ஆமா இவர் பெரிய கலெக்டரு என்கிற சொல்லாடலை கேட்டு வளர்ந்தவர்களில் நானும் ஒருவன். அதனால் கலெக்டர் என்கிற வார்த்தையின் மீது மிகப்பெரிய பிம்பம் மனதில் கட்டமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் நாளடைவில் வேலை நிமித்தமாக பல வட மாநில ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இணைந்து பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தபோது, ஐஏஎஸ் என்பதின் மீதான பிம்பம் கலையத் துவங்கியது.
அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்திற்கு சில முடிவுகளை இன்னவேட்டிவாக எடுத்தாலே போதும். ஏராள மாற்றங்களை கொண்டு வரலாம். மக்களின் மீதான Empathy, innovative thoughts போதுமானது. overboard போக கூட தேவையில்லை. Within the system they can do wonders.
தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரது @jeyaseelan_vp செயல்களை பார்க்கும்போதுதான் ஆமா பெரிய கலெக்டர் இவரு என்கிற சொல்லாடலின் வீரியம் புரிகிறது.
சிஸ்டத்திற்கு உள்ளேயே, தனக்கு இருக்கும் அதிகாரம், வாய்ப்புகள் என்ற எல்லைக்கு உள்ளேயே தனது Innovative சிந்தனையாலும், மக்கள் மீதான empathy யாலும் விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்வில் அவர் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் ஏராளம். அதில் எனக்கு தெரிந்த டாப் விஷயங்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறில் ஒரு இறப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டது. இதற்காகவே ஒரு ஆப். தொடர்ச்சியான ஃபாலோ அப்கள்.
இந்தியாவிலேயே உயர் கல்வி சேர்க்கை விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம். இதற்காக விருதுநகர் மாவட்ட கல்விக் கழகம் என்கிற அமைப்பை துவங்கி, கல்லூரி தாளாளர்கள், சமூக சேவை நிறுவனங்கள், வங்கி கடனுதவி என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தது.
600 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தெத்துப்பல் கொடுக்கும் தாழ்வு மனப்பான்மையை மாற்ற அவர்களது பற்களை சீரமைத்தது.
திருநங்கைகளுக்கான குடியிருப்புகள் மற்றும் அவர்களது வாழ்க்கைக்கு ஆதாரமாக தொழில் வாய்ப்பு.
மாற்றுத்திறனாளிகளுக்கு 600க்கும் அதிகமான விலையில்லா இருசக்கர வாகனங்கள்.
பள்ளிகளில் இடைநிற்றலே இல்லாமல் செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து மாணவர்களை தொடர்ச்சியாக பள்ளிக்கு வர வைத்து இடைநிற்றலை குறைத்தது.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மாநாடு நடத்தி அவர்களுக்கு புது வாசல்களைத் திறந்தது
மாவட்ட முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகள் அங்கன்வாடிகள் போன்றவற்றை மறு சீரமைப்பு செய்து, state of the art வசதிகளை கொண்டு வந்தது.
அரசு தேர்வுகளுக்கு பயிலும் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக கருத்தரங்குகள் பயிற்சி பட்டறைகள் நடத்தியது. கலைஞர் அறிவு சார் மையத்தில் இதற்கெனவே வெற்றி பெற்ற மாணவர்களை நியமித்தது.
பள்ளி மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அறிவியல் மற்றும் வரலாற்று சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்தது. சுற்றுப்புற சூழல் மற்றும் மேலாண்மை போன்றவற்றிற்காக 10 நாட்கள் ரெசிடென்சியல் கேம்ப் நடத்தியது.
நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வகுப்பு மக்கள் ஸ்ட்ரெஸ் ஃப்ரீயாக இருப்பதற்கு உணவுத் திருவிழாக்கள், ஓவியப்போட்டி கவிதைப்போட்டி என தொடர்ந்து நடத்தியது.
கரிசல் இலக்கிய கழகம் என்பதன் மூலம் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்ட வரலாற்றை பதிப்பித்தது. மாவட்ட மக்களை இலக்கியம் படைக்க ஊக்குவித்தது.
தமிழ் ஆராய்ச்சி நூலகம் மற்றும் முக்கியமாக குழந்தைகளுக்காக இந்தியாவிலேயே முதன்முதல் காமிக்ஸ் நூலகம் துவங்கியது
மாவட்ட முழுவதும் உள்ள நீர் வாய்க்கால்கள்,குளங்கள் ஏரிகள் என அனைத்து நீர் ஆதாரங்களையும் அரசு நிதி உதவி மட்டுமின்றி CSR Fund மூலம் சீரமைத்தது. இதற்காக அந்தந்த ஊர்க்காரர்களையும் பெரிய அளவில் பங்கெடுக்க வைத்தது.
மாவட்ட அளவில் வளர்ச்சியை கணக்கெடுக்கும் ஒன்றிய அரசின் நிதி ஆயோக், விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பணிகள் மற்றும் அதன் வளர்ச்சியை கண்டுணர்ந்து மூன்று கோடி ரூபாய் இன்சென்டிவ் கொடுத்தது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதை திறந்து வைத்த தமிழ்நாடு முதல்வர் @mkstalin
அவர்கள் நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்து அந்த விழாவிலேயே ஏராளமான நிதியை விருதுநகர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்தார்.
விருதுநகர் மாவட்ட அமைச்சர்கள் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் @KKSSRR_DMK அவர்களும் மாண்புமிகு நிதியமைச்சர் @TThenarasu அவர்களும், தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை ஊக்கப்படுத்தி, என்னென்ன திட்டங்கள் வேண்டுமோ அத்தனையையும் கொடுத்து, CSR Funds பெருமளவில் கிடைக்கவும் வழிகாட்டி வருகிறார்கள். அனைவருக்கும் விருதுநகர் மாவட்ட மக்கள் சார்பாக நன்றிகள்.
எத்தனை நாட்கள்
கழித்து பேசினாலும்..
சிலரிடம் மட்டும்
அதே உரிமை
குறையாத பாசம்
அப்படியே இருக்கும்
இப்படிப்பட்ட நட்புகள்
கிடைப்பது எல்லாம்
வரமே...!!
இனிய காலை வணக்கம்
🌹🌹🌹
சவுதி மெக்காவில் கடும் புயல், வெள்ளம், மழை அல்லா மெக்காவை காப்பாற்ற முடியாமல் அடித்துச் செல்லப்படுகின்றது.....இயற்கை வளங்கள் அழிக்க படும் என்றால் எந்த தேசமும் அழிவு நிச்சியம்........அது எந்த கடவுளும் காப்பாத்த முடியாது.... மாறுவோம் நல்ல மனிதர்களாக வாழ்வதற்கு...🙏.
பள்ளிகளில் படிப்பின் மூலம் வாழ்வில் மேலே வந்தவர்களை மட்டும் அழைத்து மாணவர்கள் மத்தியில் பேச வையுங்கள்!!
எந்த புரிதலும் இல்லாமல் மைக் பிடித்து பேசுபவர்களை எல்லாம் கூப்பிட்டு பேசினா எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும்!
அறிவியல் அறிவோம்... மூடநம்பிக்கைகளை தகர்ப்போம் .... 👌👏
எல்லா நாளும் நல்ல நாளே... எல்லா நேரமும் நல்ல நேரமே... உழைப்பே உயர்வு தரும்.... தோழர். மருத்துவர். எழிலன்