என்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு.
தடையில்லா மின்சாரம் கொடுத்த ஸ்டாலின் வேண்டாம் மாற்றம் தான் வேணும், முதலமைச்சர் அழகா இருக்கணும், டான்ஸ் ஆட தெரியணும்னு, புள்ள சொல்லுச்சு பேர புள்ள சொல்லுச்சுனு ஓட்டு போட்டானுங்க..
கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும்னு இவனுகத்தானே சொன்னானுங்க... அதுக்குள்ள கரண்ட் வேணும்னு குதிச்சா எப்படி?
அதான் நல்லா வந்துகிட்டு இருந்த கரண்ட நிறுத்தி மாற்றத்த கொண்டு வந்துட்டானுங்களே இதுக்கு மேல என்ன வேணும்?
இப்ப முதலமைச்சர் திருப்பி வந்தா மட்டும் பதில் சொல்வாரா? அவருக்கு திமுகவ நோண்டுறதுக்கு மட்டும் தான் நேரம் இருக்கு.
இடைத்தேர்தல் நடக்கப் போற தொகுதிகள் மட்டும் நிக்காம கரண்ட் வருது.. தேர்தல் முடிஞ்சதும் அங்கேயும் இதேதான் நடக்கும் 🤣🤣
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
தலைவர் @mkstalin அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல!
அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், #MISA சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது!
சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது , ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு.
ஒரு ஜனநாயக விபத்தில் இன்று முதலமைச்சர் ஆன நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள் என்றென்றும் எட்ட முடியாத அரசியல் வரலாற்று பெருஞ்சிகரத்தை எட்டியதற்கான அடையாளம்தான் நம் தலைவரின் அந்தத் தழும்பு!
ஜனநாயகம் காக்கும் போராளியாக உறுதியுடன் நின்று, அடக்குமுறையில் பெற்ற காயத்தையே கேலி செய்வது அருவருப்பான அற்பத்தனம்!
சர்வாதிகாரத்தை எதிர்த்து தலைவர் பெற்ற காயங்களுக்கு வரலாறு விழுப்புண் என்று பெயர் சூட்டும்!
அந்தத் தழும்பு தலைவருக்கு அவமானமல்ல, பெருமிதம்.
தமிழ்நாட்டை காக்க அவர் சிந்திய இரத்தத்தின் அடையாளம்.
தியாக வரலாற்றை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு🔥
#ShameOnYouCM
“UGC WAPAS LO” என்பது முழுக்க முழுக்க சமூகநீதிக்கு எதிரான முழக்கம் என்பது தெரிந்தும் இந்த பதிவை வெளிப்படையாக நீங்கள் போடுவது உங்களது மனுவாத நிலைப்பாட்டை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது அல்லவா !
SC/ST/OBC மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சந்திக்கும் சாதிய பாகுபாட்டை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட UGC Equity Regulations-ஐ திரும்பப் பெறச் சொல்லும் முழக்கம் அது என்பது நன்கு தெரிந்தும் இப்படி ஒரு பதிவு. உங்கள் மனதில் எவ்வளவு சாதிய வன்மம் !
இன்று நாட்டின் பல பகுதிகளில் மனுவாத அமைப்புகள் கையில் எடுத்திருக்கும் இந்த முழக்கம் இனி காங்கிரஸின் முழக்கம் என்கிறீர்கள் அப்படித்தானே !
ஒருபக்கம் சாதிவாரிக் கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு, சமூகநீதி என்று பேசும் காங்கிரஸ்…
மறுபக்கம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், சமூகநீதிக்கான பாதுகாப்பையே பின்னோக்கித் தள்ளக் கோரும் போராட்டத்தின் “UGC WAPAS LO” முழக்கத்தை பெருமையுடன் தூக்கிப் பிடிக்கிறார்!
அமித்ஷாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சமூகநீதியையே எதிர்க்கும் முழக்கத்திற்குத் துணை போவீர்களா?
UGC விதிகளில் குறைகள் இருந்தால் திருத்தச் சொல்லுங்கள்.
பாதுகாப்புகளை மேலும் வலுப்படுத்தச் சொல்லுங்கள்.
ஆனால் “WAPAS LO” என்று யாருக்காகக் குரல் கொடுக்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு எதிரான மனுவாத அரசியலின் பக்கம் நிற்கிறதா?
மாணிக்கம் தாகூர் விளக்க வேண்டும்.
Social Justice cannot be selective.
He has not mentioned, and no reference was made against any particular woman by LOP Thiru. Udhayanidhi Stalin. These are cooked up false stories.
- Thiru.T.R.Baalu M.P Avl
பயந்தாங்கோலி அரசு. ரீல்ஸ் வெறி முத்திப்போய் உள்ள தவெக அரசின் அமைச்சர்களைக் கண்டித்துப் பேசினேன். அதற்காக இன்று நான் பேசாத ஒன்றை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் பண்ணி பொய் செய்தியை பரப்பி அதற்காக கைது செய்துள்ளார்கள்.
