The depth of knowledge. The humility in delivery. And the brilliance of connecting Dr. A.P.J. Abdul Kalam’s journey to the untold story of Operation Sindoor.
This is what leadership looks like.
Total leader material. 🔥🇮🇳
This is why Thalaivar Annamalai is special and commands dedicated followers, only he can talk about such complicated things in a way that could be understood by simple ordinary people. These are the greatest achievements of PM Modi and TN BJP has no idea about such things.
பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள் பிரதமர் ஆனது முதல் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு முன்னுரிமை. 12,000 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 38000 கோடியாக உயர்ந்துள்ளது.
Honoured to have had the opportunity to launch the book ‘Operation Sindoor-The Untold Story’ written by Indian Army veteran and Geopolitical analyst Thiru @major_madhan avl, alongside other eminent guests today in Coimbatore.
Heartfelt appreciation to Thiru Major Madan avl for his exemplary work, both during his service as a dedicated army officer and now as a compelling author. His continuous and passionate efforts in sensitising the Indian youth about the ethos, sacrifices, and immense contributions of the Indian Army are deeply inspiring and essential for building a strong, nationalistic character in our next generation.
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% முன்னுரிமை வழங்கும் வகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு "தமிழ்நாடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமைச் சட்டம்" (PSTM Act) கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தமிழ் வழியில் பயின்ற இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில், 20% முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களும், இந்தச் சட்டத்தின்படி,TNPSC மூலம் Group-I போன்ற உயர்பதவிகளுக்கு, இந்த முன்னுரிமையைப் பயன்படுத்த முடிகிறது. ஆனால்,TNUSRB மூலம் நடைபெறும் உதவி ஆய்வாளர் பணியிட நியமனங்களுக்கு, காவல்துறையில் ஏற்கனவே 5 ஆண்டுகள் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் 20% துறை ஒதுக்கீட்டில், இந்த முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
உதவி ஆய்வாளர் (SI) பதவிக்கான ஆட்சேர்ப்பு என்பது நேரடி நியமனமாகவே நடைபெறுகிறது. ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த காவலர்களுக்கு துறை ஒதுக்கீட்டின் கீழ் 20% முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், அந்தத் துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும் தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்களுக்கு, PSTM சட்டத்தின்படிவழங்கப்பட வேண்டிய தமிழ் வழி முன்னுரிமை வழங்கப்படாதது ஒரு முரண்பாடாக உள்ளது.
கடந்த ஆண்டு, TNUSRB-ன் அறிவிப்பு எண் 01/2025-ன் கீழ் நடைபெற்ற 1352 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பில், 20% துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவலர்களுக்கு PSTM முன்னுரிமை வழங்கப்படவில்லை. காரணம், "ஏற்கனவே அரசு ஊழியர்கள்" என்பதே. ஆனால், PSTM சட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இந்த முன்னுரிமை மறுக்கப்பட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.
இந்தச் சட்ட முரண்பாட்டை நீக்க, கடந்த ஆட்சிக் காலத்தில், 23.01.2026 அன்று, தமிழக அரசு "Tamil Nadu Bill No.4 of 2026" என்ற திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவில், தமிழ் வழியில் படித்த அரசு ஊழியர்களுக்கும், உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் PSTM முன்னுரிமை வழங்குவதே அரசின் நோக்கம் என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த முன்னுரிமையை ஒருமுறை பெற்றவர்கள், அதைவிட உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கு அதனை மீண்டும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த மசோதா இன்னும் சட்டமாகாத காரணத்தால், அறிவிப்பு எண் 01/2025-ன் கீழ் உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கேற்ற தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள W.P. No.11362/2026 (Vijay & Others) வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, 28.08.2026 அன்று நடைபெறவுள்ளது.
எனவே, தவெக அரசு, தமிழ்நாடு சட்ட முன்வடிவு எண் 4/2026 மீது உடனடியாக முடிவெடுத்து, தமிழ் வழியில் கல்வி பயின்று, தமிழகக் காவல்துறையில் உண்மையாகப் பணியாற்றும் காவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை கிடைக்கும்படி, PSTM முன்னுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும், தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் கைத்தறி நெசவாளர்கள் உருவாக்கும் ஒவ்வொரு துணியும், உலக அரங்கில் நம் பாரம்பரியத்தையும், நம் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துச் செல்கிறது.
