாம் தர ரவுடிகளால், ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது, அப்பாவி பொதுமக்கள் நிலை என்ன?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தெருத்தெருவாக, ஒவ்வொரு கடையிலும் ஏறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்ததை, திமுகவின் தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக மக்கள் இனியும் மன்னிப்பதாக இல்லை.
Tamil Just Now News | 2 பிஞ்சுகள் உயிரிழப்பு
நாமக்கல் அருகே நூற்பாலைக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயில், அங்கு பணியாற்றிய ஒடிசா தம்பதியின் 2 மகன்களான ரோஷன் குமார், ஹரிசங்கர் சடலமாக மீட்பு
திடீரென மாயமான சிறுவர்கள் கழிவுநீர் கால்வாயில் சடலமாக மிதந்ததை கண்டு பெற்றோர் கதறல்
Namakkal | TN Police
#Namakkal | #TNPolice #Tamilnews #NewsTamil24x7
@mkstalin தமிழ் புத்தாண்டுக்கு வியாக்கியானம் பேசும் நீங்கள், யுகாதி வாழ்த்துக்கு மட்டும் மட்டற்ற மகிழ்ச்சி..அதில் சமஸ்கிருதம் இல்லையோ.
இது தமிழ்நாடு.. தெலுங்கு நாடோ, திராவிட நாடோ அல்ல..