அடித்துக்கொன்றார்கள் என்ற உண்மை தெரிந்து போராடிய பெற்றோர்களையும் உறவினர்களையும் இந்த அரசு காவல்துறை வைத்து கைது செய்து ஆகாசின் உடலை எடுத்துக்கொண்டு போய் அடக்கம் செய்தது.. அநீதி இழைத்த அரசும் நீதிமன்றமும் என்ன பதிலை வைத்திருக்கிறது?
சாதியை கடந்த ஆட்சி என்று பெருமை பேசிய முதல்வரின் கீழ் உள்ள துறையில் சாதி தலைவிரித்தாடுகிறது.. என்ன நடவடிக்கை எடுக்கபோகிறார் @CMOTamilnadu?
கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர்!
இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட குணாளர்!
தான் சார்ந்திருக்கிற நடிகர் சங்கம் பெருங்கடனில் மூழ்கித் தவித்தபோது தனது கடினமான உழைப்பாலும், நிர்வாகத்திறனாலும் மீட்டெடுத்த பெருந்தகை!
ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியாக இருக்கக் கூடாதெனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி!
எந்த நிலையிலும் தன்னிலை மாறாது உள்ளன்போடு எல்லோரிடமும் பழகிய பண்பாளர்!
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஐயா விஜயகாந்த் அவர்களுடைய 74வது பிறந்தநாளில், அவருடைய நற்செயல்பாடுகளை போற்றி, என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இன்று (25.08.2026), பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களைத் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் அவர்கள் வரவேற்று, கலந்துரையாடினார்.
விரைவில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களைச் சந்திப்பதற்கும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
#ntk #seeman #parandur
இந்த கொடுமைக்கு ஒரு முடிவே இல்லையா @CTR_Nirmalkumar .. 4 மடங்கு கட்டணம் வந்ததாக எழுந்த 3,70,000 புகாா்களில் 2,719 மட்டுமே மின் மீட்டா் பழுதால் ஏற்பட்டவை என சொன்னீர்களே? அதில் இந்த இணைப்பும் உள்ளதா?
கை நீட்டி பணம் வாங்குவது மட்டுமல்ல.. இப்படியான முறைகேடும் தானே ஊழல்..
மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, வெள்ளை திரைகளில் ஒப்பற்ற ஓவியங்களாகப் படைத்தளித்த தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற படைப்பாளி, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் புகழைப்போற்றும் வகையில் அவர் பிறந்த தேனி மண்ணில் மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பினை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
தென்கொரிய நாட்டின் சியோல் நகரில் பன்னாட்டு அளவிலான இளையோருக்கான டேக்வாண்டோ போட்டியில் கோவை மாணவர்கள் 5 வெண்கல பதக்கம் வென்ற செய்தியறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
அன்பு பிள்ளைகள் ஐவரும் மேலும் பல பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
எந்தக் கட்சியை சார்ந்த நபரை பார்த்தாலும் ‘நான் உங்க கட்சிதான்’ என்று பேருவுகையோடும் பெருந்தன்மையோடும் பாசம் காட்டும் பண்பாளர்! வான் அதிரும் ஆதன் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் என்பதன் தனது அடையாளமாக கொண்டுள்ள All party journalist அன்புச் சகோதரர் @Madeshjournali1 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !
தேர்தல் காலத்தில் வாக்குகள் கேட்கும்போது "தகுதி பார்த்துதான் உதவி செய்வோம்" என்று கூறாமல், ஆட்சிக்கு வந்த பிறகு இதுபோன்ற நிபந்தனைகளை விதிப்பது மக்களை ஏமாற்றும் செயல்!
- செந்தமிழன் சீமான்
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
திமுக மாதிரி பொய் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பின்னர் தகுதியானவர்களுக்கு என்று ஏமாற்றமாட்டோம்.. நாங்கள் வெளிப்படையாக உண்மையாக இருப்போம்..
- மாண்புமிகு முதல்வர் விஜய்
மாதம் 1,80,000 ரூபாய் ஊதியம் வாங்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசின் சார்பில் இலவச கார் வழங்கப்படும்.
மாதம் 21,000 ரூபாய் ஊதியம் வாங்கினாலே அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச எரிவாயு உருளைக்கான மானியம் கிடையாது.
கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. அவர் யாருக்காகக் கொடுத்தார்?
10,000 Likes வந்துட்டா ஒரு பொய் செய்தி உண்மையாகிடுமா?
30 வினாடி Reels களை மட்டுமே பார்த்து அரசியல் முடிவெடுக்கும் சூழல் இளைய தலைமுறையை எங்கே கொண்டு செல்லும்?
போலி பிம்பங்களை உடைக்கும் சமூக வலைதள இளைஞர்களின் நேரடி அனுபவங்கள்.
🔗 https://t.co/JXpvaK89gF
#SocialMediaPolitics #FakeNarratives #ReelsCulture #TamilYouth #EngalDesam
இன்று தென்காசி சட்டமன்ற தொகுதி ,கீழப்பாவூர் ஒன்றியம் மேலப்பாவூரில் புதிதாக வரவிருக்கும் மன மகிழ் மன்றத்தினை அனுமதித்தால் அருகில் உள்ள பள்ளிக்கும் , வழிபாட்டு தலத்திற்கும் செல்லும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் மற்றும் ஏற்கனவே இந்த ஊர் இந்தபகுதியின் காவல் நிலையத்தில் பதட்டமான கரும்புள்ளி கிராமமாக இருப்பதால் மன மகிழ் மன்றம் வருவதற்கு அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் சார்பாக நாம் தமிழர் கட்சியின் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.