நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளர் வெண்ணிலா தாயுமானவன் அவர்கள் தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்திருந்த வழக்கில் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட CRZ அனுமதியை எதிர்த்து வெண்ணிலா தாயுமானவன் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று 19.06.2026 இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை முன்னெடுக்கிறதா அல்லது கை விடுகிறதா என்று தெரிவிக்க வேண்டும் என அவர் தரப்பில் நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறையின் செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பா. விக்னேஷ் அவர்கள் வாதிட்டார். CRZ அனுமதி வழங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் இத்திட்டத்திற்கானக் கட்டுமானங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் தமிழ்நாடு அரசு திட்டத்தை கைவிடுமானால் வழக்கை முடித்து வைக்கலாம் என்றும், இதுகுறித்து பதிலளிக்கவும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசும்பொழுது நீதியரசர் புஷ்பா சத்தியநாராயணன் அவர்கள் நினைவு சின்னங்கள் அமைப்பதில் தவறு இல்லை, அதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் கடலுக்குள் வைப்பது ஏன்? பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தான் செயல்பட முடியும் என்றும் கூறினார்.
இவ்வழக்கு 28.07.2026 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2001இல் பாஜகவோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது விசிக...
தமிழ்நாட்டில் பாஜக என்றால் என்னவென்றே தெரியாத போது அவர்களை அறிமுகப்படுத்தி,கூட்டணி வைத்து,எச்.ராஜாவை எம்எல்ஏவாக்கி, பாஜகவை இங்கு காலூன்று வைத்தது திமுக & விசிக...
@apjagadesan 20 வருசமா அவனுக்கு விளக்கு பிடிச்ச மாமா பய நீதானே நீ சொன்னா உண்மையைத்தான் இருக்கும்
நீயெல்லாம் ஒரு ஆளுப்புளுத்தினு பொதுவெளியில பேசவந்துட்ட மூடிட்டு போடா வாழ்நாள் அப்ரண்டிஸ்
உதயநிதி அவர்களே, உங்களிடம் மனசாட்சியை எதிர்பார்ப்பது எங்கள் தவறாக கூட இருக்கலாம். ஆனால் உங்கள் அப்பாவும் நீங்களும் பேனரால் இறந்த
சுபஸ்ரீ வீட்டுக்கு சென்று சுபஸ்ரீ பெற்றோரை சந்தித்து கொடுத்த வாக்குறுதிகளை ஞாபகப்படுத்துகிறோம்.
உங்களுடைய விளம்பரத்திற்காக எவன் செத்தால் எனக்கென்ன என்ற உங்கள் நிலைப்பாடு சரியா? மக்களுக்காக கட்சி நடத்துகிறீர்களா? அல்லது மக்களை போட்டு தள்ளும் கட்சி நடத்துகிறீர்களா?
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமை காவல் அதிகாரிகளாகிய நீங்கள் எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படி திமுகவிற்கு வேலை பார்ப்பது சரியா? தினமும் சாப்பாடு உண்ணும் போது எங்கள் வரிப்பணத்தில் தான் அந்த சாப்பாடு உங்களுக்கு வந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
@Office_of_Udhay@Udhaystalin@mkstalin
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை?
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ஐயா பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராம மக்களை காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச்செல்லும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. சிறிதும் மனச்சான்றற்ற திமுக அரசின் இத்தகைய கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகள், கால்நடைகள், விளைவித்த பயிர்கள் என அனைத்தையும் இழந்து வாழ்வா-சாவா நிலையிலிருந்த மக்களை உரிய நேரத்தில் சந்தித்து துயர்துடைப்பு உதவிகள் செய்யாத தமிழ்நாடு அரசின் மீதான அறச்சீற்றத்தின் வெளிப்பாடாக யாரோ ஒருவர் அமைச்சர் மீது சேற்றினை வீசியதற்காக, வன்மம் கொண்டு, ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு, அப்பாவி கிராம மக்கள் அனைவரையும், பொங்கல் விழாவினைக்கூட நிம்மதியாக கொண்டாடவிடாமல் குரூர மனப்பான்மையுடன் கைது செய்து சிறையிலடைப்பது என்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை, அவர்கள் துன்பப்படும் வேளையில் சென்று சந்திக்காது மக்களைத் துயரச்சேற்றில் தள்ளிய அமைச்சருக்கும், திமுக அரசுக்கும் என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது? அமைச்சர் பொன்முடி பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற மனிதப்புனிதரா?
