When a fool gets power, his first act is to silence the wise. His next act is to recruit other fools to join him, and his last act is to destroy the state.
-Plato
டெல்லியில் போராடும் Neet எதிர்ப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கும் CJP தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைவர்க்கு நன்றி சொல்லி இருக்காரு ❤
அவனுக்கு தெரியும் யார் கழுகு என்று 😎
கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி
தியாகத் திருநாளான பக்ரீத் திருநாளில், என்றென்றும் என் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள்! அவர்களது வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும்!
“ஈத்துவக்கும் இன்பம்” என்று வள்ளுவப் பெருந்தகையால் போற்றப்பட்ட ஈகைப் பண்போடு, ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு, நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியப் பெருமக்களது வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெறட்டும்.
இஸ்லாமிய சமூகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையேயான உறவு, அரசியல் மற்றும் சமூகக் காரணங்களைத் தாண்டிய ஆழத்தையும், மேன்மையையும், உண்மையான பிணைப்பையும் கொண்டது. கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் உணர்வைக் கொண்ட உற்ற தோழமை என்பதை விவரிக்கத் தேவையில்லை. அந்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும் என்பதை, இந்த நன்னாளில் மேலும் உறுதிசெய்ய விரும்புகிறேன்.
இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்.
ஆட்சிக்கு வந்ததுல இருந்து ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த கூட துப்பு இல்லையா என மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க CM Sir...
சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க விஜய்!
#TVKFails
கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த போது, திட்டக்குடியில் உற்சாகமிகு வரவேற்பை அளித்த கழக உடன்பிறப்புகளுக்கு என் அன்பும், நன்றியும்!
@cvganesan1
DMK: The Development Engine!
குடிசையில்லாத் தமிழ்நாடு எனும் கனவை அடைந்திடும் நோக்கத்துடன் 1970-இல் தலைவர் கலைஞர் அவர்கள் “தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்” உருவாக்கினார். நமது #DravidianModel-இல் அதனை “நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” எனப் பெயர் மாற்றினோம். இது வெறும் பெயர் மாற்றமல்ல; செயலாற்றலில் புதுப் பாய்ச்சல் என நிரூபித்திருக்கிறோம்.
அதற்கான Data இதோ:
கடந்த 2016-21 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், இந்த வாரியத்தின் மூலம், சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் என மொத்தம் 27,668 குடியிருப்புகள்தான் உருவாக்கப்பட்டன.
நம்முடைய #DravidianModel-இல்,
☀️ சென்னை - 30,167
☀️ மற்ற மாவட்டங்களில் - 46,207
-என மொத்தம் 76,374🌇 குடியிருப்புகளை உருவாக்கியுள்ளோம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்தக் குடியிருப்புகளின் எண்ணிக்கையைவிட, நமது ஆட்சிக்காலத்தில் சென்னையில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகம். இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! இதுதான் செயலாற்றல்!
இதன் தொடர்ச்சியாக 700 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட “முதல்வர் நகர்ப்புறக் குடியிருப்புகள்” உள்ளிட்ட திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தேன்.
#DravidianModel 2.0-வில் இது இன்னும் பன்மடங்காகும்!
10 லட்சம் பேருக்கும் உணவு , இருக்கை , தண்ணீர் அவங்களோட பாதுகாப்புனு
மாநாட்டை வெற்றிகரமாக முடிச்சிருக்கு கழகம்
தண்ணி, சாப்பாடு இல்லாம , ஒரே ஒருத்தர் கூட கிடையாது
இதுக்கே கழகத்துக்கு சல்யூட் 💥💥
மீண்டும் 2.0 ஆட்சி அமையும்
🖤❤
@mkstalin@KN_NEHRU#StalinWave2026
#திருச்சி_மாநாடு: ஏழாவது முறையும் நாமதான்; இனி எப்போதும் நாமதான்
திராவிட மாடலுக்கு ஆதரவாகத் தமிழ்நாடெங்கும் வீசும் அலையினை, திருச்சியில் அலைகடலெனத் திரண்ட உடன்பிறப்புகளின் திருமுகங்களில் கண்டேன்! நானும் எழுச்சி கொண்டேன்!
