குற்றம் செய்ய அச்சம் வேண்டும்; கொடுமைகள் எதிர்க்க துணிச்சல் வேண்டும் துவண்டு சுரண்டு கிடப்பதா வாழ்க்கை துணிந்து எழுந்து தொடங்கடா வாழ்க்கை!
-தொல்காப்பியன் திருமாவளவன்
~~~~~~~~~~~~~~~~~~
பதிவாளர் *மு.செல்வகுமார்*📘📕
சாதி மதம் சார்ந்த அடையாளங்கள் பள்ளிகளில் இருக்கக்கூடாது என்று இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் வழங்கியது.
ஆனால் கீழ்க்கண்ட பள்ளியில் நேரடியாகவே ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை திணிக்கின்றார்கள். பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் #அஜித்குமார் என்னும் இளைஞர் காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலால் படுகொலையாகியிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இதனை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
தம்பி அஜித்குமார் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி ரூபாய் ஒரு லட்சம் நிதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கினேன்.
காவல்துறையின் வன்கொடுமைக்கு பலியான தம்பி அஜித்குமார் அவர்களின் படத்துக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினேன்!
அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு...
ஜூன் 30 மேலவளவு போராளிகளின் நினைவு நாள்
“நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படியே வாழ்த்தல் வீரம் “
கொள்கை களத்தில்
கோழைகளால் கொலையுண்ட
மதுரை மண் தந்த மாவீரர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் வீரவணக்கம்.
அஞ்சலி செலுத்த மதுரையை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்த போது மாவட்டச் செயலாளர் தோழர் அலங்கை செல்வராசு தொடர்பில் வந்தார். சனாதன சக்திகளின் ஊடுருவலால் சிலர் விடுதலை சிறுத்தைகள் மீது அபாண்டத்தையும் அவதூறையும் சுமத்துவதை இன்னும் நிறுத்தவில்லை என வருத்தத்தை தெரிவித்தார்.
கொடூரமான இந��த படுகொலையை தொடர்ந்து நாடே அதிர்ச்சியில் உறைந்து கிடந்த போது உடனடி எதிர்வினையாய் நெய்வேலியில் வெடித்து சிதறிய எரிமலை குழம்பு தான் தமிழகத்தின் மௌனத்தை கிழித்தது. நெய்வேலி நகரம் புரட்சியாளர் அம்பேத்கர் சதுக்கத்திற்கு முன்னால் அம்பேத்கர் கைகாட்டி நிற்கும் திசையில் எரிந்து சாம்பலாகி கிடந்தது அரசு பேருந்து. அதை தொடர்ந்துதான் தமிழகமே பற்றி எரிய தொடங்கியது.
சிறுத்தைகள் எனும் பிரளயம் தான் மாவட்ட எல்லைகளைக் கடந்து ம��்களை பிணைத்தது.
மறைந்திருந்து கொன்றவர்கள் அசிங்கமான கோழைகள் என்பதையும் உரிமைக் களத்தில் உறுதியாக நின்றவர்களே மாவீரர்கள் என்பதையும் எழுச்சித் தமிழரின் முழக்கம் தான் உலகுக்கு உணர்த்தியது.
#melavalavu
#அரசியல்_உரிமைப்போராளிகள்
சூன்-02
இசைஞானி இளையராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#thiruma_army
மே 31 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்ட��்தைக் கண்டித்தும் தேசம் முழுவதும் மதச்சார்பின்மையைக் காத்திட வலியுறுத்தியும் திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் '#மதச்சார்பின்மை_காப்போம்' மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியின் ஒருங்கிணைப்பு பணிகள் குறித்த தென்மண்டல சிறப்புச் செயற்குழுக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த முன்னணிப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். 'மதச்சார்பின்மை காப்போம்' மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியின் அவசியத்தை குறித்தும் அதனை சிறப்பாக ஒருங்கிணைத்திட விடுதலைச் சிறுத்தைகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் வழிகாட்டுதல்களை வழங்கி விசிக மண்டலச் சிறப்புச் செயற்குழுவில் உரையாற்றினேன்!
கோகுல்ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாக மதுரை நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பொழுது நானும் உடன் இருந்தேன். கோகுல்ராஜ் தாயாரிடம் பேட்டி எடுத்து என்னுடைய யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்தி���ுந்தேன்.
அந்த தாயினுடைய முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.. தன் மகன் இறந்திருந்த போதிலும், நீதியின் மூலமாக மீண்டும் பிறந்ததைப் போன்றே உணர்வு கொண்டிருந்தார்...
💙❤️