நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்ற��� நன்றி தெரிவித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran @nchitrarasu
பெண்களின் பாதுகாப்புக்காக ட்ரோன் மூலம் ஆய்வு செய்வதெல்லாம் எப்போதோ தொடங்கப்பட்டது!
ஆனால் "இந்தியாவில் முதன்முறையாக" என வ��ை சுட்டிருக்கிறார் முதலமைச்சர்!
விட்டில் பூச்சிகள் விண்மீன்கள் ஆகி விட முடியாது!
கற்பனையில் மிதக்கும் கானல் நீர் ஓடங்கள் கரையேற ம��டியாது!
காலத்தை வென்று நிற்கும்
கொள்கை அரசியலை
வீழ்த்த துடிக்கும்
கவர்ச்சி அரசியல் காலாவதியாவதும், காணாமல் போவதும் உறுதி! 🔥
@mkstalin @Udhaystalin
#LeaderOfOpposition
#DMK
#TVKFails
தமிழ்ச் சமுதாயத்திற்கு நாம் பாடுபட வேண்டும், இழந்திருக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்!
காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கஜா (எ) கஜேந்திரன் அவர்கள் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணையும் விழாவில்
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை.
இன்று (06-06-2026), சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்ப��ளராகப் போட்டியிட்ட – காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் திரு. கஜா (எ) கஜேந்திரன் அவர்கள் தலைமையில் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் விழாவில், கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம்:
தாய்க் கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்வதற்காக வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் வருக, வருக, வருக என நான் வரவேற்க விரும்ப��கிறேன்.
அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள்; கலைஞர் அரங்கத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள். அந்த உணர்வோடு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் மீண்டும் மீண்டும் நான் வரவேற்கிறேன்.
75 ஆண்டு காலம் தன்னுடைய லட்சியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தி, பவள விழா கொண்டாடி இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
அதுமட்டுமல்ல, ஒரு முறை அல்ல, ஆறு முறை தமிழ்��ாட்டில் ஆட்சி நடத்திய திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வந்திருக்கிறீர்கள். நவீன தமிழ்நாட்டை உருவாக்கித் தந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அண்ணா அறிவாலயத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். எனவே, வந்திருக்கும் அனைவரையும் நான் மீண்டும் மீண்டும் வருக, வருக என வரவேற்கிறேன்.
எப்போதுமே ஒரு இயக்கத்தில் இருந்து இன்��ொரு இயக்கத்திற்குப் பிரிந்து போகிறார்கள் என்று சொன்னால், ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்து, ஏதோ வச��ியை மனதில் கொண்டு, ஆளுங்கட்சியை நோக்கித்தான் அதிகமாகப் போவது உண்டு. அதைத்தான் நாமும் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இன்றைக்கு தி.மு.க. ஆளுங்கட்சி அல்ல; ஆளுங்கட்சியாக இருந்து, இப்போது எதிர்க்கட்சியாக மாறி இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சியை நோக்கி நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், பதவிக்காக நீங்கள் வரவில்லை, சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக நீங்கள் எல்லாம் வரவில்���ை. பணியாற்ற வேண்டும், இந்த இயக்கத்திற்குத் துணை நிற்க வேண்டும், தமிழ் சமுதாயத்திற்கு நாம் பாடுபட வேண்டும், இழந்திருக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு வந்திருக்கிறீர்கள். அப்படி வந்திருக்கும் உங்களை எல்லாம் நான் மீண்டும் மீண்டும் வரவேற்கிறேன்.
இங்கு நம்முடைய கஜா என்கிற கஜேந்திரன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார், "நான் பல ஆண்டு காலம் அ.தி.மு.க.வ��ற்குப் பணியாற்றி இருக்கிறேன்; இரண்டு முறை தேர்தல் களத்தில் ஈடுபட்டு இருக்கிறேன்; இருந்தாலும், அந்த இயக்கத்தில் இருந்தபோது நான் விசுவாசமாகப் பணியாற்றி இருக்கிறேன்" என்பதை வெளிப்படையாக அவர் எடுத்துச் சொன்னார். நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
எப்போதுமே ஒருவன், ஒரு தொண்டனாக இருந்தாலும் சரி, ஒரு செயல் வீரனாக இருந்தாலும் சரி, ஒரு தளகர்த்தராக இருந்தாலும் சரி, தளபதியாக இருந்���ாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி, தான் இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக இருந்திட வேண்டும். எனவே, நிச்சயமாக தி.மு.க.வில் இணைந்திருக்கும் ��ஜேந்திரன் அவர்கள், நிச்சயமாக தி.மு.க.விற்கு விசுவாசமாக இருந்து பணியாற்ற இருக்கிறார் என்பதை இதன் மூலமாக அறிந்து கொள்கிறேன். அவர் மட்டுமல்ல, இங்கு வந்திருக்கும் நீங்களும் அப்படித்தான் இருக்கப் போகிறீர்கள்.