கைத்தறி நெசவாளர்களின் உழைப்பிற்கு மதிப்பளிப்பதும், கைத்தறி பொருட்களை அதிகம் பயன்படுத்தி, அவர்கள் வாழ்க்கை வளம் பெற ஆதரவளிப்பதும், நம் அனைவரின் பொறுப்பாகும்.
129 டாஸ்மாக் கடைகள் மூடுவது தொடர்பாக தலைவர் @annamalai_k அவர்கள் கொடுத்த கடிதம் கிடைத்தது. கடைகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் தகவல்.
இதற்கு பெயர் தான் ஆக்கபூர்வமான அரசியல்!
நான் பள்ளிக்கூடம் போகும் காலத்தில் செழிப்பாக இருந்த எங்களது கிராமம் (குண்டடம் பக்கத்தில் உள்ள நவக்கொம்பு) கொஞ்சம் கொஞ்சமாக வானம் பார்த்த பூமியானது.
கிணற்றில் இருக்கும் தண்ணீரை வைத்தே நெல் சாகுபடி செய்த காலம் போய் தென்னைமரத்தை காப்பாற்றவே 800-1000 அடி போர்வெல் போடவேண்டிய நிலைமை உண்டானது.
ஊர் முழுவதும் வறண்டு சீமைக்கருவேலம் மரம் மட்டுமே நிறைந்த காடாக காட்சியளிக்கும். ஆங்காங்கே சிலரது தோட்டத்தில் மட்டும் தென்னை மரங்களுடன் ஊரைப் பார்க்கவே வேதனையாக இருக்கும்.
2003 இல் வேலையில் சேர்ந்து, 2005 இல் அமெரிக்கா வந்து ஒரு அளவிற்கு பொருளாதார வளர்ச்சி அடைந்தபிறகு, ஊரில் உள்ள சீமைக்கருவேலம் மரங்களை எல்லாம் அப்புறபடுத்தி மரக்கன்றுகள் வைப்போம், அதற்கான செலவை நான் பார்த்து கொள்கிறேன் என சிலதடவை சொன்னபோதெல்லாம் “உனக்கு எதுக்கு வேண்டாத வேலை” என சொல்லி விடுவார்கள்.
இப்படி பல வருடங்கள் ஓடியது, பின்னர் அரசியல் ஈடுபாடு வந்து நம்ம சக்திக்கு உட்பட்டு மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை ஊருக்கு வரும்போதெல்லாம் பண்ணி கொண்டிருந்தோம். ஆனால், ஊர் இப்படி பசுமை இல்லாமல் வறண்டு காடாக காட்சியளிப்பது உறுத்தி கொண்டே இருக்கும்.
தலைவர் @annamalai_k அவர்களது சமிபத்திய ‘சுத்தமான தமிழகம், பசுமையான தமிழகம்’ முன்னெடுப்பு மனதுக்கு நெருக்கமாக அமைந்தது. அந்த முன்னெடுப்பை நமது சொந்த ஊரில் இருந்து தொடங்கலாம் என்ற ஆசையுடன், மீண்டும் ஒரு தடவை ஊர் சொந்தங்களிடம் கேட்டு பார்ப்போம் என கேட்டால், சம்மதம் கிடைத்துவிட்டது.
அதனை தொடர்ந்து, ஊர் முழுவதும் 200 மரக்கன்றுகளுக்கு மேல் வைக்கலாம் என ஆரம்பித்து, தற்போதைய கடும் வறட்சியை கருத்தில்கொண்டு முதற்கட்டமாக 140 மரங்கள் நடும் வாய்ப்பு கிடைத்தது.
இதற்கான உந்துதலை அளித்த தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும், முழு ஒத்துழைப்பு அளித்த ஊர் சொந்தங்களுக்கும் நன்றிகள். ஊர் மக்கள் அளித்த ஒத்துழைப்பு, வரும்காலங்களில் இன்னும் பல நூறு மரக்கன்றுகள் நட்டு பசுமையான ஊராக மாற்ற ஊக்கமளித்துள்ளது.
