"குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் என்பதை மறந்து, இனியாவது தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடந்து கொள்ள வேண்டும்." - உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #Vijay | #DMK | #TVK
ஒரு அண்ணனின் ஆசை நிறைவேறியது
தவறான நண்பர்களுடன் சேர்ந்து இருந்த தனது தம்பியை திருத்தி காவல் துறை தேர்வில் வெற்றிபெறச் செய்த அண்ணன்
சந்தோஷம் இது போல் அண்ணன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
சில தேவதைகளுக்கு பின்னால் இறக்கைகள் இருப்பதில்லை.! 💖💖💖
கீழே உள்ள தகவல்கள் வாட்சப்பில் வந்தபடி:
பெயர் : Dr. சுப்ரியா தங்கராஜ்
ஊர்: கரிவலம்வந்தநல்லூர், சங்கரன் கோவில், திருநெல்வேலி.
இடம்: மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையம்.
🫡🫡🫡
தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள் செய்யும் ஏதாவது சில எதிர்மறை செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி விடுகின்றன ஆனால்
மாணவர்கள்,ஆசிரியர்களின் நேர்மறையான செயல்பாடுகள் மக்களிடம் சென்றடைவதே இல்லை.. நான் செய்யும் நற்செயல்பாடுகள் சிலவற்றை பொது தளங்களில் பதிவு செய்தால் எங்கள் ஆசிரியர்களே இவர் விளம்பர பிரியர் என்று நமக்கு பட்டம் கட்டி விடுவார்கள்.
நிற்க...
நாளை தமிழ்நாடு முழுவதும் எட்டாம் வகுப்பு பயிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு NMMS தேர்வு (தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை" (National Means-cum-Merit Scholarship) நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 (வருடம் ரூ.12,000) அரசால் வழங்கப்படும். இந்த தேர்வில் தங்களுடைய பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களை வெற்றி பெற வைக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களுடைய கடின உழைப்பினை ஒவ்வொரு ஆண்டும் வழங்குகின்றார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் கருத்தாளர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும் இணைய வழியாகவும் நேரடியாகவும் வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. வினாதாள்கள் பிரிண்ட் அவுட் எடுப்பதற்காகவே ஒவ்வொரு நடுநிலை,உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஒரு பிரிண்டர் அரசால் தரப்பட்டுள்ளது. இதில் எளிதாக பத்து நிமிடங்களில் மாணவர்களுக்கு தேவையான வினாத்தாள்கள் மற்றும் OMR ஷீட்டுகள் பிரிண்ட் அவுட் எடுக்கப்படுகின்றன. தேர்வு நடத்தப்பட்டு அன்று மாலையே விடைத்தாள் ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றது. இதில் மாணவர்கள் வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி போட்டி தேர்வுகளை எப்படி அணுகுவது என்பதற்கான ஒரு முன்னோட்டத்தை எட்டாம் வகுப்பிலேயே சிறப்பாக பெற்று விடுகின்றனர்.OMR ஷீட் கையாள்வது ,வினாக்களை விரைவாக புரிந்து கொண்டு அதற்கான பதிலை தருவது, சிக்கலான புதிர்களை தீர்ப்பது, நேர மேலாண்மை போன்ற சிறப்பான திறன்களை எளிதில் பெற்று விடுகின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் சிறப்பாக இணைய வசதியுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இணைய வகுப்புகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் மாவட்டத்தில் ஆர்வமாக உள்ள 1500 மாணவர்களை ஒருங்கிணைத்து மாநில கருத்தாளர்களைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.(இந்த காணொலியில் கடந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலுடன் நான் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த மூன்று நாள்
பயிற்சி).. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் இந்த சிறப்பான வழிகாட்டுதலால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா முழுவதிலும் தமிழ்நாட்டில் படித்த பள்ளி மாணவர்களே அரசு ஊழியராக,அதிகாரிகளாக இருப்பார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மாணவர்களை தேர்வில் வெற்றி பெற வைக்க அயராத உழைக்கும் பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட, மாநில கருத்தாளர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
குறிப்பு: அரசு, மாணவர்களுக்கு தரும் விலையில்லா பொருட்களையும்,சிறப்பான திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் உயர்ந்த இடத்தை அடைகின்றார்கள். அதை எட்டி உதைப்பவர்கள் அவர்களுக்கான இடத்தை பெறுகின்றார்கள்..
#கல்வி_சிறந்த_தமிழ்நாடு
@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh
தார் சாலையில் தார் ஊற்றுபவன் காலுக்குகூட சூ தரவேண்டும் என்று சட்டம் போட்டது கலைஞர் ஆட்சி காலத்தில்தான் . 🔥
எந்த முதலமைச்சராவது தரையை பார்த்திருப்பானா? அதிகாரத்திற்கு வந்தால் வானத்தை பார்த்து போறவன்கள்தான் பதவிக்கு போனவன் எல்லாம்.
ஆனால் கலைஞர் மட்டும்தான் காலை பார்த்து கொண்டு பயணம் செய்தார் அதுவும் உழைக்கும் மக்களின் காலைதான் பார்த்தார்
~ கொளத்தூர் மணி அவர்கள்
திராவிடர் விடுதலைக் கழகம்