அடிமைகளின் முதுகில் ஏறி வந்தாலும், புதிதாய் அடிமைகளைச் சேர்க்க முனைந்தாலும், ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்ட நினைத்தாலும் பாசிச பா.ஜ.க.வால் நம்மை அசைத்துக்கூட பார்க்க முடியாது.
வீடுவீடாகச் செல்வோம்; நம் சாதனைத் திட்டங்களைச் சொல்வோம்!
#TamilNaduVsNDA எனும் நம் மண்ணைக் காக்கும் போரில் உறுதியாக வெல்வோம்!
#வெல்வோம்_ஒன்றாக
எங்கு காணினும் கருப்பு சிவப்பு கழக உடன்பிறப்புகள் உற்சாகத்துடன் கழக மாநாட்டில் கழகத் தலைவரின் எழுச்சியுரையைக் கேட்க ஆவலாக கூடியுள்ளனர்!
#StalinWave2026
கொளத்தூர் இராஜாஜி நகரில் @TNHRCEDept சார்பில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான உறைவிடம்!
60 வயதிற்கு மேற்பட்ட, குடும்பத்தில் பராமரிக்க வசதி வாய்ப்பில்லாத முதியோர்களுக்கான அன்புச்சோலையாக இதனைக் கட்டியுள்ள மாண்புமிகு @PKSekarbabu அவர்களுக்குப் பாராட்டுகள்.
இந்த உறைவிடத்தின் முழுப் பராமரிப்பிற்கான நிதியுதவியை வழங்கிட முன்வந்த TVS Motors நிறுவனத்தாருக்கு என் நன்றிகள்.
அன்பினால் #வெல்வோம்_ஒன்றாக! #KolathurVisit #DravidianModel
ஜனநாயகத்தைக் காக்க
ஓரணியாய் திரண்டிருக்கும் தமிழ்நாட்டின் நம்பிக்கை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிறந்தநாள் இன்று!
திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் மக்களை மகிழ்ச்சியில் நிறைத்து, அனைவரையும் அன்பால் அரவணைத்து, கொள்கை உறுதியோடு களத்தில் நிற்கும் நம் கழகத்தலைவர் அவர்களின் கரங்களை மேலும் வலுப்படுத்துவோம்.
சூழும் பகையை வீழ்த்தி, பாசிச இருளகற்றும் உதயசூரியனாய், திராவிட மாடல் 2.0 அரசை அமைப்பதே நம் கழகத் தலைவர் அவர்களுக்கு நாம் அளிக்கும் பிறந்த நாள் பரிசு.
தலைவர் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!!
#HBDCMMKStalin
பெண்கள் கருத்துச் சொல்லும்போது சமூகம் கடுமையாகதான் சாடும். அதற்காக யாரும் உடைந்து போய்விடக் கூடாது. எதிர் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அதற்கு எதிர்வினையாற்றும் அளவிற்கு நம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
- கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள்
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
ஸ்டாலின் vs மோடி
ஸ்டாலின் vs அமித்ஷா
ஸ்டாலின் vs எடப்பாடி
ஸ்டாலின் vs சீமான்
ஸ்டாலின் vs விஜய்
ஸ்டாலின் vs அண்ணாமலை
ஸ்டாலின் vs H ராஜா
ஸ்டாலின் vs அன்புமணி
ஸ்டாலின் vs நயினார்
ஸ்டாலின் vs தமிழிசை
ஸ்டாலின் vs TTV தினகரன்
ஸ்டாலின் vs போலி ஜாதி தலைவர்கள்
ஸ்டாலின் vs மீடியா ப்ரோக்கர்கள்
இன்னும் எத்தனை மக்கள் விரோதிகள் ஒன்னு கூடி வந்தாலும்!
மக்கள் தலைவர் MK ஸ்டாலின் அவர்களை ஒரு இன்ச் கூட அசைக்க முடியாது!🔥🔥🔥🔥🔥🖤❤️
#MKstalinEra