ஜப்பானில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விடா முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் எடுத்த��க்காட்டாக திகழ்ந்து தொடர் வெற்றிகளின் மூலம் தனது முத்திரைகளை பதித்துக் கொண்டிருக்கும் மாரியப்பன் தங்கவேலு அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளிலும் வெற்றிபெற்று விளையாட்டு உலகில் புதிய உச்சத்தை அடைய எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிலர்(செபாஸ்டியன் co)சொன்னார்களே #மக்கள்_செல்வர் என்று நீங்களே போட்டுகொண்டீர்கள் என்று.
அதற்கு இந்த கல்வெட்டு ஒரு உதாரணம். மக்கள் செல்வர் என்ற பெயரை ��ேனி மக்கள் 2003 ல் கொடுத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று.
நல்லா கண்ணில் எண்ணை ஊற்றி பாரு அடேய் மஞ்சபொடி @Saattaidurai
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது - போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்காக 3,200 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிப்காட் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகள் நிலமற்றவர்கள் எனவும், வெளியூர்களைச்சேர்ந்தவர்கள் எனவும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் சட்டமன்றத்தில் பேசியிருப்பது ஒட்டும���த்த விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சரின் உண்மைக்கு மாறான கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி திருவண்ணாமலை மேல்மா கூட்டுச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் 43-வது வாக்குறுதியான விவசாயிகளின் ஒப்புதல் இல்லாம��் விளைநிலங்களை வேறுபயன்பாட்டிற்கு மாற்றுவது தடுக்கப்படும் என கூறிய திமுக அரசின் முதலமைச்சர், கோரிக்கை மனுக்களை வழங்க வரும் விவசாயிகளைச் சந்திக்க மறுத்த��� காவல்துறை மூலம் கைது செய்திருப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும்.
எனவே, விளைநிலங்களைப் பறித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பதோடு, சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களின் உண்மைக்கு மாறான கருத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ�� முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
பளார்ன்னு தமிழர்களின் கன்னத்தில் அறைந்துள்ளார்கள் இந்த பெண்மணி!எவ்வளவு உண்மையும்,அர்த்தமும் பொதிந்த பேச்சு!நாம் சீதா,இராமர்,லட்சுமணன்,பரதன் என்று ஆண்களுக்கு பெயர் வைக்கிறோம்! வடக்கே ��ாராவது முருகன், ஐயப்பன், வள்ளி, ராஜாஜி,காமராஜ், பெயர் வைப்பதுண்டா?
இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் ஆங்கிலேயரை வீழ்த்தி சிவகங்கை கோட்டையை கைப்பற்றிய ஒரே பெண் அரசியான வேலுநாச்சியாரின் பிறந்த தினம் இன்று.
இளம் வயதில் மட்டுமல்ல தான் இறக்கும் வயதிலும் பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாத அளவிற்கு யாருக்கும் அஞ்சாத துணிவும் தைரியமும் நிறைந்த வீரத் தமிழச்சி வேலுநாச்சியாரை போற்றி மகிழ்வோம்.
பாசனத்திற்கு தண்ணீர் தர மறுப்பது விவசாயிகளுக்கு தமிழக அரசு இழைக்கும் அநீதி!
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வைகை அணையில் இருந்து உடனடியாக தண்ணீரை திறக்க வேண்டும்.
@CMOTamilnadu
அப்துல் கலாம் அவர்கள் பசும்பொன் வந்திருந்தபோது!!
அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதி ஆனதும் ஒருமுறை அவர் ராமேஸ்வரம் செல்லும் போது பசும்பொன்னுக்கு ரகசியமாக வந்து விட்டு கையெடுத்து கும்பிட்டு விட்டு சென்றாராம். அப்போது ஒரு பாதுகாப்பு அதிகாரி "நீங்கள் ஏன் ரகசியமா வரணும் என்று" கேட்டாராம். கலாம் அவர்கள் சிரித்துக்கொண்டே எனக்கு ஐயாவின் தேசபக்தி பிடிக்கும். ஓட்டு பக்தி இருந்தால் தானே நான் விளம்பரபடுத்தனும், அதுதவிர பசும்பொன்னுக்கு நான் வந்தது தெரிந்தால் மாற்று சமூக மக்கள் தங்கள் தலைவரின் நினைவிடத்துக்கு ஏன் வரவில்லை என்று கேட்பார்கள்... ஆனால் எல்லோரும் தேவர் போன்ற மகான் ஆகிவிடமுடியும்? என்று சொன்னாராம்!!
Book: https://t.co/AlVmuYyXp4
#medaimani
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு, இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மாபெரும் தியாகி பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை விழா இன்று.
சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழக்கம், விவசாயிகளுக்க���கவும் தொழிலாளர்களுக்காகவும் பல்வேறு போராட்டங்கள் என தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்ற சமூக சீர்திருத்தவாதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வழியில் எந்நாளும் பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ��ெய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் ஒருபுறமும் அந்நாட்டு கடற்கொள்ளையர்கள் மறுபுறமும் தொடர் தாக்குதல் நடத்தி படகுகளையும் உடமைகளையும் பறிமுதல் செய்து வருவதால் தமிழ்நாட்��ு மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
மீனவர்கள் கைது விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நிகழாத வண்ணம் நிரந்தர முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu @PMOIndia
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியி��் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை 2 ஆம் ஆண்டு படித்துவந்த மாணவி, கல்லூரி வளாக விடுதியிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உயிரிழந்த மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திரு���்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, மருத்துவ மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ��ல்லூரிகளில் மாணவிகள் சுதந்திரமான முறையில் கல்வி பயில ஏதுவான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். @CMOTamilnadu
தினகரன் ஒரு ஆளே இல்ல அமமுக ல யாருமே இல்லனு கதறிய எடப்ஆடி திமுக வினர் இந்த படத்த பாருங்கடா....
கொட்டும் மழையில் கொடி பிடிச்சு நிக்கிறாங்க காசு கொடுத்து கூட்டிவந்தா இப்டியா மழைல நிப்பாங்க இது உண்மையான தொண்டர்கள்....
துரோகியை ஓட விடும் படை...
@TTVDhinakaran