🔴 வட்டுவாகால் விகாரைக்குக் கீழே செம்மணியை விடப் பெரிய மனிதப் புதைகுழி உள்ளது!
முல்லைத்தீவு: வட்டுவாகால் விகாரைக்குக் கீழே அகழ்வுப் பணிகளை மேற்கொண்டால், செம்மணி புதைகுழியை விடப் பல மடங்கு பெரியதொரு மனிதப் புதைகுழி அடையாளம் காணப்படும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எனத் தமிழ்க் குடும்பங்கள் முழுவதுமாகக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர். இது இலங்கையின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்திற்கான நிலையான சாட்சியாக விளங்கும் நிலையில், இதற்கு இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் என்ன பதில் கூறப்போகின்றன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய சந்தேகத்திற்குரிய புதைகுழிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
“தமிழ் இனத்தின் மீதான திட்டமிட்ட அழிவை இலங்கை அரசின் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளனர். முன்னாள் ஆட்சியாளர்கள் எமது இனத்தை வன்முறையாக அழித்தமைக்கான அசைக்க முடியாத சாட்சிகள் இயற்கையின் நீதியால் இப்போது ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன.
செம்மணியில் தற்போதைய அகழ்வுகள் மூலம் வெளிவரும் உண்மைகள் உலகத்தையே உலுக்கியுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளில் இன்னும் எத்தனையோ இடங்களில் இதுபோன்ற மனிதப் புதைகுழிகள் இரகசியமாக மூடிமறைக்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாகத் தோண்டத் தொடங்கினால், இன்னும் பேரதிர்ச்சியைத் தரும் வகையில் மனித எலும்புக் குவியல்கள் தொடர்ந்து கிடைக்கும்.
குறிப்பாக முல்லைத்தீவு வட்டுவாகாலில் உள்ள விகாரைக்குக் கீழே அகழ்வு செய்தால், செம்மணியை விடப் பெரிய புதைகுழி வெளிச்சத்துக்கு வரும். இதற்காக விகாரையை உடைக்க வேண்டிய அவசியமில்லை; நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி நிலத்தடியை ஸ்கேன் செய்வதன் மூலமே அங்கு எத்தனை ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக அறிய முடியும்.
இதேபோல் கேப்பாப்பிலவு போன்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பாரிய புதைகுழிகள் இருக்கலாம் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இன்றும் வாழ்கின்றனர். வடக்கு-கிழக்கின் பல இடங்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கூட்டமாகப் புதைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகத்திற்குரிய அனைத்துப் புதைகுழிகளும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் முழுமையாகத் தோண்டப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். சர்வதேச சமூகம் நேரடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பாரபட்சமற்ற நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே எங்கள் முக்கிய எதிர்பார்ப்பு.”
-பிரதி பதிவு
அன்புத்தம்பி மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள #ஹபீபி திரைப்படம் அன்பின் நெகிழ்வோடு காலத்தைக் கடந்து நீண்ட நாட்கள் வாழக்கூடிய ஒப்பற்ற ஒர் திரைக்காவியம்.
இன்றும் என் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற அந்த வலியை ஒரு சிறு சிதைவுமின்றி மிக நேர்த்தியான ஒரு படைப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.
அரிதினும் அரிதாக எப்போதாவது தான் இது போன்ற படைப்புகள் தமிழ்த்திரையுலகில் வெளிவருகிறது. அதில் மிக மிக குறிப்பிடத்தக்க ஒரு அரிய படைப்பாக இத்திரைப்படத்தை நான் பார்க்கிறேன்.
இப்படைப்பு மாபெரும் வெற்றியடைந்து, இதற்காக உழைத்த அனைவருக்கும் பெரும்புகழைச் சேர்க்க வேண்டுமென்று எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாவிடம் துவா செய்கிறேன்.
படக்குழுவினருக்கு என் அன்பும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்.
https://t.co/4zfPOgYdvT
#Habeebi
@meerafilmdr@Romeopictures_@mynameisraahul@gksbroscompany #NesamEntertainment
@SamCSmusic@MMuthuswami@esha_actor #Malavikamanoj #DirectorKasthuriRaja #VSMohamedAmeen @SureshChandraa@AbdulNassarOffl@DoneChannel1@promoworkstudio@Udaykumar_Mix@edit_mathi@YugabhaarathiYb@MashookRahman #karthiknetha #AppunniSajan #AnusreyaRajan #dhanasreesudhakaran #ismathbanu #rekhakumanan #jayashreebinuraj #ganga
முதல்வர் விஜய்யை விமர்சித்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் இட்டப் பதிவுக்காக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் ஹுசைன் கைது
#DinakaranNews | #TVKVijay | #NTK
விடுதலைப் போராக வீசிக் கொண்டிருக்கும் வரலாற்றுப் புயல். எமது மண்ணில் காலங்காலமாக நிலைத்திருந்த பழமைவாத விருட்சங்களை வேரோடு பிடுங்கி வீழ்த்திவருகின்றது;
எமது மனக்குகையில் குடியிருந்த மூட நம்பிக்கைப் பேய்கள் விரட்டப்பட்டுவருகின்றன;
எமது சமூகக் கருத்துலகில் புதிய பார்வை மலர்கிறது.
புதிய விழிப்புணர்வு தோன்றிவருகின்றது;
சமூக உறவுகளில் புரட்சிகரமான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
-மேதகு தேசியத்தலைவர்
தமிழ்நாட்டின் இளம் சதுரங்க வீரர் அன்புமகன் பிரக்ஞானந்தா அவர்கள் நார்வே சதுரங்க தொடர் - 2026 வாகையர் பட்டத்தை வென்று தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளதை அறிந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன்.
