இப்போது அரசியலுக்கு வருகிற நடிகர்கள், “என்னை முதல்வர் ஆக்குங்கள்; அப்போதுதான் நான் மக்களிடம் வருவேன்” என்று கூறுகிறார்கள்.
அதிகாரம் இருந்தால்தான் சேவை செய்வேன் என்பதல்ல அரசியல்;
அதிகாரம் இல்லாமலேயே மக்களுக்காக நிற்பதே உண்மையான அரசியல்
#நல்லக்கண்ணு#nallakannuayya#nallakkannu
கம்யூனிஸ்ட்கள் எளிமையானவர்கள், சுய ஒழுக்கம் உள்ளவர்கள், நேர்மையானவர்கள், உண்மையான மக்கள் தலைவர்கள்.
சிறந்த உதாரணமாக நம்முடன் வாழும் சுதந்திர போராட்ட வீரர் தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் இன்று.
மேற்கண்ட தலைமை பண்புகள் முதலாளித்துவ தலைவர்களுக்கு இல்லை!
#நல்லகண்ணு#Nallakannu
கீழ் வெண்மணி தியாகிகளுக்கு செவ்வணக்கம்.
சாதிய ஒடுக்குமுறை, பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தில் சுயமரியாதை கற்றுக்கொடுத்த செங்கொடியை இறக்க மாட்டோம் என்று உயர்த்தி பிடித்து நடத்திய வர்க்கப் போரில் கோபாலகிருஷ்ணன் நாயுடு பண்ணையாரால் படுகொலை செய்யப்பட்ட தினம்.
வெண்மணி தியாகிகளின் வீர மரணத்தை நெஞ்சில் ஏந்தி சமத்துவமான உலகம் படைக்க சமரசம் இன்றி போராடுவோம்.
#கீழ்வெண்மணி
தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி யாழ்.ஊரெழுவில் ஆரம்பம்
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று(26.09.2025) அவர் பிறந்து வாழ்ந்த ஊரெழுவில் இருந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஊர்தி பவனிகள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.
இந்நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னர் அவ்விடத்தில் இருந்து இரு ஊர்திகளும் யாழ்.பலாலி வீதியூடாக நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
இதே வேளை அதே வழித்தடத்தில் அமைந்துள்ள விடுதலை போராட்டத்திற்காக தன் உயிரை தியாகம் செய்த பொன் சிவகுமாரின் யாழ்.உரும்பிராயில் அமைந்துள்ள உருவச் சிலைக்கும் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ் ஊர்தி பவனியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், நடராஜர் காண்டீபன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுபபினர் கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக நினைவேந்தல் செலுத்தினர்.
#தியாகதீபம்_திலீபன்
#லெப்_கேணல்_திலீபன்
'சாவும்' எங்கள் பார்த்தீபனைக் கண்டு
அஞ்சி நகர்ந்து நகர்ந்து நாள்
தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது...
சாகும் வரை உண்ணாவிரதம்.! நாள்09
பெரியவர் #தியாகதீபம்_திலீபன் 🙏
தமிழினத்தின் மீது கொண்ட காதலால்
எம்மினத்தின் விடுதலைக்காக
அகிம்சை வழியில் போராடி 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மாவீரர் ஆகிய தியாகத்தின் மறு உருவம் எங்கள் திலீபன் அண்ணாவின் நினைவு நாட்களில் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.
15.09.1987 - 28.09.1987
அவருடைய நினைவாக அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பினரால் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டு இன்று வெளியிட்டுள்ளோம். இப் பாடலை நாங்கள் அனைவரும் கேட்டு, எங்கள் மனதிலும், எங்கள் வீடுகளிலும் அவருக்காக தீபம் ஒன்றினை ஏற்றி அவர்களது தியாகத்தையும் அவர்களுடைய நீதிக்கான போராட்டத்தையும் மனதில் நிறுத்தி அவரைப் போன்று அகிம்சை வழியில் நாமும் ஈழ விடுதலை நோக்கி பயணிப்போம் என்று உறுதியெடுத்துக் கொள்வோம்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
நன்றி
அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு
#இளையோர்_அமைப்பு
#TYO
எங்கள் திலீபம்.!!
உண்மைத் தீயில்
உருகியதவன் உடல்,
பாறையின் உறுதி
போல நின்றதவன் மனம்,
ஐந்து கோரிக்கைகள்
கொண்டு
செய்தான் சத்தியம்,
தமிழீழத் தாயின் மடியில்
கிடந்தவன்
வயிற்றில் உணவு மறுத்தும்,
வீரத்தின் செவ்வியல் உயர்த்தியும்,
அருந்தவம் போல இறுதி போராட்டம் செய்து,
அடுத்த தலைமுறைக்கு அவன் விதைத்தது உறுதியாம்.
அழியாத பெயர் – திலீபன்,
அசையாத நினைவு – தியாகம்,
உன்னைப் பார்த்து உயிர்ப்பெறும் மக்களாகிய நாங்கள் இப்புரட்சியை தொடர்கிறோம்.!!
#TamilNationalism
#TamilEelam 🔥