காவிரி பிரச்சனைக்கு முதல் காரணம் கருணாநிதி தான்‼️ - சி.மகேந்திரன்
இந்த வரலாறெல்லாம் அப்பப்ப ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணும். ஏன்னா கொத்தூஸ் writeup-னு கருணாநிதித்தனம் செய்வானுங்க.
@Keerthana4VNR மாண்புமிகு அமைச்சர் தொகுதியான சிவகாசி மாநகர் எல்லைக்கு உட்பட்ட இந்த விஸ்வத்தம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்திட ஏற்பாடு செய்திடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்!
@Keerthana4VNR தங்கள் சொந்த தொகுதி சிவகாசி-விஸ்வத்தம்(626189) பகுதியில் 41 நாட்களாக நல்ல தண்ணீர்(குடிநீர்) விநியோகம் செய்யப்படவில்லை! அந்த மக்களின் தேவையையும் பூர்த்தி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன்! நன்றி!
மின்கட்டணம் குறித்து பல தரப்பினர் சந்தேகம் எழுப்பியதை அடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் நேற்று முதல் சிறப்பு மின்னளவி மறுஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. இதுவரை 15323 மின் இணைப்புகள் சரிபார்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 100 மின் இணைப்புகளில், அதாவது 0.65% மட்டுமே, வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த மின்கட்டணங்கள் திருத்தி அமைக்கப்படும். இந்தப் பணி சுமார் 3,70,000 இணைப்புகளுக்கு செய்யப்பட உள்ளது. இதனால் மின் நுகர்வோர்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS
#TNPDCL #TNEB #TANGEDCO #TamilNadu #PowerSupply
உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வு தடை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது - திமுக தலைவர் ஸ்டாலின்.
இதை சொல்லி தானே ஆட்சிக்கு வந்திங்க - 5 வருடம் என்ன செய்தீர் ? என்று பதிலுக்கு ஆளும் TVK அரசு கேட்டால் உங்களுக்கு தான் சிக்கல்..
விஜய் வந்த போதே சொல்லிவிட்டார் கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவது தான் தீர்வு என. எனவே அவர் எளிதாக இதை சமாளிட்டுவிடுவார். மேலும் அவர் ஆட்சிக்கு வந்து நீட் தேர்வை ஒழிப்பேன் என வாக்குறுதியும் கொடுக்கவில்லை. நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு அவர் சொன்னது கல்வி மாநில பட்டியலில் சேர்க வேண்டும் என. அப்படி வந்துவிட்டால் அதிகாரம் மாநில அரசுக்கு கிடைக்கும் என சொல்லி தெளிவாக நகர்ந்தார்.
நீட் தேர்வு ஒழிப்போம் அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக. 5 ஆண்டுகளும் நீட் தேர்வு நடந்தது.. அப்போது எதுவும் செய்யவில்லை.
ஆக நீட் ஒழிப்போம் என மீண்டும் திமுக அரசியல் செய்ய முற்பட்டால் அது திரும்ப அவர்களையே சிக்கலில் நிறுத்தும்.
மாநகராட்சி டெண்டர்களில் 5, 10 பேர் கலந்துக்கிறாங்க. 20% வரை குறைவா quote பண்றாங்க. எந்த சிபாரிசுக்கும் இடம் இல்லை. பதிவு செய்த யார் வேண்டுமானாலும் கலந்துக்கலாம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு சூழல் வரும்னு கனவு கூட கண்டதில்லை. இது தொடருமா தெரியல. தொடர்ந்தால் பெரும் சாதனை @CMOTamilnadu
பழனி அடிவாரம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி, கடந்த ஏப்ரல் மாதம் சில தனி நபர்கள் மாண்பமை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக உள்ள வழக்குகளை மறைத்து, தக்காரை வழக்கில் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் பெற்ற உத்தரவுக்கு எதிராக, கடந்த ஜூன் 30 அன்று அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடம் சார்பில் பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் மேல்முறையீட்டு மனுவை (WA(MD)1010/2026) தாக்கல் செய்திருந்தோம்.
மேலும் இந்த மடத்தின் நிலத்தை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று இந்த வழக்குகளை மேற்கோள் காட்டி, கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டது.
இந்த சூழலில் கடந்த ஜூலை 6ஆம் தேதியன்று நீதிமன்ற வழக்கு மற்றும் இணை ஆணையர் கடிதத்தையும் பரிசீலனை செய்யாமல் நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட தகவல் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் சார் பதிவாளர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாண்பமை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரித்ததில்,
மடத்தின் நிலமானது முறைகேடாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை மாண்புமிகு நீதியரசர்கள் உறுதி செய்து பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளனர்.
மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரசின் மீதும், என் மீதும் சில தீய சக்திகள் எப்படியெல்லாம் பொய் கதைகளை பரப்ப முயற்சித்தாலும் அதையல்லாம் தாண்டி, உண்மையை நிலைநாட்டி
திருக்கோயில் நிலங்களை பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களின் தலைமையிலான அரசு என்றும் உறுதியாக நிற்கும்.
-
S. ரமேஷ் B.E.,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
"சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்தல் வரும் ஆட்சி மாற்றம் வரும் என்று பேசியதன் பின்னணி என்ன வென்று இப்பொழுதுதான் தெரிகிறது; அதற்கான தீவிரமான முயற்சியில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் சட்டமன்ற உறுப்பினரை விலை பேசியதாக வெளியான செய்தி" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
#PShanmugam | #CPM | #DMK | #MKStalin | #TVK