லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்.. ஆய்வுகளில் லஞ்சம் வாங்கியது உறுதியானதை அடுத்து ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ் நடவடிக்கை..
#Trichy | #RameshMLA | #TVK | #Hospital | #PolimerNews
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
சென்னை அருகே மாணவியை கஞ்சா போதையில் அரிவாளால் வெட்டிய இளைஞர்கள் - வீட்டிலிருக்கும் பெண்களுக்குக் கூட திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை!
சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகில் உள்ள வல்லூர் கிராமத்தில் தேர்வுக்காக வீட்டில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவரை கஞ்சா போதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாணவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை திமுக ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கஞ்சா போதையில் வந்த கும்பல் வீடு புகுந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அதற்கு எதிராக மாணவி போராடியதால் அவரை கஞ்சா போதைக் கும்பல் கொடூரமாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகியிருப்பதற்கு கொடூரமான எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்வு ஆகும்.
திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் பெருகி விட்டதால் பெண்கள் வெளியில் நடமாட முடியாத நிலை தான் இதுவரை நிலவி வந்தது. ஆனால், இப்போது வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கஞ்சா போதை விவகாரத்தில் திமுக ஏற்பத்திய பரிணாம வளர்ச்சி இது தான். இந்த கொடூர நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை என்பது வெட்கக்கேடானது.
திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும், மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் அதற்கான ஒரே வழி திமுக ஆட்சியை அகற்றுவது தான். இன்னும் 8 நாள்களில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு, அனைவருக்கும் பாதுகாப்பான ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள்.
#NewsUpdate | திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 17 வயது கல்லூரி மாணவி வெட்டப்பட்ட வழக்கில், டில்லி பாபு (23) என்பவர் பொதுமக்களால் பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சித்திக் (19), லோகேஷ் (22), முத்தமிழ் செல்வன் (24) ஆகிய மூவரும் கைது
#SunNews | #Thiruvallur | #Crime
அப்பாவிப் பெண்ணை ஆபாசமாகப் பேசி தாக்கி மரணக்குழிக்குத் தள்ளிய திமுகவினரின் அராஜகம்!
உயிர்களைப் பலிவாங்கும் இந்த இருண்ட மாடல் @arivalayam ஆட்சிக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்..!
தேர்தல் பிரச்சாரத்தில் பாத்திரம் கொடுத்த பிரச்சனையில் கேள்வி எழுப்பிய மணச்சநல்லூரை சேர்ந்த சிந்துஜா என்கின்ற தலித் பெண் திமுகவினரால் அடித்து மிரட்டப்பட்டதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் என்று காலையில் இருந்து செய்தி வந்தது.
நாமும் அது குறித்து சமூக வலைதளங்களில் எழுதினோம்.. அவர் அம்மா பேசிய வீடியோவை நானும் பார்த்தேன்.
அது குறித்து மக்கள் செய்த மறியலையும் பார்த்தேன்.
ஆனால் கிட்டத்தட்ட ஒரு 4 மணிக்கு அது பொய் செய்தி என்ற ஒரு நியூஸ் கார்டை திமுகவினர் பதிவிட்டனர். சிந்துஜா குறித்து பதிவிட்ட அனைவரையும் மிரட்டினர்.
பின்பு இப்பொழுது பார்த்தால் உண்மையிலேயே சிந்துஜா திமுகவினரால் தாக்கப்பட்டு தான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அது தொடர்பாக 9 திமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
மறுப்பு செய்தி வந்த தொலைக்காட்சியை தொடர்பு கொண்ட போது, அது அவர்களின் நியூஸ் கார்டு இல்லை என்று தெரிய வந்தது. இது திமுக ஐடி விங் தயாரித்த கார்ட்.
நிலைமை இப்படி இருக்க திமுக ஐடி ஏன் இப்படி பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது?
ஒரு துளியாவது வெட்கம் இல்லையா?
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகம் முழுவதும், தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக, கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
திமுகவின் உண்மை முகம் இதுதான். எந்தக் காலத்திலும் வாக்களிக்கும் மக்கள் மீது, திமுகவினருக்கு மரியாதை கிடையாது. தேர்தல் முடியும் முன்னரே, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தி, ஒரு உயிர் பறிபோகக் காரணமாக இருக்கும் இந்த ரவுடி கும்பல், தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
வரும் தேர்தலில், இந்த திமுக அராஜக கும்பலை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது.
பேராபத்து வந்துகொண்டிருக்கிறது, நெருப்போடு விளையாடுகிறது பாஜக, பிரதமருக்கு எனது இறுதி எச்சரிக்கை, தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம், மக்கள் அனைவரும் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்...
மக்கள் ~