இந்திய விடுதலைப்போரில் ஆதிக்கவாதிகளை விரட்டியடிக்க மாபெரும் போர் புரிந்த வீர மருதிருவர் நினைவு நாள் இன்று.
மக்களிடம் இருந்து உருவான மன்னர்கள் என்று போற்றப்பட்ட மருதுபாண்டியர்கள், அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து உருவாக்கிய சமத்துவப் போர்ப்படை, ஆங்கிலேயர்களை அலறச்செய்தது.
சிவகங்கைச் சீமையில் இருந்து புறப்பட்டு, இந்திய விடுதலைக்காக களம்கண்ட தென்னிந்திய மன்னர்களை ஒருங்கிணைத்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள்.
’ஜம்புத்தீவு’ பிரகடனத்தை வெளியிட்டு நாடெங்கும் விடுதலை உணர்வை தட்டியெழுப்பிய மாமன்னர் மருதுபாண்டியர்களின் தியாகமும் – வீரமும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
வாழ்க அவர்கள் புகழ்!
மண்ணின் மானம் காத்த மருதிருவருக்கு மானமிகு வீரவணக்கம்!
புறநானூற்றுத் தமிழர் வீரத்துக்கு இலக்கணமாக ஆங்கிலேயரை எதிர்த்து நின்று போர் புரிந்த சிவகங்கைச் சீமையின் சீற்றமிகு காளைகள் பெரிய மருது அவர்களும் சின்ன மருது அவர்களும்.
இந்தியர் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு போராடினால் அந்நியர் ஆட்சியை அடியோடு அகற்றிடலாம் என அனைவருக்கும் முன்பே 'ஜம்புத்தீவு பிரகடனம்' வழியாக முழங்கிய சமூக நல்லிணக்க வீரர்கள் மருது சகோதரர்கள்.
உயிரைத் தியாகம் செய்து விடுதலை உணர்வை விதைத்த அந்தப் போராளிகளின் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கம்!
#MarudhuBrothers
மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் Dummy CM சொன்ன மாற்றமா?
அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது.
அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர்.
கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த MLA.
தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் - அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள்.
ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை?
என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்.
*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்!
இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல;
’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!
@VanniTamizhVCK
செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் - காவல்துறையையும் கண்டித்து தி.மு.கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது.
முதலமைச்சர் தன் Reels மோகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பிள்ளையை தொலைத்துத் தவிக்கும் அந்தக்குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல் போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
@MTharaniventhan@GingeeMasthan
மாஃபியா கும்பலுக்கு துணிச்சலைக் கொடுத்தது யார்?
இலங்கையைச் சேர்ந்தவர் கனடாவில் இருந்து வந்து நாகையில் தங்கி, இங்கிருந்து த.வெ.க. நிர்வாகியிடம் போதைப் பொருளை வாங்கி நாகை வழியாக இலங்கைக்கு கடத்தப் பார்த்துள்ளார். தமிழ்நாட்டின் பாதுகாப்பு எந்தளவுக்கு கேள்விக் குறி ஆகி இருக்கிறது பார்த்தீர்களா?
போதைக் கும்பலுக்கு இத்தகைய துணிச்சலைக் கொடுத்தது யார்? த.வெ.க. ஆட்சி தானே?
‘சிங்கப் பெண்’ அதிரடிப்படை ஆரம்பித்தார் விஜய். அது முதல் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் ஆனது. போதைப் பொருள் தடுப்பு அதிரடிப்படை தொடங்கினார். அது முதல் போதை மருந்து நடமாட்டம் அதிகம் ஆகி உள்ளது. எல்லாமே விளம்பர மாயை. விளம்பர மாஃபியாவாக மட்டுமே இருக்கிறது.
- முரசொலி
#Murasoli #Drugs #TVKFails #TVKVijayFails #Meth #TamilNadu #KalaignarSeithigal
கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இந்தச்சூழலில், கழகம் - முற்போக்கு அமைப்புகள் - மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓட்டுக்காக மாமா மாமா என்று பேசிவிட்டு, இன்று தினம் தினம் பல பிஞ்சு குழந்தைகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனாலும், இந்த கேடுகெட்ட மூர்த்தி மாமா வாய்மூடி மௌனமாக இருக்கிறார்.
பிஞ்சுகளை ஓட்டுக்காகப் பயன்படுத்திவிட்டு, இப்பொழுது அந்தப் பிஞ்சுகளைக் காக்கக்கூடத் துப்பில்லாத முதலமைச்சராக இருக்கிறார் இந்த டம்மி.
#TVKFailsTN
நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் எனப் பலவற்றிலும் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் இராசராசச் சோழன்! அவரது பிறந்தநாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடிட, 2022-ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசில் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.
மேலும், துறைவாரியாகச் சோழர் காலச் சிறப்புகளை இக்காலத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 56 கோடி ரூபாய் செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க #DravidianModel ஆட்சியில் விதையை ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாகிட வேண்டும்!
பழக்க தோஷத்தில் அந்தத் திட்டத்தையும் த.வெ.க. அரசு குறுகிய பார்வையுடன் இரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவோம்.
இராசராசச் சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க!
#RajaRajaChola #Cholas
புகைப்படத்தில் மழை நீரை சரி செய்யும் பணியில் ஈடுட்டிருப்பது திமுக மாநகராட்சி உறுப்பினர் திருமதி Bharathi S என்று கூட தெரியாமல், ஏதோ தானே களத்தில் இரவு முழுவதும் வேலை செய்தது போல வெட்கமில்லாமல் Before and After screenshot போட்டு பதிவிட்டுள்ளார் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் ரோவந்த்.
ஒரு பெண்மணி இரவில் களத்தில் இறங்கி வேலை செய்யும் போது வீட்டுக்குள்ள முடங்கி கிடந்து.
அடுத்தவர் உழைப்பை திருடும் இந்த அற்ப வேலை ஏன் உங்களுக்கு. உழைப்பதற்கு உடம்பு வலித்தால் உங்களுக்கு மக்கள் பணி ஒரு கேடா...???
@DMKITwing@dmk_youthwing@PriyarajanDMK
#TVKFails