One that stands for Justice,equality and hope.I believe the day will come when NEET is no longer a barrier to deserving students,and when that day arrives,the world will remember that it all began with a seed planted by you.
#Dr_Anitha#NEET#BAN_NEET
Dear Anitha,
The seed you planted with your dreams, your courage, and your sacrifice has finally begun to sprout. Though you are not here to witness it, your voice still echoes in every student who dares to dream.
This tiny sprout will one day become a mighty tree.#BANNEET
To prove your theory, you need lives of million innocents. And you waited till million lives lost to pronounce your judgement.
You did the same to Rwanda.
You did the same to Timor.
You did the same to Tamils.
You did the same to Rohingya.
Now you are doing to Palestine.
This is atrocious.
UN lost the credibility & capability to save innocents.
*ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் – ஐயா சா. காந்தி* - மே 17 இயக்கக்குரல் இணையதள அறிக்கை - ஜூன் 9, 2025
மேலும் வாசிக்க 👇
https://t.co/EBLweqaUrP
மே 17 இயக்கக்குரல்
9444327010
மதுரையில் இந்துத்துவ பயங்கரவாத கும்பல் ஜூன்22ல் நடத்தும் மாநாட்டை தடுப்பதும், மதசார்பற்ற அரசியலை காக்க வேண்டிய பொறுப்பும் முழுக்க முழுக்க திமுகவுடையது. திமுகவின் மாவட்ட, வட்ட பொறுப்பளர்கள், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட பொறுப்ப��� அமைச்சர்கள் இந்த நிகழ்வினை தடுக்கும் பொறுப்பு கொண்டவர்கள். கடந்தமுறை நடந்ததைப் போல ஆயிரக்கணக்கான சங்கிகள் மதுரையில் திரள அனுமதித்தது திமுக அரசும், காவல்துறையும். இதை இம்முறை தடுக்க வேண்டிய பொறுப்பு திமுக ஆட்சியாளர்களுடையது. தமிழகத்தை கூறுபோட முயலும் சங்கிகளை வேரறுக்க இதுவரை திமுக முயன்றதில்லை. இதை நாம் முன்வைக்க காரணம் உண்டு.
திமுகவின் கடந்த 4 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இந்துத்துவ அமைப்புகளின் கலவர முயற்சிகள், ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகள் போன்றவற்றை தடுக்க முற்போக்கு இயக்க��்கள் தொடர்ந்து போராடியுள்ளன. இப்போராட்டங்களுக்கு பல சமயங்களில் திமுக காவல்துறையிடம் அனுமதி வாங்குவதே குதிரை கொம்பாக இருந்தது.
சில மாதங்களுக்கு முன்பாக மதுரையில் சங்கிகளால் பெரும் கூட்டத்தை திரட்ட இயன்றதை அனுமதித்த திமுக காவல்துறை, சனநாயக அமைப்புகள் நடத்த முயன்ற மக்கள்-ஒற்றுமை நிகழ்வுகளை தடுத்தது. நீதிமன்றத்திலும் அனுமதி கிடைக்கவில்லை. நேரில் சென்று காவல்துறை தலைமையை சந்தித்த பொழுது ' நீங்களும் பதிலுக்கு பதில் செய்து பெரியதாக்காதீர்கள்' என்றார்கள். இதுதான் பொதுவான ஆளுங்கட்சி மனநிலை. அதாவது சனநாயக சக்திகளின் எதிர்வினையால் சங்கிகள் வளர்கிறார்கள் என்பதே அவர்களது அனுமானம். அதிமுக-பாஜக காலத்தில் போர்க்குணத்துடன் சங்கிகளின் நகர்வுகளை எதிர்த்து அம்பலப்படுத்திய பல அமைப்புகள் முடக்கப்பட்டது இம்மாதிரியான பசப்பல்வாத அரசியலால் தான். இதை மே17 இயக��கம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது. இதற்காகவே எம்மீதான பல அ��தூறுகளை எதிர்கொண்டோம்.
இதேசமயத்தில் , முருகன் மாநாட்டிற்கு வீதிவீதியாய் பரப்புரையை தமிழகமெங்கும் இந்துத்துவ பயங்கரவாதிகள் செய்துகொண்டிருக்கின்றனர். இதை திமுக காவல்துறை தடுப்பதில்லை.
ஆனால் காவல்துறை அனுமதி வரும்முன்னர் நம்முடைய நிகழ்வுகளுக்கு பரப்புரை செய்தால் கைது செய்து தடுப்பார்கள், துண்டறிக்கையை பறிப்பார்கள், சுவரொட்டியை கிழிப்பார்கள், சுவரெழுத்தை அழிப்பார்க��். ஆனால் இவையெல்லாம் இந்துத்துவ அமைப்புகளுக்கு நிகழ்வதில்லை. இப்படியான சங்கி காவல்துறை அதிகாரிகளை திமுக அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ கண்டுகொண்டதில்லை. பெரியாரிய முற்போக்கு நிகழ்வுகளுக்கு அனுமதிகள் மறுக்கப்படும் பொழுதில் பெருமளவில் உதவியதும் இல்லை. நீதிமன்றங்களை நாடியே நிவாரணம் பெறும் நிலை நமக்குண்டு.
மதுரையில் முற்போக்கு செயல்பாடுகளுக்கு குவிக்கப்படும் காவல்துறை, சங்கிகள் நிகழ்வுக்கு நடப்பதில்லை. திருப்பரங்குன்றத்தின் காவல்துறை ஆய்வாளர் மதுரைவீரன் சங்கித்தனமாக நடந்து கொண்டதை பலமுறை சுட்டிக்காட்டியும், புகாரளித்தும் திமுக நடவடிக்கை எடுத்ததில்லை. இதனாலேயே சங்கிகளால் திருப்பரங்குன்றத்தை வைத்து சிக்கலை எழுப்ப இயன்றது.
