18வ��ு நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பொறுப்பேற்றேன்.
நாடாளுமன்றத்தில் இன்று ஏற்றுக் கொண்ட உறுதிமொழி:
மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள #தொல்காப்பியன்_திருமாவளவன் என்னும் நான் சட்டமுறையில் அமையுற்ற இந்திய அ��சமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும், ஏற்க உள்ள கடமையை அகத்தூய்மையுடன் ஆற்றுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.
Jai Democracy
Jai Constitution
நாள்: 25-06-2024
நேரம்: 2:48 pm
குவைத்தில் ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியத் தொழிலாளர்கள் எரிந்து பலியான செய்���ி தாங்கவொண்ணா துயரத்தைத் தருகிறது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய ஒன்றிய அரசு உறுதுணையாக இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்
தபால் வாக்கு செலுத்தும் அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே!
1. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த;
2. ஒப்பந்தப் பணி நியமனங���களை ஒழித்து, நிரந்தர வேலை பெற;
3. விடுப்பு நாட்களைப் பணமாகப் பெறும் முறையை ( leave encashment) மீண்டும் கொண்டுவர
திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்
02.03.2024 அன்று கட்சியின் தலைமையகம் அம்பேத்கர் திடலி���் உயர்நிலைக் குழு கூட்டம் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
#தீர்மானங்கள்:
1. இந்திய அளவில் எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை ஏழு அல்லது எட்டு கட்டங்களாக நடத்தும் நடைமுறையைக் கைவிட்டு இரண்டு அல்லது மூன்று கட்டங்களில் நடத்திட வேண்டுமெனவும்; அதற்கேற்ப தேர்தலுக்கான கால அட்���வணையை அறிவிக்க வேண்டுமெனவும் இந்திய தேர்தல் ஆணையத்தை இந்த உயர்நிலைக் குழு கேட்டுக்கொள்கிறது.
அத்துடன், வாக்குப்பதிவு நடப்பதற்கும் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்குமிடையிலான கால இடைவெளி ஒரு மாதத்திற்குதம் மேலாக இருப்பதைத் தவிர்க்க வேண்டுமென்றும்; அதற்கேற்ப வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஆகியவற்றை அறிவிக்க வேண்டுமெனவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இந்த உயர்நிலைக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
2. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களோடு 100% ஒப���புகை சீட்டு எந்திரங்களை இணைக்க வேண்டுமெனவும்; அந்த ஒப்புகை சீட்டுகளை மட்டுமே எண்ணித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டுமெனவும் மீண்டும் தேர்தல் ஆணையத்தை இந்த உயர்நிலைக் குழு வலியுறுத்துகிறது.
3. திரு. இராஜீவ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்த சாந்தன், ஜெயக்குமார், முருகன், ராபர்ட் பயாஸ் ஆகிய நால்வரும் தமிழ்நாடு அரசின் பெரும் முயற���சியால் உச்சநீதி மன்றத்தில் விடுதலை பெற்றனர். ஆனாலும், அவர்கள் தாம் விரும்பிய நாடுகளுக்குச் செல்வதற்கு ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை. அதனால் அவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இதனிடையே உடல்நலக் குறைவால் திரு. சாந்தன் அவர்கள் அண்மையில் மறைவெய்தியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது. உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட திரு.சாந்தன் அவர்கள் உடல் நலிவுற்று உயிரிழந்ததற்கு ஒன்றிய அரசே பொறுப்பாகும்.
இந்நிலையில், தற்போது சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மூவரின் கோரிக்கைகளையேற்று அவரவர் விரும்பும் நாடுகளுக்குச் செல்வ���ற்கு உரிய அனுமதியை வழங்குமாறு இந்திய ஒன்றிய அரசை இந்த உயர்நிலைக் குழு வலியுறுத்துகிறது.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விசிக.
இராமநாதபுரம் மாவட்டத்தின் மேனாள் செயலாளர் #பாம்பூர்_இருளன் அவர்கள் இன்று காலமானார் என்பதை அறிந்து பெரிதும் அதிர்ச்சியடைகிறேன். அவருக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
அவரை இழந்து வாடும் குட��ம்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#VCK #RamnaduVCK
இன்று இரவு '#திருமா_பட்டறையின்' மூலம் ஒருங்கிணைப்பட்டுள்ள 'வெல்லும் சனநாயகம் மாநாடு' குறித்த கருத்தமர்வில் பங்கேற்கிறேன்.
இது 100 ஆவது அமர்வு. பட்டறையின் நிறைவ�� நிகழ்வு.
தோழர்கள் பெருவாரியாகப் பங்கேற்றுச் சிறப்பிக்கவும்.
#நேரம்: இரவு 8.30 மணி.
தமிழ்நாட்டில் புயல் மழை-வெள்ளம்
இந்திய அரசே!
தீவிர பேரிடராக அறிவிப்பு செய்!
ரூ. 21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்கு! 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மீண்டும் வாக்குச்சிட���டு முறையை நடைமுறைப்படுத்து! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை...
We express our heartfelt wishes to the chairperson of Congress Parliament party
Ms #SoniaGandhiji on her B'day.
Wishing her for her success in the battle of social justice to restore the democracy and values of our constitution.
#Congress#Ccp