மகளுக்கும் ஆயிரம் - அம்மாவுக்கும் ஆயிரம் என்றும், ஓசி பஸ் என்றும் தமிழ்நாட்டு மகளிரை இழித்துப் பேசியது, மனு கொடுக்க வந்த மூதாட்டியைத் தலையில் அடித்து தாக்கியது என அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்ட அமைச்சர் பொன்முடி மீது திமுக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த கொடூரர்களை இரண்டு ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்க திறனற்ற திமுக அரசு, அமைச்சர் மீது சேறு வீசியதற்காக அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சேறு வீசியவர்களை கைது செய்ய இத்தனை வேகம் காட்டும் தமிழ்நாடு காவல்துறை அதில் நூற்றில் ஒரு பங்கு வேகத்தையாவது குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் ஏன் காட்டவில்லை? இதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா? இதுதான் திராவிட மாடல் அரசின் இந்தியா வியக்கும் சாதனையா?
ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் மமதையில், ஆணவப்போக்குடன் திமுக அரசு மேற்கொள்ளும் கொடுங்கோன்மைச் செயல்கள் அனைத்திற்கும் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ஆகவே, வனத்துறை அமைச்சர் ஐயா பொன்முடி மீது சேறு வீசியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவேல்பட்டு கிராம மக்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம்தமிழர் கட்சி
ஆளும் திமுக அரசின் அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து தென்னிந்தியப் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு பக்கச் சார்போடு செயல்படுவதா?
ஆளும் திமுக அரசின் அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து, தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஒரு பக்க சார்பாக செயல்படுவது அவமானகரமானது. தம்பி பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்த ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வில், ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகழ் நீயே என் தமிழ்த்தாயே!’ எனும் பாடல் ஒலிக்கச் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அபத்தமானது. அது புரட்சிப்பாவலர் பாரதிதாசன் எழுதிய வாழ்த்துப்பா! அப்பாடல் புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்தாக இருப்பதாலேயே, தமிழ்நாட்டில் ஒலிக்கச் செய்யக்கூடாதென்பது அடிப்படையே இல்லாததாகும். புத்தக வெளியீட்டு நிகழ்வு என்பது அரசு நடத்தும் நிகழ்வல்ல எனும்போது அரசின் அரசாணை ஒருபோதும் எங்களைக் கட்டுப்படுத்தாது. அதனால், நிகழ்வரங்கில் எந்தப் பாடலை ஒலிக்கச் செய்ய வேண்டுமென வேறு எவரும் தீர்மானிக்க முடியாது என்பது வெளிப்படையானது. தமிழையும், தமிழ்த்தாயையும் போற்றித் தொழும் பாட்டன் பாரதிதாசன் எழுதிய வாழ்த்துப்பாடலை ஒலிபரப்புச் செய்வதற்குப் பொங்கும் பெருமக்கள், தமிழில் வணிகப்பெயர்ப் பலகைகளை வைக்கக்கோரிப் போராடிய இனமானத் தமிழர்களைக் கடந்தவாரம் திமுக அரசு கைதுசெய்து சிறைப்படுத்தியபோது உங்கள் நியாயத்தராசை எங்கு அடமானம் வைத்தீர்கள்?
