‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி.
அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வா�� இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்.
தமிழ் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் #TVKVijay ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு கடைசியாக பாடப்பட்டது.
மாற்றம். மக்கள் கேட்ட நல்ல மாற்றம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி திரு. விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும்.
என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப��ப��தும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தமிழக வெற்றிக��� கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.
— கமல் ஹாசன்.
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சௌத்ரி அவர்கள் சாலை விபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி அதிர்ச்சியையும�� சோகத்தையும் தருகிறது.
சினிமாவில் புது முயற்சிகளுக்குத் தயங்காத துணிச்சல்காரர்; பலரை அறிமுகம் செய்தும் பலருக்குத் திருப்புமுனை ஏற்படுத்தியும் நிலைநிறுத்தியவர்; சாதிக்க விரும்பும் இளம் கலைஞர்களுக்குச் ச���ணாலயமாக இருந்தவர் இப்படி நம்மை விட்டு பிரிந்தது தாங்கவொண்ணாத் துயர்.
அன்புத் தந்தையை இழந்து வாடும் தம்பி ஜீவா, தம்பி ரமேஷ் மற்றும் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காடு திருத்தி நாடாக்கியது உழைப்பு
உண்ணத் தந்து உயிர்கொடுப்பது உழைப்பு
உலக மாந்தரை ஒன்றாக்கியது உழைப்பு
உழைப்பு இன்றேல் உயிர் இல்லை உயர்வில்லை
உழைப்பையே மூச்சாய்க்கொண்ட உழைப்பாளர்க்கு என் வணக்கம்.
என்னை பொறுத்தவரை மக்கள் நீதி மய்யம் 2026 தேர்தலில் போட்டியிடாதது வருத்த��ளிக்கிறது.. இருந்தபொழுதும் நம்மவர் அவர்கள் புகட்டியிருக்கும் அரசியல் பாடம் வரவேற்கத்தக்கது..
என் வாக்கு எனது உரிமை.
உங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் செய்யுங்கள். சிந்தித்து வாக்களியுங்கள்.
தேர்தல்தேதி:23.4.26