... " நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. " ...
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் @ikamalhaasan அவர்களின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும்.
நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது.
திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ' வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும்.
அரசியல் ஆதாயத்திற்காகவோ
தான்தோன்றித் தனமாகவோ உணர்ச்சிவயப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறாமல், 'நாங்கள்
போட்டியிட விரும்பவில்லை' என்றும்; திமுக.தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்றுவோம்" என்றும்; அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் ஆகும்.
அவர்மீது மக்களிடையே நிலவும் அதியுயர் நன்மதிப்பு பன்மடங்கு பல்கிப் பெருகும்!
மாண்புநிறை அண்ணனுக்கு
மனம்நிறைந்த பாராட்டுகள்!
#மநீம #MNM
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு ஒன்றிய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் மு ஹி ஜவாஹிருல்லா சமஉ வெளியிடும் அறிக்கை
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டின் காரணமாக இந்திய திருநாட்டின் அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்த ப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது.
பல்வேறு பெருநகரங்களில் உணவகங்கள் தங்களது உணவு பட்டியலை குறைத்துக் கொண்டதும் பல்வேறு ஊர்களில் உணவகங்கள் மூடப்படக்கூடிய சூழ்நிலையையும் அறிய முடிகிறது.
உணவகங்கள் தேநீர் விடுதிகள் மற்றும் சிறு தொழில்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதோடு முன்பதிவின் காலம் 25 நாட்களாக அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளின் கவலையை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்ச எண்ணெய் விலை இறங்கும் போது உள்நாட்டில் எண்ணெய் விலையை குறைக்காமல் லாபம் ஈட்டியது ஒன்றிய அரசு. தற்போது அந்த லாபத்தை மானியமாக வழங்கி இந்த விலையேற்றத்தை தவிர்த்திருக்க வேண்டும்.
ஒன்றிய அரசு பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை உணர்ந்து தொலைநோக்குப் பார்வையோடு பணிகளை முன்னெடுக்காததன் விளைவாக அடித்தட்டு மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.
ரஷ்யா போன்ற நாடுகளும் இந்தியாவுக்கு வழங்க இருக்கிற கச்சா எண்ணையின் விலையை உயர்த்திருப்பதாக தெரிய வருகிறது. மேற்காசியா நாடுகள் நிலவும் போர் சூழலை சரியாக கணிக்காமல் ஒன்றிய அரசு அலட்சியமாக இருந்ததன் காரணமாக இந்திய நாட்டின் பொதுமக்கள் அல்லல் படும் நிலை உருவாகி இருக்கிறது. மாற்று ஏற்பாடுகளை முறையாக செய்யாமல்
மக்கள் மீது பெருஞ்சுமையை சுமத்தி இருக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்கள் மற்றும் சிறு குறு தொழில்கள் பாதிக்காத வகையில் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தட்டுப்பாடு இன்றி வழங்க ஒன்று அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
இப்படிக்கு.
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
11/03/2026
#GasPrices #Gas #prices #LPG
@sathiyamnews@Kalaignarnews@ThanthiTV@PttvNewsX@polimernews@News18TamilNadu@news7tamil@sunnewstamil@AsianetNewsTM@SamayamTamil@IeTamil@TamilTheHindu@dinathanthi@DinakaranNews@maalaimalar@murasutv@TheFederal_News@THChennai@Theekkathir@NewIndianXpress@DeccanChronicle@ITamilTVNews
Chennai, Tamil Nadu: Manithaneya Makkal Katchi (MMK) State President and MLA M.H. Jawahirullah says, "Manithaneya Makkal Katchi's special general council meeting was convened today, in which more than 3,500 members as well as special invitees participated in the deliberations. Nineteen resolutions were passed in this general council meeting..."
புளியங்குடி காவல் நிலையத்தில் தந்தை மகள் விஷம் அருந்திய விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை
தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலையத்தில் புகையிலைப் பொருட்கள் விற்ற காரணத்திற்காக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகள் இருவரும் காவல் நிலைய வளாகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். ஆபத்தான நிலையில் அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் நிலையத்திற்கு வந்தவர்களிடம் விஷம் எப்படி வந்தது என்ற கேள்வி எழுகிறது.
தந்தை - மகளுக்கு தற்கொலைக்கு முயலும் அளவிற்கு மன அழுத்தத்தைக் காவல்துறை வழங்கியதா என்கிற பல கேள்விகள் மக்கள் மனங்களில் எழுகிறது.
இந்தப் பிரச்சனையின் உண்மைத் தன்மையை ஆராய உரிய உயர் நிலை விசாரணை நடத்த மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தச் சம்பவத்திற்குக் காரணமான காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.
இப்படிக்கு.
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
28/01/2026
@CMOTamilnadu
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டவர்கள் இறந்த செய்தி பெரும் துயரம் அளிக்கிறது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். பகல் 12 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கியுள்ளது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் பலர் மயக்கமடைந்து விழுந்திருக்கின்றனர். தொடர்ச்சியாகப் பலர் பாதிப்புக்குள்ளானதும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை பலன் இல்லாமல் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தகவல் மிகுந்த வேதனயையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. 50க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வரும் அனைவரும் முழு நலம் பெற்று இல்லம் திரும்புவதற்குப் பிரார்த்தனை செய்கின்றேன். இந்த துயரச் சம்பவம் தமிழ்நாட்டு மக்களைப் பெரிய அளவில் உலுக்கி துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவினால் போர் கால அடிப்படையில் துயர் துடைப்பு பணி நடைபெற்று வருகின்றது. முதலமைச்சரும் களத்திற்கு உடனடியாக புறப்பட்டு செல்கிறார். அமைச்சர்களும் களத்தில் இறங்கி துயர் துடைப்பு பணியாற்றி வருகின்றனர்.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
விழுப்புரம்
27/09/2025
#KarurStampede
@ThanthiTV@sathiyamnews@PttvNewsX@PTI_News@sunnewstamil@Kalaignarnews@thatsTamil@the_hindu@news7tamil@TamilTheHindu@News18TamilNadu@News24x7Tamil@DMKITwing@IndianExpress@IeTamil
They have torn up the olive groves and buried the poets. But from the rubble, the words of the children will rise. #TamilsWithPalestine#StopGazaGenocide