வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. அசம்பாவிதங்களின்றி நானும் என் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை என எதுவும் இல்லை!
படம் -1_நடந்த நிகழ்வின் சுருக்கப் பதிவு.
மற்ற படங்கள் - சான்றுகள்.
“Crowdfunding”ன்னா modern.
“People-funded movement”ன்னா democratic.
“Public contribution”ன்னா inspiring.
ஆனால் அதையே தமிழில் “திரள் நிதி”ன்னு சொன்னவுடன் சிலர் கேலி செய்கிறார்கள். 🙂
உண்மையில் மாறியது நிதி இல்லை…
அதை பார்க்கும் மனநிலைதான்.
ஒரு Corporate ₹100 கோடி கொடுத்தால் அதை “Power” என்று சொல்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் தலா ₹100 கொடுத்தால்,
அதுதான் உண்மையான மக்கள் சக்தி. 🔥
Corporate நிதி செல்வாக்கை உருவாக்கலாம்.
மக்கள் பங்களிப்பே பொறுப்புணர்வை உருவாக்கும்.
அதனால்தான் உலகம் முழுவதும் மக்கள் ஆதரவால் இயங்கும் இயக்கங்கள், “People-funded” என்பதைக் பெருமையாகச் சொல்கின்றன.
ஆம் — நாம் தமிழர் கட்சியும் மக்களின் பங்களிப்பால், திரள் நிதியால் இயங்குகிறது.
அது பலவீனம் அல்ல.
ஒரு இயக்கத்தின் மிகப் பெரிய அரசியல் சுதந்திரம் என்பது, அதன் நிதி மக்களிடமிருந்து வருவதுதான்.
மக்கள் பணத்தில் இயங்கும் இயக்கத்தை வாங்க முடியாது… மக்களின் நம்பிக்கையால் மட்டுமே வளர்க்க முடியும்…
பங்களிக்க: 👉 https://t.co/J3ylbRjDQH
#திரள்நிதி #Crowdfunding #NaamTamilarKatchi #Seeman #NTK
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு!
ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திருமாவளவனை விமர்சிக்க ராசாவை தூண்டி விடுதுல்ல இதுதான் திமுகவின் யுக்தி சொந்த சமூகத்தில் உள்ளவர்களை மோதவிட்டு தேவைப்பட்டால் எதிர் சமூகத்துடன் மோதவிட்டும் குளிர்காயும்...
3 நிமிட Reel ஐயே முழுசா பாக்க பொறுமையில்லாம தள்ளிவிட்டுப் போற மூதேவிங்க கிட்ட போய் 3 மணி நேரம் Environmental Science class எடுத்தா எப்படி புரியும்னு யோசிக்காம விட்டது தான் சீமான் செய்த மிகப் பெரிய தவறு!
@Seeman4TN
Despite losing deposits in all the constituencies they contested, a few Naam Tamilar Katchi candidates in Salem have come up with an environment-focused initiative by deciding to plant saplings matching the number of votes they secured in the elections.
NTK candidates polled a total of 77,596 votes across all 11 constituencies in Salem district.
Edappadi candidate A. Priyadharshini, who secured 8,450 votes, Salem West candidate R. Sureshkumar with 6,820 votes, and Salem North candidate M. Gunaseela with 6,450 votes, have now decided to plant saplings matching their respective vote counts, saying elections may be over, but their connection with the people and constituency will continue.
#NTK #Salem