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
”எனக்கு கை இருக்கு கால் இருக்கு, என்னோட வேலைய நான் செஞ்சிக்குவேன்.. யாரும் என்ன சுத்தி நிக்காதீங்க.. யாரும் மொபைல்ல வீடியோ எடுக்காதீங்க.. இந்த இடத்த சுத்தம் பண்ணிட்டு தான் நான் வருவேன்”... சிம்மக்கல் அருகே வைகை ஆற்றுப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட அண்ணாமலை
#Annamalai | #VaigaiRiver | #SanitationWork | #PolimerNews
இன்றைய தினம் காலை, நமது மதுரையின் அடையாளமாகவும், நம் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்த, புனிதமான வைகை நதிக்கரையில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியிலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி.
திங்கள்கிழமை காலை என்றாலும், பெருந்திரளாகக் கூடி, முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சமூக அக்கறையே நமது இயக்கத்தின் மிகப்பெரிய பலம்.
வைகை நதி என்பது வெறும் நதி மட்டும் அல்ல. மதுரை மாநகரின் உயிர்நாடி. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் நாகரிகத்தையும், விவசாயத்தையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் தாய். வைகை அன்னையைத் தூய்மையாகப் பாதுகாப்பது, நம் ஒவ்வொருவரின் தார்மீகப் பொறுப்பு. ஒரு நதியைப் பாதுகாப்பது என்பது வெறும் சுற்றுச்சூழலைக் காப்பதல்ல, நமது பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.
வைகையை மாசுபடுத்தாமல் காப்போம். பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை நதியில் கொட்டாமல் இருப்போம். நம் குழந்தைகளுக்கும், வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான வைகையை விட்டுச் செல்வோம். "சுத்தமான, வளமான தமிழகம்" என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி, பசுமையும் தூய்மையும் நிறைந்த தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்ற அன்பான வேண்டுகோளை, மதுரை மக்களுக்கு வைத்துக் கொள்கிறேன். (1/4)
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட தமிழின் பழம்பெரும் இலக்கியங்களில் பாடப்பட்ட மன்னரும், 14 நாடுகளை உள்ளடக்கிய கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மாவீரருமான வல்வில் ஓரி அவர்களின் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரும் கொடையாளியாகவும், இணையற்ற வீரராகவும் விளங்கிய அவரது வாழ்க்கை, தமிழரின் வீரத்திற்கும் அறத்திற்கும் எடுத்துக்காட்டாகும். வீரம், கொடை, நீதி ஆகிய உயரிய பண்புகள் கொண்ட மாவீரர் வல்வில் ஓரி அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
ஆங்கிலேய ஆட்சியைத் துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த, மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அவருக்கு எங்கள் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம்.
அடிமைத்தனத்திற்கு ஒருபோதும் தலைவணங்காத மனஉறுதியும், தாய்நாட்டின் மீது கொண்ட அசைக்க முடியாத பற்றும், எதிரிகளை அச்சுறுத்திய போர்த்திறனும், தீரன் சின்னமலை அவர்களின் தனித்துவ அடையாளம்.
தலைமுறைகள் கடந்தும் வாழும் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
With an emphasis on spreading the importance of preserving TN’s vast coastline and protecting biodiversity, @WTLFoundation has launched the cleaning & regenerating of the 175 km coastline between Kanyakumari and Thoothukudi.
Yesterday, we inaugurated the cleaning activity in Kanyakumari, Uvari, Kulasekarapattinam & Threspuram in Thoothukudi, with thousands of volunteers participating in the coastal regeneration effort.
தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து வீரமுடன் போராடிய மாவீரர் குணாளன் நாடார் அவர்கள் நினைவு தினம் இன்று.
தீரன் சின்னமலை அவர்களுடன் தோளோடு தோள் நின்று மூன்று முக்கியப் போர்களில், தனது வீரத்தால் ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டிய பெருமைக்குரியவர்.
கொங்கு நாட்டின் பெருமைக்குரிய கட்டுத்தடிக்காரர். விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற வீரர்களில் ஒருவரான மாவீரர் குணாளன் நாடார் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.