தி.மு.க.வினுடைய வரலாறு என்பது, 1949-இல் தொடங்கி, அதற்குப் பிறகு நடைபெற்ற 1952-இல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொன்னாலும், 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட��டு 15 இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்குப் பிறகு, 1962-இல் தேர்தல் களத்தில் ஈடுபட்டு, நாம் எதிர்க்கட்சி வரிசையில் இடம்பெறும் அளவிற்கு 50 இடங்களில் அன்றைக்கு வெற்றி பெற்றோம். அதற்குப் பின்னால் 1967-இல் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றோம்.
அண்ணா மறைவிற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார். அதற்குப் பிறகு 1971-இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றோம். 1971-��ல் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில்தான், 1975-இல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடி நிலையை நாம் எதிர்த்தோம். அந்த நெருக்கடி நிலையை எதிர்த்தால் ஆட்சி பறிபோகும் என்பதைத் தெரிந்தே எதிர்த்தோம். நாம் கவலைப்படவில்லை. கலைஞர் அவர்கள் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், "ஆட்சி நமக்கு முக்கியமல்ல, ஜனநாயகம் தான் நமக்கு முக்கியம்" என்று கருத���, அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து, சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, தீர்மானம் போட்டு அன்றைக்கு நிறைவேற்றினார்கள். "நெருக்கடி நிலையை ரத்து செய்யுங்கள்; கைது செய்து சிறையில் வைத்திருக்கும் தலைவர்களை எல்லாம் உடனடியாக விடுதலை செய்யுங்கள்" என்று தீர்மானம் போட்டார்கள்.
அந்தத் தீர்மானம் போட்ட காரணத்தால், 1976-ஆம் ஆண்டு நம்முடைய ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்குப் பிறகு 13 ஆண்டு காலம் நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வர முடியவில்லை.
மீண்டும் 1989-இல் ���ட்சிக்கு வந்தோம். 1991-இல், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு தி.மு.க. துணை நிற்கிறது என்ற ஒரு பிரச்சாரத்தை நடத்தி, அதற்காக நம்முடைய ஆட்சியைப் கலைத்தார்கள்.
அதற்குப் பிறகு 1996-இல் நாம் ஆட்சிக்கு வந்தோம். அதற்குப் பிறகு 2001-இல் நடைபெற்ற தேர்தலில் தோற்றோம். 2006-இல் ஆட்சிக்கு வந்தோம். 2011-இல் தோற்றோம். அதற்குப் பிறகு 2021-இல் ஆட்சிக்கு வந்தோம்.
இதை எதற்காக நான் சொல்கிறேன் என்று சொன்னால், வெற்���ி தோல்வி என்பது நம்மைப் பொறுத்தவரையில் மாறி மாறி வரும். அதற்காக வெற்றியைக் கண்டு வெறி கொண்டு அலைந்து கொண்டிருப்பதும் இல்லை; தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் என்றைக்கும் பணியாற்றக் கூடியவன்தான் தி.மு.க.காரன் என்பதை இன்றைக்கு நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில் தான், இன்றைக்கு வெற்றி வாய்ப்பை நாம் இழந்திருந்தாலும், ஆட்சிப் பொறுப்பை நாம் இழந்திருந்தாலும், எதிர்க்கட்சி என்ற நிலையில் ��ருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், நீங்கள் எல்லாம் இங்கு நம்முடைய கஜா என்கிற கஜேந்திரன் தலைமையில் வந்து சேர்ந்திருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. ஏனென்றால், நாம் வெற்றி பெற வேண்டும்; தி.மு.க. தலைமையில் ஆட்சி அமை��� வேண்டும்; எதிர்க்கட்சிகள் எல்லாம் தோற்க வேண்டும் என்ற நிலையில் தான் நாம் தேர்தல் களத்தைச் சந்தித்தோம். நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று கருதி நம்மோடு கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
அந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்க��ே பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள், "நாங்கள் வருகிறபோது, எங்கள் கூட்டணிக் கட்சியின் தலைவர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினிடத்தில் சொல்லிவிட்டுத் தான் வந்திருக்கிறோம்" என்று சொன்னார்கள்.
அவர்கள் சொல்லிவிட்டுச் செல்லுகிற நேரத்தில் நான் சொன்னேன், "நீங்கள் செல்லுங்கள்; உங்களுடைய விருப்பம்; உங்களுக்கு இருக்கும் ஜனநாயகம்; நான் தடுக்க மாட்டேன். நாட்டிலே ஜனாதிபதி ஆ��்சி வந்துவிடக் கூடாது; அதன் மூலமாக பி.ஜே.பி. ஆட்சி தமிழ்நாட்டில் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான் அவர்களை நான் வழியனுப்பி வைத்தேன்."
எனவே, நம்முடைய தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த நிகழ்ச்சியில் உறுதி எடுப்போம், உறுதி எடுப்போம், உறுதி எடுப்போம் என்று கூறி, மீண்டும் வந்திருக்கும் உங்கள் அத்தனை பேரையும் வருக, வருக, வருக என்று வரவேற்று என் உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
ஸ்டாலின் சார் ஆகமுடியுமா விஜய் ப்ரோ?
எதற்கெடுத்தாலும் ‘ஸ்டாலின் சாரா, விஜய்யா?' என்று கேள்வி எழுப்பும் #SofaModel முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே... இந்த சிறு ஒப்பீட்டைப் பாருங்கள்...
இன்றைய @MPaasarai பக்கத்தில்...👇
#TVKFails
CM சார் இப்போது நேராக டெல்லிக்கு சென்று, சிலிண்டர் விலை உயர்வு குறித்து பாஜகவின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார் என்பதை தெரிவித்���ுக் கொள்கிறோம்.
#TVKFails
பத்திரிகைச் செய்தி
கழகத் தலைவர�� மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (08.06.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், ஐ.ய��.எம்.எல். – அதிமுக – காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த வாலாஜா ஒருங்கிணைப்பாளர்கள் ரிபாய், ஏ.எஸ்.இல்யாஸ், முகமது முபாரக், அக்பர் பர்ஷா, ஏ.பாஷா, இம்ரான் ஜலீல், அக்பர், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் ஜகபர்சாதிக், வணிகர் அணி அமீர்பாபுகாஜா- குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நிஜாம், அல்அமீன், முக���து சபீர், குளைச்சல் பகர்தீன், தொண்டர் அணி நசீர்ஷா, மாணவர் அணி மா.முகமது அஸ்கர், குளைச்சல் அப்துல்கரீம், அஜமல்கான், ஜகபர்சாதிக், முகமது சபீர், புதுமடம் ஹலீம், ரஷித்அலி, நிசார்அலி, ஹாரிஷ்அல்யாசின், முகமது அசாருதீன், முகமது பைசல், முகமது இம்தியாஸ், இஃபான்கான், ஹாபில்அல்யாசின், ஆசிக் அலி நஜிமுதீன், அகமது, அலாஹ்வாத்அமீர்பாஷா, சபீர்அகமது, இன்பராஜ், சபீர்அகமது, இன்பராஜ், சீர்காழி வெங்கடே���், முகமது பைசல், மருத்துவ மணி அஃபான் அகமது, ஷாகுல்இம்தியாஸ், முகமது நவீ��், முகமது சலீம், அஜ்மல்அஹமது, முகமது ரியாஸ் - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புகாரிகாஜா, அமீர்பாபுகாஜா, சீர்காழி வெங்கடேஷ், இராஜசேகர் - அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் சாகுல்அமீத், சாகுல் அமீது - விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குளைச்சல் அ.சித்திக், சந்தோஷ்குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., அமைப்புச் செயலாளர��� ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநில சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு செயலாளர் டாக்டர் சுபேர்கான் ஆகியோர் உடனிருந்தனர்.
#DMK
அமைதியாக இருக்கலாம் என்று நினைத்தாலும், இந்த #SofaModel ஆட்சியில் நடக்கும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளையும், குதிரை பேரத்தையும் மக்களிடம் எடுத்துரைக்காமல் இருக்க முடியாது.
எங்களுடைய கேள்விகள் வலுவாக இருக்கும் டம்மி CM சார்!
#TVKFails
ராப் இசை பாடகர் வேடன் அவர்கள் இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு @Udhaystalin அவர்களை மரியாதை நிமி��்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது அவருக்கு @muthamilarignar பதிப்பகத்தின் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு: திமுக 75’ நூலையும், பெரியார்-அண்ணா-கலைஞர் சிலையையும் அன்பளிப்பாக வழங்கி வாழ்த்தினார் எதிர்கட்சித் தலைவர் அவர்கள்.
#Vedan