இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @actorvijay அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது இனியவாழ்த்துகள்.
#HBDCMJosephVijay
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டம் இன்று நடைபெற்றது. சூம் இணையவழியிலும் இக்கூட்டம் இணைக்கப்பெற்று மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தமிழகம் தழுவிய அளவில் பங்கேற்றார்கள்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து உரையாற்றினேன். நாடாளுமன்ற உறுப்பினர் விசிக பொதுச் செயலாளர் தோழர் இரவிக்குமார் அவர்கள் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட போவதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தின் சமகால அரசியல் சூழலையும், சமூகநீதி சார்ந்த எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவு முக்கியமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழக சட்டமன்றத்தில் சாதி ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அவரது குரல் வலிமையாக ஒலிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.
ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் மகத்தான வெற்றியடைய வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அண்ணன் அவர்களது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி. @thirumaofficial@VCKofficial_
@itisprashanth இப்படி பேசறது உங்க சாதி புத்தி தான் அடித்தட்டு மக்களை ஒரு வழி நடத்த சிறந்த தலைவர் அவர் இல்லை என்றால் நாங்கள் இல்லை ஒரு சிறந்த தலைவனை எப்படி பேசுவது உங்களுக்கு தெரியவில்லையா...
கண்ணீர் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் மூத்த தலைவர்
ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு தேனி மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ஐயாவிற்கு செம்மார்ந்த வீரவணக்கம் ....❤😭🙏