தொடரும் மரணங்கள் காலம் தாழ்த்தும் அரசு அதிகாரிகள்
இன்று விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்டுச்சாலையை பாபு என்பவர் கடக்க முயலும் போது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அரசூரில் மேம்பாலம் கட்டுவதற்கான வேலையை தொடங்குமாறு பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
@CMOTamilnadu@PMOIndia
அண்ணல் அம்பேத்கர் விருது
தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு என்னைத் தேர்வு செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு நன்றி.
சனாதனத்தோடு துளியும் சமரசமின்றி புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் எம்மை வழிநடத்தும் தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களின் ஒப்பற்ற தியாகத்துக்கு இந்த விருதை சமர்ப்பிக்கின்றேன் 🙏🏿
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுவின் தலைவரும் விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி. தலைமையில் நடைப்பெற்றது #VCK | #Viluppuram | #Ravikumar | @WriterRavikumar | #VelichamTV
ரிசர்வ் தொகுதிகளையும் ஒழிக்கப் போகிறார்களா?
EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதற்கான உச்சநீதி மன்றத்தின் முதல் தாக்குதல்.
தற்போது உள் ஒதுக்கீடு தொடர்பாக வழங்க��்பட்டுள்ள தீர்ப்பு இட ஒதுக்கீட்டின் மீதான உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது தாக்குதல்.
அசோக் குமார் ஜெயின் என்பவர் தொடர்ந்த வழக்கில் ‘ ரிசர்வ் தொகுதிகளை நீட்டிப்பது அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 334 க்கு உகந்ததுதானா? ‘ என்பதை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளிக்கப்போகும் தீர்ப்பு இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக்கட்டும் இறுதித் தாக்குதலாக இருக்கப் ப���கிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான பாஜகவின் திட்டத்தை முறியடிக்க புரட்சியாளர் வகுத்துத் தந்த பாதையில், தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடும்.
EWS இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விசிக வழக்கு நடத்தியது. இப்போது உள் ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்தும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
விசிகவ���ன் போராட்டம் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கானது. இட ஒதுக்கீட்டையே ஒழிக்க முயற்சிப்பவர்களின் தூண்டுதலில் விசிகவை எதிரியாகக் கட்டமைத்து அவதூறு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: விசிகவின் போராட்டம் உங்களுடைய இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கானதும் தான் !
- ரவிக்குமார் எம்.பி
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில்
ஆக - 17 அன்று
மாலை 4.00 மணியளவில் #தமிழர்_எழுச்சி_நாள் , புதுவை அருகேயுள்ள சங்கமித்ரா அரங்கில் நடைபெறவுள்ளது.
தோழமை கட்சித்
தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். அந்நிகழ்வில்
கட்சி ��ளர்ச்சிக்கென 200 சவரன் பொற்காசுகளை வழங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்துவருகின்றனர்.
@WriterRavikumar @sinthanaivck @Ve_Vaithilingam @kbcpim
பணிநிறைவுப் பாராட்டு
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் முதன்மைப் பொது மேலாளராகப் பணிபுரிந்து பணிநிறைவு செய்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பணிகளுக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட சகோதரர் ஏ.ஜி.பி.ஆசைத்தம்ப��� அவர்களை வாழ்த்தி வரவேற்றேன்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபயிற்சி பூங்காவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி , விசிக பொதுச்செயலாளரும் , விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரருமான துரை.ரவிக்குமார் ஆகியோர் திறந்துவைத்தார் #Ravikumar | #VCK | @WriterRavikumar | #VelichamTV
அரசூரில் நாடக மேடைக்கு அடிக்கல் நாட்டினேன்
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசூரில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டினேன்.