இது தமிழ்நாடு! தமிழுக்கும், தமிழர்களுக்குமான தேசம்; தமிழ்ப்பெருங்குடி மக்களின் வரலாற்றுத்தாய்நிலம்! இந்த நிலத்தில் பாரதிதாசன் எழுதிய தமிழ்த்தாய் பாடலை ஒலிக்கச் செய்வதே குற்றமென்றால், தமிழர்களை திராவிடர்களென திரிபுவாதம் செய்து செய்யப்படும் அடையாள மோசடித்தனம் மாபெரும் குற்றமில்லையா?
புத்தகக் கண்காட்சி அரங்கில் இருக்கும் பாதைகளுக்கு இளங்கோவடிகள், கம்பர், பாரதிதாசன், வள்ளலார் என தமிழ் முன்னோர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட அந்த வரிசையில் எந்த அடிப்படையில் ஐயா கருணாநிதியின் பெயரைச் சூட்டினீர்கள்? பெருந்தலைவர் காமராசர் பெயர் இல்லாத இடத்தில் ஐயா கருணாநிதி பெயர் மட்டும் எப்படி வந்தது? ஐயா காமராசரைவிட கருணாநிதி பெரிய மக்கள் தலைவரா? யாரை மகிழ்விக்க இந்த வேலை நடக்கிறது? புத்தகக் கண்காட்சி அரங்கில் தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகளில் அமைச்சர் பெருமக்களும், ஆளுங்கட்சியின் நிர்வாகிகளும் திமுகவின் புகழ்பாடலாம்; ஐயா கருணாநிதியின் துதிபாடலாம். ஆளுங்கட்சிக்கு வெண்சாமரம் வீசலாம். அப்போதெல்லாம் கெட்டுப் போகாத மேடை நாகரீகமும், சபையின் கண்ணியமும் நான் பேசுகிறபோது கெட்டுப் போய்விடுகிறதா? திமுகவையும், திராவிடத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து பேசிக்கொள்ளலாம். அப்போதெல்லாம் பெருமைக்குரிய பதிப்பகச் செம்மல்களுக்கு எந்த பொறுமலும் வருவதில்லை? நான் விமர்சித்துப் பேசினால் மட்டும் மேடையின் மாண்பு குலைந்துவிடுகிறதா? மாற்றுக்கருத்தையே ஏற்காத இந்தப் போக்கு சனநாயக விரோதம் இல்லையா? எல்லாத் தரப்புக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அறிவுலகப் பெருமக்கள், ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறி நிற்பதேன்? 75 இலட்ச ரூபாய் நன்கொடைக்கு அறிவுலகத்தை ஆளுங்கட்சியிடம் அடமானம் வைக்கலாமா? இது வெட்கக்கேடு இல்லையா? நான் பங்கேற்றுப் பேசியப் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வில் இருந்தார் என்பதற்காக இந்த செயல்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத டிஸ்கவரி பதிப்பகத்தின் நிறுவனர் தம்பி வேடியப்பனுக்கு நெருக்கடி கொடுத்து மன்னிப்புக் கேட்க வைத்திருப்பது வெளிப்படையான அதிகார அச்சுறுத்தல் இல்லையா? டிஸ்கவரி பதிப்பகம் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த நூல்களை வெளியிட்டிருக்கும் நிலையில், தமிழ்த்தேசியம் சார்ந்த ஒரே ஒரு நூலை வெளியிட்டதற்கு அவரைக் குறிவைப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. அறிவுலகத்தின் அடையாளமாகத் திகழும் பதிப்பகத்தார்களும், புத்தக விற்பனையாளர்களும் ஆளுங்கட்சியிடம் சரணாகதி அடைந்திருப்பது சகித்துக் கொள்ளவே முடியாத இழிநிலையாகும்.
ஆகவே, தென்னிந்தியப் புத்தகப் பதிப்பகத்தார் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஒருதலைபட்சமானச் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு, டிஸ்கவரி பதிப்பகத்தின் நிறுவனர் தம்பி வேடியப்பன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில், காவல்துறை மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் FIR-ஐ எப்படி இணையத்தில் வெளியிட்டது? பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை கூட @mkstalin மாடல் அரசின் காவல்துறைக்கு தெரியாதா?