உலகின் முன்னணி சதுரங்க வீரர்களையெல்லாம் வீழ்த்தி இந்தியப் பெருநாட்டிலேயே முதன்முறையாக நார்வே சதுரங்கப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தா, சதுரங்க ஆட்டத்தில் தமக்குள்ள அளப்பரிய தனித்திறன் மூலம் உலக வாகையர் பட்டத்தை வெல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.
வருங்காலங்களில் மேலும் பல பன்னாட்டு சதுரங்கப் பட்டங்களை வென்று, உலகின் முதல்நிலை சதுரங்க வீரராகத் திகழ அன்புமகன் பிரக்ஞானந்தாவிற்கு என்னுடைய பேரன்பும், வாழ்த்துகளும்!
@rpraggnachess
“திமுகவையும் அதிமுகவையும் ஒழிப்பேன்” என்று கூறும் நீன்க , அந்தக் கட்சிகளில் பல ஆண்டுகள் பதவி வகித்த மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை உங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டால், நீங்கள் ஒழிப்பது திமுக, அதிமுக அரசியல் கலாச்சாரத்தையா அல்லது அவற்றின் பெயர்களையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஒரு கட்சியின் பெயரை மாற்றுவதால் மட்டும் அரசியல் மாற்றம் உருவாகாது; அந்தக் கட்சிகளின் சிந்தனை, செயல்பாட்டு முறை, அதிகார அரசியல், ஊழல் கலாச்சாரம் ஆகியவற்றிலிருந்து விலகி புதிய பாதையை உருவாக்கும்போதுதான் உண்மையான மாற்றம் நிகழும்.
இன்றைக்கு திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இருந்த பலர் புதிய அரசியல் இடங்களைத் தேடி செல்கின்றனர். ஆனால் அவர்கள் ஏன் நாம் தமிழர் கட்சியை நோக்கி வருவதில்லை என்ற கேள்விக்கும் ஒரு அரசியல் பதில் இருக்கிறது. காரணம், நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்காக பழைய அரசியல் முகங்களைச் சார்ந்து வளர விரும்பவில்லை. மாறாக, பாலில் இருந்து கரந்த தூய பால் போல, கொள்கை மாசுபடாத, இனநலன் மற்றும் மண்ணின் உரிமையை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறது. அரசியல் மாற்றம் என்பது பழைய முகங்களை புதிய கட்சிகளில் அமர்த்துவதல்ல; புதிய சிந்தனைகளையும் புதிய தலைமுறையையும் உருவாக்குவதே உண்மையான மாற்றமாகும். அதனால் தான் பெயர் மாற்ற அரசியலுக்கும், கொள்கை மாற்ற அரசியலுக்கும் இடையிலான வேறுபாட்டை மக்கள் தெளிவாக உணர வேண்டிய காலம் இது.
பிரதி
ஆங்கிலேயர்களிடம் நாடு அடிமைப்பட்டு கிடந்தபோது தாயக விடுதலைக்கு போராடிய தகைமையாளர்..!
"நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்; இசுலாம் எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி" என்று இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கிய மாமனிதர்..!
பிரிவினையின்போது விருப்பமுள்ள இசுலாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று இந்திய அரசு கூறியபோது, நாங்கள் இந்த மண்ணின் மக்கள், நாங்கள் ஏன் வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று எதிர் கேள்வி எழுப்பிய பெருமகன்.,!
உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று முகமது அலி ஜின்னா கூறியபோது, ‘ஜின்னா அவர்களே, எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம். எங்களின் பாதுகாவலுக்கு இந்தியா என்ற நாடு உண்டு’ என்று நம்பிக்கையுடன் கூறிய பெருவீரர்..!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சிகளை தலைவராக வழிநடத்திய பெருந்தகை..!
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், 20 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் என்று ஏற்ற பதவிகளுக்கு பெருமை சேர்த்து பொதுவாழ்வில் தூய பெருவாழ்வு வாழ்ந்த
நம்முடைய தாத்தா கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
திமுக, அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு 25 கோடிக்கு மேல் செலவு செய்துதான் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்கள்.
அப்படி ஆன அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் 25 நாட்களுக்குள்ளேயே சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்து, ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் சேருகிறார்கள் என்றால், பிரதிபலன் இல்லாது சேருவார்களா? என்ன தருவதாகப் பேரம் பேசி, அவர்கள் கட்சிக்குள் இணைக்கப்பட்டார்கள்?
அதிமுக எனும் ஊழலில் புரையோடிப் போயிருக்கும் கட்சியிலிருந்து ஆட்களை இழுப்பதே கேவலம். அதிலும் விலைபேசி குதிரைபேரத்தின் மூலம் ஆட்களைத் தூக்குவதெல்லாம் கேவலத்திலும் கேவலம்!
Worst ப்ரோ! @TVKVijayHQ
நாங்க கூட கேவலமான திமுக /அதிமுக ஆட்சிய பாத்து இருக்கோம். ஆன இவ்ளோ கேவலமான ஆட்சிய... இப்ப தான் முதன்முறை பார்க்கிறோம்.#அவன் அரசியல்வாதியாக நடித்துக் கொண்டு இருக்கிறான். #உணருங்கள்_மக்களே!
விக்கு தள-ப-தீ யை வெளுக்க ஆரம்பிச்சிட்டாங்க….
15 நாளிலேயே இந்தக் கிழி - கிழிக்குறாரு தங்கை கோவை கார்திகா ..
இவங்க ஜெயலலிதா- கட்டுமரம் கருணாநிதி- ஸ்டாலினையே கேள்வி கேட்ட கூட்டம்- விசை எல்லாம் எந்த மூலைக்கு …
@TVKHQITWingOffl@CMOTamilnadu@TVKHQITWingOffl@DMKITwing@_ITWingNTK