வணக்கம் மக்களே,
அண்ணன் தவெக கட்சியை அறிவித்த அன்று என்னை தானாகவே அழைத்து பேசினார் ஜான் ஆரோக்கியசாமி @JhonArokiasamy . அதற்கு ஒரே காரணம் நான் தளபதியின் தீவிர ரசிகை என்பது தான். பல நாட்கள் தவெக சார்ந்த விஷயங்களை என்னிடம் பேசியும் பகிர்ந்தும் வந்தார். அதன் பின்னர் பல முறை “தவெக ஐடி விங் நீங்கள் இல்லாமல் இல்லை” என்று பல மாதங்களாக ஜான் ஆரோக்கியசாமி என்னிடம் பேசி வந்தார்.
ஒரு சில மாதங்கள் கழித்து ஐடி விங் மீட்டிங்குக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து, பின்னர் யூட்யூப் சேனல்களில் பேச சொன்னார். இது @bussyanand அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். நான் எந்த ��ேனலுக்கு பேசப் போகிறேன், என்ன தலைப்பில் பேசப் போகிறேன் என்பதையும் பொதுச் செயலாளரிடம் தெரிவித்துவிட்டே அனைத்து பேட்டிகளையும் தவெக உறுப்பினராக அளித்து வந்தேன்.
நானும் வாட்ஸ்அப் குழுக்களில் முக்கியமான செய்திகளை தொடர்ந்து பகிர்வதும் என அனைத்தும் சரியாக போய்கொண்டிருந்தது. இந்த நிலையில் பெண்கள் ஐடி விங் குழுவில் பேசிக் கொள்ளும் விஷயங்கள் கசியத் தொடங்கின. ஒரு நபர் மீது ஆதாரங��களுடன் குற்றச்சாட்டை வைத்தேன். அதற்கு ஜான் ஆரோக்கியசாமி “sister leave all the screenshots” என்று கூலாக பதில் அளித்தார். என்னடா இது அநியாயமா இருக்கேன்னு உணர்ந்து அப்போதே அனைத்து குழுக்களிலிருந்தும் வெளியேறினேன்.
இதற்குப் பிறகு என்னிடம் “இனி பேட்டிகள் தர வேண்டாம், இனி கட்சியில் இருக்க வேண்டாம், வெளியில் இருந்து விஜய்க்கு ஆதரவு தாங்க, Voice of Common-ல் ஒரு employeeயா வேலைக்கு வரனும் என்று ஜான் ஆரோக்கியசாமி கூ��ின���ர். எனக்கு அதில் உடன்பாடில்லை என்று மறுத்துவிட்டேன். இது குறித்து பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லாததால், தளபதி ஒருவருக்காக இன்று வரை இது குறித்து பொதுவில் பேசாமல் இருந்தேன்.
ஜான் ஆரோக்கியசாமி செய்யும் பல தில்லு முல்லு வேலைகள் எனக்கு தெரிந்துவிட்டது என்பதாலேயே என்னை கட்சியில் இருக்க விடாமல் செய்ய வேண்டும் என அவர் நினைத்தார். தளபதியின் தீவிர ��சிகையான என்னை கட்சியில் இருக்கக் கூடாது, கட்சியை விட்டு வெளியே போ என சொல்ல ஒரு strategistக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? யார் இந்த அதிகாரத்தை அவருக்கு கொடுத்தது? தவெகவுக்கு பல ஆதரவாளர்கள் தேவை, தளபதியும் அப்படியான மனநிலை கொண்டவரே! யாரையும் கட்சியை விட்டு போக சொல்ல தளபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
இந்த பிரச்னைக்குப் பிறகு ஒரு கும்பலை வைத்து என் மீது அதிமுக சாயத்தை பூசுவதை முழுநேர ���ேலையாக செய்து வருகிறார் ஜான் ஆரோக்கியசாமி. இதற்கு ஒரு குறிப்பிட்ட குழுவை வைத்து இயக்கி வருகிறார். பல முறை இது பற்றி தவெக நிர்வாகிகளிடம் கூறியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. “ஜான் தான் தவெகவில் எல்லாமே, ஜானை மீறி எதுவும் செய்ய முடியாது, நீங்க மோதிக்கிட்டிருப்பது பெரிய ஆளோட” என்று அனைவரிடமும் சொல்லி, எனக்கு மிரட்டல் தருவதை மட்டுமே வேலையாக செய்து வருகிறார்.
தற்போதும் பெண்கள் ஐடி விங் குழுவில் இருந்து அதே கும்பல் screenshots எடுத்து பொதுவில் போட்டு, இன்னொரு பெண்ணை attack செய்து வருகின்றனர். இதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்கு முன்பு ப்ரேம் என்ற தம்பியும் இந்த நபரால் பாதிக்கப்பட்டது இங்கு தவெக ஐடி விங்கில் உள்ள அனைவருக்கும் தெரியும். முதலில் ப்ரேம், பின்னர் நான், தற்போது இன்னொருப் பெண் என தொடர்ச்சியாக இந்த அராஜகம் நடந்து வருகிறது. இதற்கு முழு காரணம் ஜான் ஆரோக்கியசாமி மட்டுமே. குறிப்பிட்ட தவறான நபருக்கு இவர் வரிந்துக் கட்டிக்கொண்டு வருவதால், தவறு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறது இந்த கும்பல்.
ஜான் ஆரோக்கியசாமியும் இந்த குழு���ும் சேர்ந்து அதிமுக ஆதரவாளர் என்று என்னை முத்திரை குத்தி பல மாதங்களாக எனக்கு கடும் மனஉளைச்சல் ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல நாட்கள் இணையத்தில் இயங்காமல் தவிர்த்தும் வந்தேன்.
கடந்த சில நாட்களாக ��ீண்டும் என்னை attack செய்ய அதே கும்பலை ஏவி வருகிறார் ஜான் ஆரோக்கியசாமி. ஆனால் உண்மையில் அதிமுகவுக்காக வேலை செய்பவர் ஜான் ஆரோக்கியசாமி தான். அதற்கு வேண்டிய அனைத்து ஆதாரங்களையும் தளபதியிடம் கொடுக்கத் தயார். தவெகவின் strategist என பல கோடிகளை சம்பளமாக வாங்கியும், மறுபுறம் அதிமுக நபர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்துகொண்டிருக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி. இந்த விஷயமும் பல மாதங்களுக்கு முன்பே எனக்கு தெரிந்திருந்தும், பொதுவில் பேசாமல் பொறுமையாகக் இருந்தேன். அதற்கு காரணமும் தளபதி ஒருவரே. அவர் முகத்துக்காக மட்டுமே பொறுமையாக அமைதி காத்து வந்தேன்.
பொறுமையாக இருந்ததற்கும், ஜான் ஆரோக்கியசாமி செய்யும் பல தவறுகளை internal-ஆக சுட்டிக்காட்டியதற்கும் எனக்கு கிடைத்த பரிசு— “நான் அதிமுக ஆதரவாளர்” என்ற அவதூறும், மனஉளைச்சலும் மட்டுமே.
Next 👇🏻
@LoyolaMani SIT விசாரணைக்கு அவசர அவசரமாக சுப்ரீம் கோர்ட்டில் தடைகேட்பதற்குப் பின்னணியில் இருப்பது ஜனநாயகன்! திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக Arri Alexa 35 போன்ற சினிமாத்துறை கேமராக்கள் விஜயின் பிரச்சா�� வாகனங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தால் அவை மேற்படி விசாரணையில் அம்பலமாகிவிடலாம்
SIT விசாரணைக்கு அவசர அவசரமாக சுப்ரீம் கோர்ட்டில் தடைகேட்பதற்குப் பின்னணியில் இருப்பது ஜனநாயகன்! திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக Arri Alexa 35 போன்ற சினிமாத்துறை கேமராக்கள் விஜயின் பிரச்சார வாகனங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தால�� அவை மேற்படி விசாரணையில் அம்பலமாகிவிடலாம் பயம்
The other side of Indian Railways..
ஏதோ ஒரு ஸ்டேஷனில் குழந்தைகளின் பசிக்கு உணவு பெற இறங்கிய புலம்பெயர் தொழிலாளர் தம்பதியினர்..
குழந்தையுடன் கிளம்பிய ரயில்..
பதறிப் போய் கார்டிடம் முறையிட, ட்ரெயின நிறுத்தி இருக்கார் மனிதாபிமானமிக்க அந்த கார்டு
இப்படியும் சிலர் இருக்கிறார்கள்
இரண்டு பேருக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது 😁
AUDIOCULAR - BR 10mm Dynamic Driver IEM with Mic - For Beginner Audiophiles
இந்த ட்வீட்டை லைக் ♥️ பண்ணிட்டு ரீ ட்வீட் பண்ணி விடுங்க .
வின்னர்கள் அறிவிப்பு நாளை 🤞🏼
இந்த ப்ராடெக்ட் பற்றிய மேலும் தகவல்கள் லிங்க 👇🏼
உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்முடைய @SportsTN_ (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு @SportsTN_ சார்பாக எங்களது நன்றிய��த் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நமது #திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - #Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்.
விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை ��லக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்.
@Atulyamisraias #JMeghanathaReddyIAS