காமக்கொடூரன் ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இவனை இத்தனை நாட்கள் சுதந்திரமாக நடமாடவிட்டதற்கு திமுக அரசின் காவல்துறையே முழு பொறுப்பு!
ஞானசேகரன் திமுக உறுப்பினரே இல்லை என்று அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ள நிலையில், அவர் திமுகவின் பகுதி துணை அமைப்பாளர் பொறுப்பில் உள்ளதற்கான திமுக நோட்டிஸ், முரசொலி நாளேடு செய்தி உட்பட பல ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன், நேற்று இரவே விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இவ்வளவு முக்கியமான வழக்கின் குற்றவாளியை எதற்கு காவல்துறை விடுவிக்க முயற்சித்தது? ஆளுங்கட்சியான திமுகவில் ஞானசேகரன் பொறுப்பில் இருப்பதை இத்துடன் பொருத்திப் பார்த்தால், இவ்வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதற்கான சந்தேகம் மேலும் வலுக்கிறது.
FIR-ல் ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. யார்அந்த நபர்?
#யார்_அந்த_SIR ?
யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த திமுக அரசு?
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது திரு.@mkstalin மாடல் அரசின் பொறுப்பு!
இனி இந்த வழக்கை திமுக அரசின் காவல்துறை விசாரிப்பதற்கு தார்மீகத் தகுதியில்லை!
எந்தவித அரசியல் இடையூறும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க, இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்!
@CMOTamilnadu
ஆமாடா I am Telugu guy, I am Naidu அப்படின்னு சொன்னா மட்டும் பெருமை வருதா
வந்துருவாங்க ஆட்டிகிட்டு ஆந்திராவுல இருந்து இங்க வந்து தமிழனுக்கு சாதி ஒழிப்பு பாடம் எடுக்க போய் முதல்ல ஊர்ல சாதிய ஒழிச்சிட்டு வாங்கடா
ஜாதி ஒழிப்பு பத்தி எந்த தெலுங்கனும் தமிழனுக்கு பாடம் எடுக்க தேவையில்லை
பண்ணையார்களைக் காப்பாற்ற கம்யூனிஸ்டுகளைச் சாடிய ஈவெராவின் அயோக்கியத்தனம்!
கீழ்வெண்மணி படுகொலை நடந்து இரண்டாவது நாளில்தான் விடுதலை ஏட்டில் அதுகுறித்தான செய்தி வருகிறது. முதல் பக்கத்தில் பெட்டிச்செய்தியாகப் போட்டிருக்கிறார்கள். அதுவும், 'விவசாயத் தொழிலாளர்களிடையே மோதல்' என்று பச்சைப்பொய்யைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
இந்த அயோக்கியத்தனத்தைச் சுட்டிக்காட்டினால், "அன்றைக்குத் தகவல் தொடர்பு சிக்கல் இருந்ததால் அவ்வாறு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" என ஒத்து ஊதுகிறார்கள்; பெரியார் உடல்நலமில்லாது இருந்தாரென சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். 'விவசாயத் தொழிலாளர்களிடையே மோதல்' என எழுதப்பட்டதை, பின்னாட்களில் மறுத்து விடுதலை ஏடு ஒருபோதும் எழுதவில்லை என்பதன் மூலம் அவர்களது உள்நோக்கத்தை அறிந்துகொள்ளலாம்.
பெரியார் ஈவெரா உடல்நலம் தேறி, 12-01-69 அன்று நாகை, செம்பனார்கோயிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில் மக்களுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் கட்சியை சாடினாரே ஒழிய, பண்ணையார்களின் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஒரு இடத்தில்கூட சாடவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியின் கலகத்தின் காரணமாகவே, கீழ்வெண்படுகொலை நடைபெற்றதாகக் கூறி, கம்யூனிஸ்டுகளைக் குற்றவாளிக் கூண்டிலேற்றி, பண்ணையார்களைக் காப்பாற்ற முயன்றார் ஈவெரா.
