தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகளை சட்டங்களாக்கி, சரித்திர சாதனைகளால் தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய தன்னிகரில்லா தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சென்று மரியாதை செலுத்தினோம். அப்போது, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினோம்.
என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்!
#Kalaignar
பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு பேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர் கலைஞ���் அவர்களின் நினைவு நாள் இன்று.
நவீன தமிழ்நாட்டை - தனித்துவமிக்க மாநிலமாக உருவ��க்கித் தந்த கலைஞரின் நினைவு நாளில்,
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நாள் அமைதிப் பேரணியில் கழக முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
நம் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கும் கலைஞர் அவங்களின் புகழ் ஓங்கட்டும்!
#KalaignarForever
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும�� அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
மக்களுக்கான திட்டங்கள் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என முக்கிய அம்சங்கள் ஏதுமின்றி, திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது #SofaModel அரசு.
மாற்றம் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதையே முழுநேர வேலையாக செய்கிறார்கள் என்பதற்கு இந்த பட்ஜெட்டும் ஒரு சாட்சி.
100 நாள் ��ட்சி எப்படி பூஜ்ஜியமாக இருக்கிறதோ அதைப்போல இந்த திருத்திய பட்ஜெட்டும் மாபெரும் பூஜ்ஜிமயாகவே உள்ளது.
#Budget
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அட���த்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்து��்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்த���ார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin @arivalayam
காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க, மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நீதிமன்றம் என அனைத்து தளங்களிலும் `கழகத்தின் குரல்’ தொடர்ந்து ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய் ஆட்சியை உறக்கத்தில் இருந்து எழுப்பப் போராடுவோம்!
காவிரி, ��ர்நாடகத்தின் அணையைக் காக்க வழிந்தோடும் `உபரி நீர்’ அல்ல... தமிழரின் உயிரைக் காக்கும் `உரிமை நீர்’!
அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் இன்று!
ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர் தீரன் சின்னமலையின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
‘சென்னிமலைக்கும் – சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை’ என்று வீரமுழக்கமிட்ட தீரன் சின்னமலையின் தியாகத்தையும் – வீரத்தையும் போற்றுவோம்!
#தீரன்_சின்னமலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பஞ்சு குமார் அவர்கள் விபத்தில் காயமடைந்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவனையில் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் விர��வில் குணமடைந்து கழகப் பணிகளுக்குத் திரும்பிட வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
@Nivedhamurugan_ @durai944 @sunramanathan_ @Anbil_Mahesh @murasolimp @ilaiyadmk @anjugam_dr
மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள ��காராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செய���்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.
ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.
நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும்.
டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது.
#TNFarmers
தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெட���ப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் #Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டு��் கொள்கிறேன்.
பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி - மேகதாது பிரச்சினையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது - மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்காதது - காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது - கர்நாடக முதல்வரை சந்திக்கப் போவதாக Unofficial தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது,,,
இப்படி தமிழ்நாட்டு விவசா���ிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் #ShootingModel த.வெ.க. அரசைக் கண்டித்து,
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்பேரில், கழகத்தின் சார்பில் தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட்-3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்.
தஞ்சையில் கூடுவோம் - விவசாய விரோத #CallSheet Government-க்கு தக்க பாடம் புகட்டுவோம்!
‘உதவும் கைகள் அறக்கட்டளை’ மற்றும் திணை நிலவாசிகள் நாடகக் குழு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு அய்யாவின் சிலையை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அண்ணன் மு.வீரபாண்டி��ன் அவர்களுடன் இணைந்து திறந்துவைத்தோம்.
அத்துடன், திணை நிலவாசிகள் நாடகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பகு எழுதிய “அம்மாச்சி - கற்பனையின் முதல் ஆசிரியர்” நூலையும் வெளியிட்டோம்.
போராட்டக் குணம் நிறைந்த அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள முதல் சிலையை திறந்து வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
கொள்கையற்ற கவர்ச்சி அரசியல் கூட்டம் உருவாகியுள்ள இந���த காலச்சூழலில், கொள்கையும், லட்சியமும்தான் நம் முதன்மை அடையாள��் என்று வழிகாட்டியவர் அய்யா நல்லகண்ணு அவர்கள்.
அவருடைய வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை இவ்விழாவில் குறிப்பிட்டு பேசினோம்.
நல்லக்கண்ணு அய்யாவின் புகழ் ஓங்கட்டும்.
தமிழ்நாடு சட்டமன்றப் ���ேரவைக்கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை காணொளி வாயிலாக இன்று நடத்தினோம்.
தலைவர் அவர்களின் ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு நலன் சார்ந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஆற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
#DMK #MLAsMeeting
#TNAssembly
மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.
இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.
கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.
எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#CauveryRights
#Mekedatu
சர்வாதிகார #SofaModel அரசால் பழ��வாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம்.
சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம்.
அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக���கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.
மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் #Sofa அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.
விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.
@mlavilathikulam
@geethajeevandmk @ARROffice @AbdulWahabMLA
My heartfelt congratulations to Tamil Nadu's Raja Muthupandi on winning the silver medal in the Men's 65kg Weightlifting event at #CWG2026.
His remarkable achievement adds another proud chapter to India's medal tally and reflects the exceptional sporting talent emerging from Tamil Nadu.
May Raja Muthupandi's inspiring success motivate many more young athletes to pursue excellence and bring greater glory to our nation.
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதல��க்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருண���ச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath