மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்ட சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
- காவல்துறை விளக்கம்
சரி சார் நீங்க திரும்ப போய் தூங்கலாம்
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா?
பேரறிஞர் அண்ணா பற்றி ஒற்றை வார்த்தைகூட உதிர்க்காத மேடையில், எங்கள் வெற்றித் தலைவரின் நடை, உடை, பாவனை பற்றி விரிவாக அலசியிருக்கிறார் கொளத்தூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
மாண்புமிகு முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவுகளையும் வீட்டில் அமர்ந்து நீலாம்பரி போல repeat mode-ல் ஓட்டிப் பார்த்து ரசிக்கிறார் போல, முன்னாள்... இந்நாள் இரசிகர்.
கொத்துப் பரோட்டா போட்டதற்காக கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், எதற்காக 3 முறை revaluation போட்டார்?
மிசா கைதைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று இப்போது சொல்லும் பொய்ப் பிம்பம், 9 நிமிடக் காணொளியை ஏன் வெளியிட்டாராம்? பதற்றம் பற்றியதில் புலம்பிவிட்டாரோ? Detention copy காணாமல் போய்விட்டதோ?
அன்று “வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்று வெற்றித் தலைவர் கேட்டபோது, வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பித்த மங்காப் புகழ் கொண்ட வரலாறு அவர் ஆட்சியில் தான் நடந்தது என்பதை மறந்தாரோ?
Image buildup-ற்காக Walking with Harry Potter stick (எந்த ஜோசியர் சொன்னாரோ, கையில் குச்சியை எடுத்துப் போகச் சொல்லி), Mini vlog with Insta kids, cycle ride during foreign visits, monovlog videos என நித்தம் ஒரு விளம்பர shooting நடத்தி வந்த Shooting நாயகன், நடிப்பைத் துறந்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்த நம் வெற்றித் தலைவரைப் பார்த்து “நடிக்கிறார்” என்பது உச்சபட்ச நகைமுரண்!
“ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சி” என்று ரீல்ஸ்களாக வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து மீண்டு வாருங்கள்.
இன்று அறப்போர் இயக்கம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் அவர்கள் மீது கொடுத்த டெண்டர் முறைகேடு புகாரின் அடிப்படையில் அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த முதற்கட்ட நடவடிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது.
அரசு சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கையும், கிரிமினல் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அறப்போர் தொடரும்!
இந்த முறைகேடு குறித்த காணொளியை இங்கு பார்க்கலாம்
https://t.co/dewprPE0ea
இங்கிலாந்து, இலண்டனில் இன்று (14.09.2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதும் தனது விருப்பத்தைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. அவர்களிடம் தனது விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தது.
இந்நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட இந்த முதலீட்டைச் சாத்தியமாக்கவும், தமிழ்நாட்டில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தமிழ்நாடு அரசு அந்நிறுவனத்திற்கு உறுதியளித்தது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு நேரில் சென்று, அதன் உட்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டு, பிரபல நடிகரும், மோட்டார் கார் பந்தய வீரருமான திரு.அஜித் குமார் அவர்கள் பங்கேற்ற 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
Two legends. One unforgettable moment at Silverstone. When @Akracingoffl met @actorvijay . 👊
Yesterday, C. Joseph Vijay waved the green flag to start the #SilverstoneRound, making history as the 44-car grid launched into two hours of racing action in the UK. 🏁
What a moment! ✨
#LMC #Michelin
தியாகத்தில் விளைந்த தலைவரெல்லாம் இல்ல , திருட்டில் விளைந்த தலைவர் , குடும்பத்தொழில் , குடும்ப பாட்டு , குடும்ப புகைப்படம் போல திருட்டை குலத்தொழிலாகவே மாற்றிக்கொண்டு மூன்று தலைமுறைகளாக சுரண்டியது போதாது என்று நான்காவது தலைமுறையையும் நம் தலையில் கட்ட முனையும் எத்தர் கூட்டம் தான் இந்த கோல்மால்புர கொள்ளைக்கூட்டம் , அதுக்கு சாமரம் வீசிக்கொண்டே காற்றையும் விட்டுவிடாமல் காசு பார்த்த பலே திருடன் நீ ,
காற்று - ஸ்பெக்ட்ரம் ஊழல்
நெருப்பு - நிலக்கரி ஊழல்
ஆகாயம் - ஸ்பைஸ் ஜெட் ஊழல்
நீர் - சேது சமுத்திரத்திட்டம்
நிலம் - நில அபகரிப்பு
என்று பஞ்சபூத திருடர்கள் - அதெல்லாம் பத்தாது என்று பள்ளம் தோண்டி கேபிள் புதைத்து திருடிய கொடூர பீரோ புல்லிங் கூட்டம் , கல்லு , மணல் , காடு , மலை என்று எதைப்பார்த்தாலும் திருடத்துடிக்கும் பாக்தாத் கொள்ளைக்கூட்டம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்
அதென்ன தம்பி விஜய்? அண்ணன் தம்பினுலா உறவு கொண்டாடாம “மாண்புமிகு தமிழக முதல்வர் திரு விஜய்”அவர்களே னு சொல்லி பழகுங்க, Ex MLA சார்.
அப்புறம், மிசா வெச்சுலா இனி போனி பன்ன முடியாது அவ்ளோ தான் அது முடிஞ்சுது.
accept & move on
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?
எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.
உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது.
பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.
கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி.