திரையுலகின் திசைவழிப் போக்கை மடைமாற்றம் செய்த பேராளுமை இயக்குநர் பாரதிராஜா!
-----------------------------------------
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. தவிர்க்க இயலாத நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நான் புது தில்லியில் இருப்பதால், அண்ணன் பாரதிராஜா அவர்களின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்த இயலாத நிலையில் உள்ளேன். அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.
என்மீது பேரன்பைச் செலுத்தியவர். 'என்னைவிட என் தந்தை தான் உங்களை மிகவும் நேசிப்பவர்' என்று அவரது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் தனது தந்தையிடம் அறிமுகப்படுத்தினார். 'நீயும் என் பிள்ளை தான் தம்பி' என்று இயக்குநரின் தந்தை என்னிடத்தில் நெகிழ்வுடன் கூறிய அந்த நிகழ்வு இன்னும் எனது நெஞ்சில் நிழலாடுகிறது.
திரையுலகின் திசைவழி போக்கை மடைமாற்றம் செய்த பேராளுமை இயக்குநர் பாரதிரஜா. அரை நூற்றாண்டுக்கு முன், ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் திரைக்கலையை அதீத ஒப்பனைகளிலிருந்து மீட்டு, எளிய மக்களின்இயல்பான வாழ்வியலை புதிய மரபாக நிலைநாட்டியவர். சாதியத்துக்கு எதிரான புரட்சிகர சிந்தனைகளை விதைக்கும் 'வேதம்புதிது' என்னும் திரைக் காவியத்தைத் தமிழுலகுக்குக் கொடையளித்தவர். அப்படத்தில் இனமுரசு சத்யராஜ் அவர்களைக் கொண்டு சாதி ஆதிக்கத்துக்கு எதிராக கர்ஜனை செய்தவர்.
"பாலுத்தேவர் என்பதில், 'பாலு' ஒங்க பேரு; 'தேவர்' என்ன நீங்க படிச்சு வாங்குன பட்டமா ?" - என்று அவர் ஒரு குழந்தையின் மூலம் எழுப்பிய கேள்வி, மனசாட்சியுள்ள ஒவ்வொருவரின் நெஞ்சையும் உலுக்கியது.
அப்படத்தின் கடைசி காட்சியில், 'இளம்பிஞ்சுகளையாவது சுதந்திரமாக வாழவிடுங்கள்'- என்று அறிவுறுத்தும் வகையில் மூத்தோரிடமிருந்து இளையோரைப் பிரித்துக் காட்டுவது இன்றும் கண்ணிலேயே நிற்கிறது.
'இளந் தலைமுறையினரின் நெஞ்சில் சாதி நஞ்சைப் பாய்ச்ச வேண்டாம்' என்கிற அவரது கருத்து, தமிழ்நாட்டில் அம்பேத்கர் இயக்கங்கள் வலுப்பெறாத காலத்தில் தெறித்துத் திரையுலகை அதிரவைத்த ஒன்றாகும்.
'சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை' என்னும் சிறுத்தைகளின் கருத்தை எமது மேடைகளில் வழிமொழிந்தவர். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சார்ந்தோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
மாநில, இன,கல்வி மற்றும் மொழி உரிமையை மீட்டெடுக்கும் தமிழ் உரிமை இயக்கத்தின் இவ்வறவழிப் போராட்டத்திற்கு மாணவர் மற்றும் இளைஞர்களோடு பங்கேற்க வேண்டுமாய் தங்களை அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
அணி திரண்டு வாரீர்
"சமயத்தில் பக்தி ஆன்மாவின் ஈடேற்றத்திற்கான (மோட்சத்திற்கான) வழியாக இருக்கலாம். ஆனால் அரசியலில், பக்தி அல்லது தனிநபர் வழிபாடு (தலைவர்களை நாயகனாக்கி வழிபடுவது) என்பது சீரழிவுக்கும், இறுதியில் சர்வாதிகாரத்திற்கும் செல்லும் உறுதியான பாதையாகும்."
-புரட்சியாளர் அம்பேத்கர்
இறையாளுமையும், சுதந்திரமும் பெற்ற இந்தியாவில்; வாழ்க்கைத் தத்துவம் மற்றும் சமூக அமைப்பு என்ற முறையில்.. பார்ப்பனியம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
-புரட்சியார் அம்பேத்கர்
மோடி தலைமையிலான பாசிச பா.ச.க., முன்மொழி கல்வி திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது இந்தி சமசுகிருத திணிப்பாகும். இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டிய மக்கள் விரோத இச்செயலைக் கண்டித்தும் நடைபெறும் தொடர் வண்டி மறியல் போரில் தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமாய் அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநில மக்களின் தாய்மொழி தமிழ் என்பதால், கற்றல் மொழி ஆட்சி மொழி மற்றும் நிர்வாக மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி 17.03.2026 அன்று புதுச்சேரியில், தமிழ் உரிமை இயக்கம் நடத்திய அணிவகுப்பு-முற்றுகைப் போர்.