கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீதான குற்றச்சாட்டில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கருத்து..
என்னCPIM சண்முகம் என்ன சொல்ல வராரு எனக்கு புரியல.. இப்ப கட்சியில இந்த ஒரு நபர் தான் பிரச்சனையா இப்ப ஆட்சி பிரச்சனை இல்லையா 🤦🤦..
ஒரே நாள்ல 13 பேருக்கு
மேல படுகொலை நடந்துருக்கு அதுல ஒருத்தர் காவல்துறையை சேர்ந்த
துணை ஆய்வாளர்.
துணை சபாநாயகர் ஒருத்தனை அடிச்சு கீழ்த்தரமா பேசியிருக்கிறார் அந்த வீடியோ பொது வெளியில் வந்ததுக்கு அப்புறம் அவனை மிரட்டி அவர் முன்னாடி உட்கார வைத்து ஒரு வீடியோ பேச வைச்சிருக்காங்களே 😡😡. கட்சியே கிரிமினல் கட்சியா இருக்கு ஆட்சியே கிரிமினல் ஆட்சியா இருக்கு ஆனா ஒரு நபரை வெளியே எடு என்று பேசுகிறார் இவரெல்லாம் மனுஷனா 🤦🤦🤦
#SunNews | #TVK | #CPIM | #KallakurichiMLA
Watch | “உடனே கிரிமினல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இன்றைய தேதி வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? கெட்டப் பெயர் உங்களுக்குத்தான்”
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீதான குற்றச்சாட்டில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கருத்து
#SunNews | #TVK | #CPIM | #KallakurichiMLA
அதாவது அடுத்து தவெக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று 2025 நவம்பரிலேயே தெரிந்துகொண்டு, த்ரிஷா விஜய், விஜய் செல்வம், விஜய் பாலு, விஜய் ஆதித்தன் என்கிற பெயரில் கடந்த ஆட்சியிலேயே புத்தகங்களை எழுதி அச்ச்சிட்டு கொள்முதல் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிற போது உள்ளபடியே சிலிர்க்கிறது. 😌
பெரியார் அறிவுலகத்தைக் கட்டி நிர்மாணித்த திமுக ஆட்சியை விட்டு இறங்கிவிட்டது; தவெக அதற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் செய்த ஊழலைப்பாருங்கள்! ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் எவ்வளவு திட்டமிடல்கள்.
போலி பதிப்பகங்களை உருவாக்கி, அதில் chat gpt மூலம் பொருளற்ற, உள்ளீடற்ற புத்தகங்களை உருவாக்கி., ஒவ்வொரு புத்தகத்துக்கும் ரூ 1000-1500 வரை விலை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் நூல் ஆசிரியர் பெயருக்கு கூட பெரிதாக யோசிக்கவில்லை. திரிஷா விஜய் என்று ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கின்றனர்.
நீங்கள் கேட்ட மாற்றம் மிக மிக அற்புதமாகக் கிடைத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகோரே!
ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆசிரியர் அய்யா அவர்கள்...
திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த, பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா சிறப்பாக நிறைவடைந்ததும், ஆசிரியர் அய்யா அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்ற ஆசையில் அவரிடம் சென்றேன்.
அப்போது, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முதலில் சென்னையில் சந்தித்ததை அவராகவே நினைவுகூர்ந்தார்.
ஏற்கெனவே அவரது உரையைக் கேட்டு, 92 வயதிலும் இத்தனை தெளிவாகவும், ஆழமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் ஒருவரால் எப்படிப் பேச முடிகிறது என்று வியப்பில் ஆழ்ந்திருந்தேன்
பல லட்சம் மனிதர்களையும், பல்வேறு நிகழ்வுகளையும் கடந்து வந்திருக்கும் அவர், நம்முடைய அந்த ஒரு நிமிடச் சந்திப்பைக்கூட நினைவில் வைத்திருந்து நினைவுகூர்ந்தது என்னை மேலும் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
வயது என்பது வெறும் எண் என்பதை உணர்த்திய ஆசிரியர் @AsiriyarKV அய்யா அவர்களுக்கு என் அன்பும், மரியாதையும், நன்றியும்!
தனிப்பட்ட முறையில் வழக்குரைஞர் சென்னியப்பன் தோழர், நாத்திக பொன்முடி தோழர் ஆகியோருக்கு எனது நன்றிகள். மேலும், என்றென்றும் என்னை ஊக்குவிக்கும் அனைத்து திராவிடக் கழகத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்கள் மாயமானது தொடர்பாக இங்குள்ள சோப்ளாங்கி அரசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர்.
புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? ஒருவேளை மீனவர்கள் முன் கூட்டியே கடலுக்குச் சென்றிருந்தால், Wireless கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு, எப்படி தவறியது?
உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களின் உயிரோடு விளையாடும் அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ள இந்த ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமான இழப்பீட்டை அரசு தரப்பில் வழங்க வேண்டும்.
இது மாதிரியான துயரங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மிக முக்கியமாக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
@OGPrasanna ஏன்ப்பா பெரிய மனுசனா இருக்க, உன் கட்சிகாரனுக்கு பெண்களை எப்படி நாகரீகமா நடத்தனும் னு சொல்லிக் குடுக்கலையா? இப்போ பாரு நடிகை தானேனு எப்படி அசிங்கமா பேசிருக்கான் 🚶🏻♀️➡️🚶🏻♀️➡️
இவனை எப்போ கைது பண்ண போறீங்க சோப்ளாங்கி அங்கிள் 🤡
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன்.
தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்!
கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்!
உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது!
அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது…
#DMKForever #Udanpirappu @krithika_writes
தி.மு.க. ‘நமக்கு நாமே’ திட்டத்தை உருவாக்கியது!
த.வெ.க. ‘நமக்கு நாமே பாதுகாப்பு’ என்ற அவலநிலையை உருவாக்கியுள்ளது!
தமிழ்நாட்டுப் பெண்களே, தாய்மார்களே, சகோதரிகளே... குறிப்பாகப் பெண் குழந்தைகளே, எச்சரிக்கையாக இருங்கள்!
உதவி செய்வதாகக் கூறி அடையாளம் தெரியாத நபர்கள் உங்களை அணுகினால் நம்பிவிடாதீர்கள். குறிப்பாக, த.வெ.க.வினர் எனக் கூறிக்கொண்டு வருபவர்களிடம் கவனமாக இருங்கள். சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாகக் காவல்துறையை அணுகுங்கள்.
மாண்புமிகு கழகத் துணைப் பொதுச்செயலாளர் அக்கா @KanimozhiDMK M.P. அவர்கள் அறிவுறுத்தியதைப் போல, பெப்பர் ஸ்பிரே உள்ளிட்ட தற்காப்புப் பொருட்களையும் உடன் வைத்திருங்கள்.
1998-ல் மக்களே தங்கள் பகுதி வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கலைஞர் அவர்கள் 'நமக்கு நாமே' திட்டத்தைக் கொண்டுவந்தார். 2021-ல் கழகத் தலைவர் அவர்கள் அத்திட்டத்தை மீண்டும் புதுப்பித்துச் செயல்படுத்தினார்.
ஆனால், இன்றைய த.வெ.க. ஆட்சியில் பெண்கள் தங்கள் பாதுகாப்பைத் தாங்களே உறுதிசெய்துகொள்ள வேண்டிய 'நமக்கு நாமே பாதுகாப்பு' என்ற நிலை உருவாகியிருக்கிறது!
பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை. அந்தப் பொறுப்பையே பெண்களிடம் ஒப்படைப்பதுதான் இன்றைய ஆட்சியின் அவலம்!
I urge all my fellow women comrades @Tr_Gayathri@Dr_Poornima_BDS@poornimachandr3@Sara_RSara@Divi_Sudari to stay alert, take necessary precautions and safeguard yourselves.
தங்கம் வாங்க ஆசைப்பட்ட ஏழை மக்கள், இன்று ஒரு வேளை அரிசிக்கே ஏங்கும் நிலை!
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத மூடர் கூட்டத்தின் ஆட்சி!
இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு அதிக விலையாக ₹37-க்கு மின்சாரம் வாங்கும் 'சோப்ளாங்கி' அரசு!
இதுதான் மக்களின் வேதனை ஆட்சி!
பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 336(4), 340(2) உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது.கழகச் சட்டத்துறை, சம்பந்தப்பட்ட காணொலியை வெளியிட்டவர்கள் மீது உரிய ஆதாரங்களுடன்காவல் துறையில் புகார் அளிக்கும்.
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing
பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.
இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு!
நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call!
முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
#TVKfails
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் காணொலியில், தீய நோக்கத்துடன் அவரது குரலை மாற்றி, அவர் பேசாததைப் பேசியதுபோல் சித்தரிக்கும் போலிக் AI காணொலியை TVK IT Wing வெளியிட்டுள்ளது.
இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல. @mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing
@sekartweets@TVKVijayHQ Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.