செம்பனார்கோயில் பொதுக்கூட்டத்தில் ஈவெரா பேசியதிலிருந்து,
"நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.
நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம் கொடுக்காமல், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளின் குறி கீழ்த்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்."
*அமைச்சர் பதவிக்கான துளியும் தகுதியற்ற ஒட்டுண்ணி போன்ற ரகுபதியின் பிதற்றலுக்கு கடும் கண்டனம்*
விடியா திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் வெட்டவெளிச்சமாக்கிவிட்ட விரக்தியில், ரகுபதி எனும் உதிர்ந்த ரோமம் பதில் என்ற பெயரில் வாந்தியைக் கக்கியிருக்கிறது.
அமைச்சர் என்ற பதவிக்கான எந்தவித தகுதியுமே இல்லாத வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி.
அண்ணா தி.மு.க. வேட்டியைக் கட்டி அரசியல் வாழ்வு பெற்று, இந்த இயக்கத் தொண்டர்கள் சிந்திய வியர்வையிலும் ரத்தத்திலும் சட்டமன்ற உறுப்பினராகி, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெரும் உழைப்பால் அமைச்சர் பதவியைப் பெற்ற இந்த ரகுபதிக்கு, வாழ்வளித்த இயக்கத்தின் மீதே இழிச்சொல் உரைக்க நா கூசவில்லையா?
அஇஅதிமுக கொடுத்த முகவரியால் இன்று வரை அரசியல் பிழைப்பு நடத்தும் ரகுபதி, திமுகவின் முதல் குடும்பத்தின் சிறந்த கொத்தடிமை விருது பெற முயற்சிப்பது அவருடைய தனிப்பட்ட வேள்வியாக இருக்கலாம். அதற்கு அஇஅதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக அவரையே வந்து சேரும்.
கருணாநிதி ஆட்சியில் விவசாய பம்பு செட்களுக்காண மின் கட்டணம் குறித்து கேட்ட விவசாயிகளை ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வரலாற்றை ரகுபதி திமுக-வில் இணைந்த பின் வசதியாக மறந்து விட்டாரா?
"எங்கும் கொலை; எதிலும் கொலை" என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல.
திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது @mkstalin ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி!
இதுமட்டுமின்றி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் செய்திகளில் வந்தவை:
●சென்னை தி. நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு
●சிவகங்கையில் தாயின் கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை
●சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து.
"தனிப்பட்ட கொலைகள்" என்று இன்னும் எத்தனை நாட்கள் தான் திரு. @mkstalin-ன் திமுக அரசு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கடந்து செல்லப் போகிறது?
நிர்வாகத் திறன் துளியும் இல்லாமல், சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத திரு. @mkstalin-க்கு எனது கடும் கண்டனம்.
மேற்சொன்ன குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், போட்டோஷூட்டிலும், மடைமாற்று அரசியலிலும் மட்டுமே செலுத்தும் கவனத்தை தனது முதல் பணியான சட்டம் ஒழுங்கை காப்பதிலும் செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 9ஆம் தேதி காணாமல் போன கருப்பசாமி என்ற சிறுவன், 10ஆம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இன்று அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சிறுவன் கழுத்தில் இருந்த நகை மாயமாகி உள்ள நிலையில், புகார் அளித்த அன்றே தீவிரமாக காவல்துறை விசாரித்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்று குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.
விடியா திமுக அரசின் காவல்துறை, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மெத்தனப் போக்கில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
இது தான் சட்டம் ஒழுங்கை ஒரு முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதமா திரு. @mkstalin ?
சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தாவிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என திரு. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial