விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஒலக்கூரில் அமைந்துள்ள மருத்துவர் ச.இராமதாசு கல்வி அறக்கட்டளையில் மருத்து அய்யா அவர்களின் 88-ஆவது பிறந்தநாள் விழா, மரக்கன்றுகள் நடும் விழாவில், மருத்துவர் அய்யா மற்றும் சரசுவதி அம்மையார் ஆகியோருடன் பங்கேற்ற போது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி MLA மற்றும் குடும்பத்தினர்.!
இன்று (25.07.2026) 87-வது பிறந்தநாளை கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் அய்யா. திரு. எஸ். ராமதாஸ் @drramadoss அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தொடர்ந்து மக்கள் நலப் பணியில் ஈடுபட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர், ஐயா @drramadoss அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் நாற்பதாண்டு காலமாக, மக்கள் நலன், சமூக நீதி, கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில், மக்களின் குரலாக தொடர்ந்து செயல்பட்டு வரும் மருத்துவர் ஐயா @drramadoss அவர்கள், நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற்று, தனது மக்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள இறைவனை வேண்டுகிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது 88வது பிறந்தநாளையொட்டி அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். "இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். இனி அரசியல் பேசவும் மாட்டேன்; அரசியலில் ஈடுபடவும் மாட்டேன். இனி கட்சியின் அரசியல் பொறுப்புகளை அன்புமணி ராமதாஸ் கவனிப்பார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
#Ramadoss | #AnbumaniRamadoss | #PMK
#WATCH | தைலாபுரம் இல்லத்திலிருந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் ஒரே காரில், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் நடைபெறும் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குச் சென்றனர்
#AnbumaniRamadoss#Ramadoss#News18TamilNadu
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay@TVKVijayHQ@drramadoss
சபரிமலை ஐயப்பனை வழிபடுவதற்காக இன்று சென்னை உத்தண்டி விநாயகர் கோயிலில் மாலை அணிந்துகொண்டார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
#AnbumaniRamadoss | #PMK | #Ayyappan
4399 நாள்களைக் கடந்து, அதிக காலம் பிரதமர் பதவியை
தொடர்ந்து வகித்து மோடி அவர்கள் சாதனை: இந்தியாவை
வல்லரசாக்கும் சாதனையையும் படைக்க வேண்டும்!
இந்தியாவின் பிரதமர் பதவியை தொடர்ந்து 4399 நாள்கள் வகித்ததன் மூலம் இந்தியாவில் தொடர்ச்சியாக அதிக காலம் பதவி வகித்த பிரதமர் என்ற புதிய சாதனையை நரேந்திர மோடி அவர்கள் படைத்திருக்கிறார். இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி வரை தொடர்ந்து 4398 நாள்கள் பதவி வகித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது. 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி தொடங்கி இன்று 4399 ஆம் நாளாக பிரதமர் பதவியில் தொடர்வதன் மூலம் மோடி அவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார்.
12 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது, உட்கட்டமைப்புகளையும், டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளையும் ஏற்படுத்தியது என பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சிக்கு பல அடையாளங்கள் உள்ளன. இந்தியாவை பசியும், வறுமையும் இல்லாத, அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற வல்லரசாக மாற்றும் முயற்சியிலும் அவர் வெற்றி பெற்று சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
@PMOIndia
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, போளூர் கிழக்கு ஒன்றியம் பொத்தரை கிராமத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைக் கூட்டத்தில் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்த போது.!
பா.ம.க தலைவர் அன்புமணியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்..!
மக்களுடன் மக்களாக தரையில் அமர்ந்து அந்த 15 லட்சம் ரூபாயை நான் தருகிறேன் என வாக்குறுதி அளித்த அன்புமணி.. கைத்தட்டி ஆரவாரம் செய்த மக்கள்..
#Tiruvannamalai | #PMK | #Anbumani | #Woman | #People | #PolimerNews
இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து
தொடர வேண்டும்: நூறாண்டுகள் வாழ வேண்டும்!
எங்களின் இசை மருத்துவரும், உலகின் தலைசிறந்த இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா அவர்கள் 84-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசைஞானியின் தனிச்சிறப்பு என்னவென்றால், தாய், தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரையும் விட, இசையாய் மிக அதிக நேரம் ஒவ்வொருவருடனும் இணைந்திருப்பது தான். இளையராஜா படைப்புகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மன சஞ்சலங்கள், மன அழுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களுக்கும் இலவச மருத்துவமாக அமைவது அவரது இசை தான்.
இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து தொடர வேண்டும். இசைஞானி நூறாண்டுகளைக் கடந்து வாழ்ந்து இசையால் இனிவரும் தலைமுறைகளையும் மகிழ்விக்க வேண்டும்.
@ilaiyaraaja