இந்தியத் திருநாட்டின் 80-வது விடுதலை நாள் இன்று!
விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய அனைத்து தியாகிகளையும் இந்நாளில் போற்றுவோம்.
பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், இனங்களைக் கொண்ட மக்களின் ஒற்றுமையே நமது இந்தியாவின் பெருமை. இந்த பன்மைத்துவத்தை என்றும் பாதுகாப்போம்.
இந்திய ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்தி, சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த தேசத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள்.
#IndependenceDay
இதே கைது நடவடிக்கையை தான் மற்ற பெண்கள் எதிராக நடந்த போதும் செய்தாரா விஜய்? இது திரிஷாவிற்காக நடத்தப்படும் கைது தான் ஒழிய வேறு இல்லை.
உதயநிதி கைது சரியான நடவடிக்கை அல்ல.
இது முழுக்க "திரிஷாவ" யாராது பேசினால் இதான் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எல்லாருக்கும் சொல்லும் கேவலமான அதிகார திமிரின் குரல்...
சேலம் மேற்கு மாவட்டம் நங்கவள்ளி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட
ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் தலைவர்
வழக்கறிஞர் திரு. வெங்கடாசலம் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற இருப்பதை முன்னிட்டு, இன்று அவரது இல்லத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தினேன்
தமிழ்நாடு மாதிரி ஒரு பாதுகாப்பான மாநிலத்தை நாங்க பார்த்தது கிடையாது.
நாங்க சிகிச்சையில் இருந்து படிப்பு வரைக்கும் எல்லாத்துக்கும் தமிழ்நாட்டுக்கு தான் போவோம்.
வடகிழக்கு மாநிலமான மிசோரம் மக்கள் விரும்பும் திராவிட மாடல் ஆளும் தமிழ்நாடு
அதே நிகழ்ச்சில, பெத்த பையனை இழந்தேன்னு சொன்ன அந்த ஆட்டோக்காரரை பேட்டி எடுத்தீங்களாடா? ஆனா இந்த ஆண்டிய எடுத்திருக்கீங்க.. அப்படி என்னடா இந்த இரு தரப்புக்கும் நூலளவு வித்தியாசம்?
திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகராட்சி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினேன்.
உடன் அமைச்சர் திரு. @ARROffice மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
#GreenTNMission மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 16 இலட்சம் அலையாத்தித் தாவரங்களை நட்டு 707 ஹெக்டேர் அலையாத்திப் பரப்பை மீட்டுள்ளோம்!
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1,350 ஹெக்டேர் அளவுக்குப் புதிய அலையாத்திக் காடுகளை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளது நமது #DravidianModel அரசு...
அதன் எழில்கொஞ்சும் பசுமைக் காட்சிகள் இதோ!
எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி – 2025-26ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு, புதிய மாணவ, மாணவிகளை அன்போடு வரவேற்றோம்.
அன்புள்ள மாணவ, மாணவிகளே,
இன்றைய நாள் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்.
பள்ளி கல்வியை முடித்து, கல்லூரி வாழ்க்கையின் வாயிலில் காலடி வைக்கும் இந்த முக்கிய தருணம், உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு சீரிய கட்டமாக அமையும்.
இந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பாடங்களை கற்க மட்டுமல்ல; உங்கள் கனவுகளை நோக்கி பயணிக்கவும், புதிய திறன்களை வளர்க்கவும், உங்கள் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கவும் உதவும் பயணமாகும்.
உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையை நிறைவேற்ற உங்களால் முடியும் என்பதை நம்புங்கள்.
இன்று நீங்கள் விதைக்கும் முயற்சி, நாளைய வெற்றியின் வேராக மாறும்.
இந்த உற்சாகமான தருணத்தில், உங்கள் கல்விப் பயணம் சிறப்பும், வெற்றியும் பெற வாழ்த்துக்களுடன் அன்போடு வரவேற்றோம்.💐💐💐📖📚
#tamilnadu_education_department
@mkstalin@Udhaystalin@DMKITwing@arivalayam@DMKSalem_
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள்,
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட தாதம்பட்டியில் அமைந்துள்ள
புதிய நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அந்த விழாவில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா.ராஜேந்திரன் அவர்களோடு இணைந்து
நாங்களும் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி
நிகழ்வை சிறப்பித்தோம்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திருமதி பிருந்தா தேவி,
மாநகர்மேயர் திரு. இராமச்சந்திரன், அரசு மருத்துவர்கள்,
கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
@Udhaystalin@DMKITwing@arivalayam@DMKSalem_
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்த #ஓரணியில்_தமிழ்நாடு பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பில் இன்று பங்கேற்றோம்.
#ChepaukTriplicane தொகுதி - திருவல்லிக்கேணி பகுதி, மீர்சாகிப்பேட்டை - முஸ்துரா பேகம் தெருவில் வீடுகளுக்குச் சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை மேற்கொண்டோம்.
இப்பரப்புரை தொடர்பான படிவங்களை பொதுமக்களிடம் அளித்து, அவர்களின் பதில்களை பெற்றோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசின் சாதனைகளைப் போற்றி, அவர்களுடைய விவரங்களை அளித்து, கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.
பாசிச பாஜக - அடிமை அதிமுகவுக்கு எதிராக தமிழ்நாடு மீண்டும் ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது.
‘ஓரணியில் தமிழ்நாட்டை’ பட்டிதொட்டி எங்கும் சேர்க்கும் ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்!
2026-ல் கழக அணி இருநூறுக்கும் அதிகமான தொகுதிகளில் வென்றதென சரித்திரம் படைப்போம்!
@nchitrarasu
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 47-ஆவது செயற்குழுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் நடத்தினோம்.
இந்தக்கூட்டத்தின் போது, #SDAT மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை, எதிர்கால இலக்குகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசித்தோம்.
முக்கியமாக SDAT-க்கென மாற்றுத்திறனாளி பயிற்சியாளரை நியமிப்பது - ஊதிய உயர்வு - SDAT விடுதிகளின் வசதிகளை மேலும் மேம்படுத்துவது - சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான திட்டமிடல் என பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறினோம்.
தமிழ்நாட்டை விளையாட்டுத்துறையில் தன்னிகரற்ற மாநிலமாக்க அயராது உழைப்போம்!
@SportsTN_ #NMuruganantham @Atulyamisraias #PradeepYadavIAS #JMeghanathaReddyIAS
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் 2023-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகக்குழுக் கூட்டத்தை இன்று நடத்தினோம்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வீரர்களுக்கு உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது, அறக்கட்டளையின் வரவு - செலவு விவரங்களையும் கேட்டறிந்தோம்.
மேலும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை தொடர்ந்து கைதூக்கி விடுவதற்கான அடுத்தடுத்தத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தோம்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை, நம் வீரர்களின் வெற்றிக்கனவை நனவாக்கட்டும் !
@SportsTN_@Atulyamisraias #PradeepYadavIAS #JMeghanathaReddyIAS #TNCF
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!
கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!
நமது #DravidianModel ஆட்சியில் @tnhrcedept சார்பில் செய்யப்பட்ட குடமுழுக்குகள், மீட்கப்பட்ட கோயில் சொத்துகள், சீரமைக்கப்பட்ட பழங்காலக் கோயில்கள், நடத்தி வைக்கப்பட்ட திருமணங்கள் என எல்லாமே ஆயிரங்களில்தான் இருக்கும்!
அந்த வரிசையில் இன்று மட்டுமே 576 இணையர்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் மொத்தம் 2,376 திருமணங்களை நடத்தி, பக்தர்கள் போற்றும் அரசை நடத்தி வருகிறோம்!
@PKSekarbabu