#JUSTIN || விசிகவின் மது ஒழிப்பு மாநாடு - சீமான் கேள்வி
"கூட்டணி வைக்கும் போது மது ஒழிப்பு குறித்து வலியுறுத்தினார்களா?"
"மதுவுக்கு எதிராக ஒரே அணி அமைத்து தேர்தலை சந்திப்போமா?"
"டாஸ்மாக்கில் விற்பனை குறைந்தால், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது"
"திருமாவளவன், யாருடன் கூட்டணியில் இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்" - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman | #Thirumavalavan | #NTK | #VCK | #ThanthiTV
விசிகவின் மதுவுக்கு எதிரான மாநாடு...
திருமாவளவனின் தேர்தல் கால நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளார் அண்ணன் சீமான்...
மதுவுக்கு ஆதரவாக(அதிமுக) இருப்பவனோடு சேர்ந்து போரடி என்ன பயன் இருக்கு..??
#seemanpressmeet#நாமநாதபுரத்தில்_அண்ணன்_சீமான்
ஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க,
அத்தை மகள் வடிவுடன் இன்னுயிரைத் தீயிக்கு இரையாக்கி,
இணையராகத் தற்கொடை தந்த உலகின் முதல் ஈகியர்!
தான் உயிரோடு இருந்த நாள் வரை
பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் கோட்டை வீழாமல் கண்ணின் இமைபோல காத்து நின்ற
தன்னிகரில்லா படைத்தளபதி!
தாயகம் காக்க விடுதலை நெருப்பாய்
வெடித்துச் சிதறிய மாவீரன்
சுந்தரலிங்கனாரின்
இணையில்லா வீரத்தையும்,
ஈடில்லா ஈகத்தையும்
போற்றுகின்ற இந்நாளில்
அவரைப்போலவே தன்மானத்தோடு நின்று
தாய்மண்ணைக் காப்போம் என்ற
உறுதியினை ஏற்போம்!
வீரமிகு நமது பாட்டனார் சுந்தரலிங்க குடும்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
இன விடுதலை எனும் ஈடு இணையற்ற இலட்சியப் பயணத்தில் தன்னையும், தன் குடும்பத்தையும் இணைத்துக் கொண்டு, அதற்காகவே தனது வாழ்வை ஒட்டுமொத்தமாக ஒப்படைத்துக் கொண்ட என் ஆருயிர் இளவல்!
நாம் தமிழர் எனும் பெரும் படையின் தொடக்க காலம் தொட்டு இன்றுவரை எத்தனை எத்தனை நெருக்கடிகள் வந்தபோதும், அத்தனையும் தோற்கடிக்க எம் தோளுக்குத் துணையாக நின்று, தமிழ் நிலத்தில் தமிழ்த்தேசிய அரசு மலர்ந்திட அல்லும் பகலும் அயராது சிந்தித்து, களப்பணியாற்றும் என் படைத்தளபதி!
பேச்சு, எழுத்து, களப்பணி, அறிவாற்றல், ஆளுமைத்திறன் என எல்லா தனித்திறன்களையும் ஒருங்கே திரட்டி, தமிழ்த்தேசிய இனத்தின் இருளகற்ற தன்னை மெழுகுவர்த்தியாய் உருக்கிக்கொண்ட என் உயிருக்கினியவன்!
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்
அன்புத்தம்பி சட்டத்தரணி மணிசெந்தில் அவர்களுக்கு அண்ணனின் அன்புநிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
@manisenthilntk
#NEWSUPDATES
“திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா?;
சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மட்டும் பணியிடமாற்றம் செய்து திமுக அரசு தண்டித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது”
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
#NTK | #Seeman | #NTKSeeman | #TNGovt | #MahaVishnu | #DMKGovt | #News7Tamil | #News7TamilUpdates
'மதச்சார்பற்ற அரசு' எனக் கூறினாலும், தமிழ்நாட்டு அரசின் முத்திரையில் இன்றுவரை திருவில்லிபுத்தூர் கோவில்தான் இருக்கிறது.
நாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவில்,மாநில அரசின் முத்திரையில் உள்ள திருவில்லிபுத்தூர் கோவில் அகற்றப்பட்டு, தமிழ் மறையோன் வள்ளுவப் பெருமகனாரது திருவுருவமும், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் குறள் மொழியும் பொறிக்கப்படும் என 2016ஆம் ஆண்டே கூறியவர் அண்ணன் சீமான் மட்டும்தான்!