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
கருத்து சொன்னாலே பயந்து கைது செய்யும் இந்த அரசு.
பழனியில் மோசடி செய்தவன் மீது நடவடிக்கை எடுக்க தூ-- இல்லை. சாமானியன் மீது மட்டும் வழக்கு தொடர்ந்து கைது செய்யும் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்..
#Justice_For_Vinoth
நோட்டிஸ், எச்சரிக்கை, வழக்கு என எந்த சட்டவழிமுறையும் இல்லையா?
நேரடியாக கைது, நள்ளிரவு ரிமாண்டுதானா?
சாமானிய குடிமக்களை இப்படி நடத்துவதற்கு உண்மையில் தமிழ்நாடு காவல்துறை பெருமை கொள்கிறதா?
கடும் கண்டனங்கள் @chennaipolice_ .
த.வெ.க விஜய் ஆட்சியில் பழனி கோயில் நில ஊழல் - நடந்தது என்ன ?
நிலத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள், பதிவு செய்த அதிகாரிகள், தடுக்க தவறிய அதிகாரிகள் என இந்த குற்றத்தில் தொடர்புடைய யார் ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
ஆனால் இது குறித்து social media வில் பதிவிட்டவரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைக்கிறது பாசிச அரசு.
#TVKFails #HRCE #Corruption
பாலியல் குற்றச்சாட்டை மறைக்க பல முக்காடுகளை போட நினைத்து டயர் ஆய்வு செய்து அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் பாலியல் குற்றத்திற்கு துணைபோன ஸ்ரீவைகுண்டம் தவெக MLA
கடந்த 50 நாட்களாக தினமும் இரவில் மக்களை வாட்டி வதைக்கும் மின்வெட்டுத் துறை அமைச்சர், இதற்கு காரணம் சொல்கிறேன் என்ற பெயரில் ரீல்ஸ் அமைச்சரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வீக்கெண்ட்டுக்கு தன்னை அட்மிட் செய்ய எந்த பொய்யோடு வருகிறார் என்று பார்ப்போம்!
மாற்றம் மாற்றம் என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, கடைசியில் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றுவதுதான் த.வெ.க அரசின் சாதனையா? விடியல் இல்லாத தமிழ்நாடு உணர்ந்த சோபா மாடல் அரசு, பேருந்துகளில் விடியல் என்ற வார்த்தையை நீக்கி இருக்கிறது.
திட்டத்தின் பெயரை மாற்றினால் கொண்டு வந்தவரின் புகழ் மங்கிவிடும் என்று நினைக்கும் மங்குனி முதலமைச்சர் விஜய் அவர்களே சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடாது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தமிழ்நாட்டில் எந்தப் பேருந்தில் ஏறினாலும் பெண்களுக்கு இலவசம் என்று சொன்னீர்களே, அதை நிறைவேற்ற துப்பில்லை, வக்கில்லை ஆனால், முந்தைய ஆட்சியின் உழைப்புக்கு ஸ்டிக்கர் ஒட்டி, பெயர் பலகையை மாற்றுவதில் மட்டும் த.வெ.க அரசு படுவேகமாகச் செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்த விடியலை நீக்கியதன் அடையாளமாக, 'விடியல்' என்கிற வார்த்தையை திட்டங்களிலிருந்து நீக்கி வரும் தற்குறி #SofaModel அரசு.
தற்போதைய முதலமைச்சருக்கு, முதல்வர் என்றால் ஸ்டாலின் ஞாபகம் வரும், விடியல் என்றால் திமுக ஆட்சி ஞாபகம் வரும்.
எதற்கு இவ்வளவு insecurity ப்ரோ?
"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
பனகல் அரசர் குறித்த புத்தகமே முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.
சமூகநீதியின் அடித்தளமான வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக்காலத்தில் அவர் செய்த சாதனைகள்தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை!
நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்!
#PanagalRaja
கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் 07.07.2026 அன்று கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ. விசாரணை மேற்பார்வைக் குழுவிடம் அளித்த புகாருக்கு
மேற்பார்வைக் குழுவின் தலைவரான மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதிபதி திரு. அஜய் ரஸ்தோகி அவர்களின் அலுவலகம் “ விசாரணை மற்றும் உரிய நடவடிக்கைக்காக அப்புகார் சிபிஐ-க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக” பதில் தெரிவித்துள்ளது.
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ (CBI) விசாரணையை மேற்பார்வையிடுவதற்காக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் SLP (Crl.) எண் 16359/2025-இன் உத்தரவின்படி அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவிடம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் 07.07.2026 அன்று ஒரு புகாரை அளித்துள்ளார்.
அப்புகார் பரிசீலிக்கப்பட்டதாகவும், நியாயமான விசாரணை மற்றும் உரிய நடவடிக்கைக்காக அது சிபிஐ-க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்பார்வைக் குழுவின் தலைவரான மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதிபதி திரு. அஜய் ரஸ்தோகி அவர்களின் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?
சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார். 2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு. ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”