‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
மோகனூர் பேரூரில் நாமக்கல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திருமதி.ப.ராணி அவர்களுக்கு ஆதரவாக கழக துணை பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் திரு.திருச்சி சிவா அவர்கள் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.
கழகத்தின் இதயத்துடிப்பாம் நம் @dmk_youthwing-இன் சென்னை தெற்கு மாவட்டக்கழகத்துக்கு உட்பட்ட விருகம்பாக்கம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பகுதி, ஒன்றியம், வட்டம், கிளை & பாகங்களில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.
2026-ல் வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு என்ற உறுதியோடு உழைத்திட வேண்டுமென புதிய நிர்வாகிகளை வாழ்த்தினோம்.
@arivalayam@Subramanian_ma@Joel_Dmk@GanapathyK@PrabhakarRaja88
இன்று சென்னை அக்கார்ட் ஹோட்டலில் இந்தியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் நீதியரசர் திரு. பி. சுதர்சன் ரெட்டி அவர்களை கழக தலைவர் மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி @mkstalin அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற வேட்பாளர் ஆதரவு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
#vicepresidentialelection2025
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம், தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘கற்றலில் இருக்கும் இடைவெளிகளைக் கண்டறிவது’ மற்றும் ‘State Level Achievement Survey’-ஐ தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் வழங்கினோம்.
இதற்கான ஆய்வு கிட்டத்தட்ட 36 ஆயிரம் பள்ளிகளில் 9.80 இலட்சம் மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் மூலம், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் தமிழ்நாட்டு மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டு இருப்பது புள்ளி விவரங்களோடு கண்டறியப்பட்டுள்ளது.
நம் திராவிட மாடல் அரசு செயல்படுத்தும், எண்ணும் எழுத்தும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்றவற்றால், தமிழ்நாட்டு மாணவர்களின் கற்றல் திறன், தேசிய சராசரி மற்றும் மற்ற மாநிலங்களின் சராசரியை விட மேம்பட்டு இருப்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதைத் தொடர்ந்து உலகுக்கு உரக்கச் சொல்வோம்! நம் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம்!
@Anbil_Mahesh@DrJeyaranjan
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்; மாநில உரிமைகளுக்கான மகுடம்; கழகத்தின் செயற்பாடுகளுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி.
🔻‘ஆளுநருக்கு என்று தனியாக வீட்டோ(Veto) அதிகாரம் கிடையாது. ஆளுநர் என்பவர் மாநில சட்டமன்றத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டவரில்லை’ என்று அழுத்தம்திருத்தமாக உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பதன் மூலம் ஆளுநர் ஆணவத்துக்கும் அதிகார மமதைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
🔻ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே அரசியல் சட்ட சிறப்புரிமையைப் பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த 10 மசோதாக்களுமே பல்கலைக்கழகத் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் உரிமைக்கு வழங்கிய ஒப்புதல் என்று சொல்லலாம். ‘கல்வியை மாநிலப்பட்டியலுக்கே மாற்ற வேண்டும்’, ‘எங்கள் மாநிலத்துக்கான கல்விக்கொள்கையை நாங்களே தீர்மானிப்போம்’ என்று கழகம் தொடர்ந்து எடுத்துவரும் நிலைப்பாடுகளுக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு இது.
🔻இட ஒதுக்கீடு என்றாலும் மொழியுரிமை என்றாலும் தமிழ்நாடும் திராவிட இயக்கமும் எழுப்பும் முதல் குரல்தான் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உரிமைகளைப் பெற்றுத்தரும். அப்படித்தான் இந்த தீர்ப்பும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கான உரிமைகளை உறுதி செய்திருக்கிறது. எப்படி 356 பிரிவின்கீழ் மாநில அரசுகளைக் கலைக்கும் அநீதிக்கு எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்ததோ அதேபோல் இந்த தீர்ப்பும் ஆளுநர்களின் ஆட்டங்களுக்கு முடிவு கட்டும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
🔻மேலும் இந்த தீர்ப்பு ஆளுநருக்கு மட்டும் எதிரானது அல்ல, ஆளுநரை வைத்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் குடைச்சலைக் கொடுக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசுக்கும் எதிரானது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்குக் கிடைத்திருக்கும் சட்ட ஒப்புதல் என்பது புதிய கல்விக்கொள்கை, மும்மொழிக்கொள்கையைத் திணிக்கும், பல்கலைக்கழக மானியக்குழு விதிகள் திருத்தம் என்ற பெயரில் மாநில அரசின் உரிமைகளை மறுக்கும் ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்குக்கு விழுந்த மரண அடி.
🎇கூட்டாட்சித் தத்துவத்தை காத்த இந்த தீர்ப்பைக் கொண்டாடுவோம்!
கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில், கழக இளைஞர் அணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டலில் ‘ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை’ என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை நனவாக்க உறுதியேற்போம்!
#Stateautonomy #Federalism #DMK4TN
தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகவும் - நான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ இரயில் பணிகள், தற்போதைய நமது திராவிட மாடல் அரசில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன. முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்டப் பணிகளை, இந்தியாவிலேயே முதன்மையாக மாநில அரசின் நிதியைக் கொண்டே தொடர்ந்து வந்தோம். அண்மையில், நமது கோரிக்கையை ஏற்று, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாகச் செயல்படுத்தி வருகிறோம்.
2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கி வைக்கப்படும். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, @cmrlofficial நிர்வாகத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகள் முழுமையாக நிறைவுறும்போது, இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும்!
நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தபோது, நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி @ikamalhaasan சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்.
@maiamofficial