இதேபோல பெரியார��� இழிவு செய்த சீமானின் மீது இதுவரை நடவடிக்கை எடுத்ததும் இல்லை. ஆனால் சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசவந்தார்களென தந்தை பெரியார் தி.கவினர் சிறைபட்டார்கள். ஈரோட்டில் த.பெ.திகவினரை தாக்கிய நாதகவினர் மீது நடவடிக்கைகள் கிடையாது. திமுகவினருக்கு அனைத்துமே தேர்தல் கணக்கு. தேர்தல் வெற்றிக்காக அமைதி காக்கிறோம் என்பார்கள். வெற்றி பெற்ற பின் கடந்துசெல்வார்கள். ஆனால் சனநாயக அமை��்புகள் தம்முடைய சொற்ப சம்பாத்தியத்தில் பங்களித்து உயிரைக்கொடுத்து போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.
ஆக, இனிமேல் பாஜகவை தடுக்கும் பொறுப்பை திமுகவும் அதன் மாவட்ட பொறுப்பாளர்களும் வீதியில் இறங்கி செய்யட்டும். மதுரையில் இந்துத்துவ பயங்கரவாதிகளின் மாநாடு வெற்றிகரமாக நடக்குமெனில் முழு பொறுப்பும் திமுக ஆட்சியாளர்கள் மற்றும் அதன் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுடையது.
❤️💛
தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலையை உலகிற்கு வெளிப்படுத்திய தீர்ப்பாயங்களை நடாத்தியவரும் புலம்பெயர்ந்து வந்து தஞ்சக்கோரிக்கை மறுக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான வதிவிட அனுமதிகளுக்காக உழைத்��வரும், சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழீழ விடுதலைக்காக நிதிதிரட்டியோருக்கெதிரான வழக்கை எதிர்த்துப் போராடி வெற்றிகண்டவரும், தேசியத் தலைவரின் நன்மதிப்பைப் பெற்றவரும், Voice of Global Tamil Rights (உலகத்தமிழர் உரிமைக்குரல்) அமைப்பின் முதன்மை ஆலோசகருமான மதிப்பிற்குரிய திரு.விராஜ் மென்டிஸ் அவர்களது நினைவைப் பகிரும் நினைவேந்தல்..
காலம்: 23.08.2025 சனிக்கிழமை
நேரம்: மாலை 4:00 மணி
முகவரி: Schmitz str.8, 45143 Essen
தமிழினத்திற்காக உழைத்த உத்தமரின் நினைவைப் பகிர்ந்து போராடுவோம். அனைவரும் வருக..!
காஸா மக்களுக்கான உணவை எடுத்துக்கொண்டு க்ரேட்டாதன்பர்க் உள்ளிட்ட செயல்பாட்டாளர்கள் காஸா நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். மெட்லீன் எனும் கப்பலில் இந்த நிவாரணப் பொருட்களை கொண்டு செல்கிறார்கள். நமது ஆதரவே இவர்களுக்கான பாதுகாப்பு.
முள்ளிவாய்க்காலில் சிக்குண்ட நம் தமிழர்களை காக்க இயலாமல் தவித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. உலகெங்கும் ஏகாதிபத்தியங்களால் நடத்தப்படும் இனப்படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்.
2022ல் விதிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம், பாதிக் கணக்குகளை கட்டண உயர்வுக்கு எடுத்துக்கொண்டு, 37% என மின் கட்டண உயர்வு மிகவும் தவறான அடிப்படையில் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதே வழிமுறையில் மீண்டும் மீண்டும் தவறான மின்சாரக் கட்டணம் ஆண்டு தோறும் உயர்த்தப்படுகிறது என்பதையும், தற்போது ஜூலை 2025ல் உயர்த்தப்பட இருக்கும் மின்சாரக் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும், ஐந்தாண்டு மின்கட்டணம் ரத்து செய்யப்பட்டு, உண்மையான கணக்குகளின் அடிப்படையில் மின்கட்டணம் திருத்தப்பட வேண்டும் என்பதையும் முன்வைத்து தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் சா.காந்தி அவர்கள் தலைமையில் ஊடக சந்திப்பு நடைபெற்றது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 04-06-2025 புதன்கிழமை நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் பங்கேற்றார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
இந்த கேள்விகளுக்கு அதிகாரிகளிடம் பதில் இல்லை. திமுக அரசிடம் பதில் இருக்குமா?
தாம் கையிலெடுக்கும் போராட்டத்தின் முழுநியாயத்தை ஆய்வு செய்யாமலோ, சட்டரீதியாக உணராமலோ, வெளிக்கொணராமலோ மே17 இயக்கம் போராடியதில்லை.
க்ரீஸ்டப்பாக்களை போல மேலோட்டமான ஊடக சந்திப்புகளை நடத்தும் அமைப்பல்ல மே17 இயக்கம் என்பதை ஆட்சியாளர்கள் உணரட்டும்.
எங்கள் கேள்விகளுக்கு அதிகாரவர்க்கமோ, திமுக ஆட்சியாளர்களோ இதுவரை பதிலளிக்கவில்லை.
4ம் நாளாக தொடரும் இடிப்புகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்.
#அனகாபுத்தூர்_அநீதி
வடகாடு சாதிய போராட்டத்திலும் சீமானை பார்க்க முடியாது அனகாபுத்தூர் வாழ்வாதார போராட்டத்திலும் பார்க்க முடியாது. ஆனால் திமுகவை எதிர்ப்பதாக உதார் விட்டுட்டு உதய்நிதி காலில் விழுந்து பாலியல் வழக்கை அடக்கிவைப்பானாம்.
இன்று பிற்பகலில் அய்யா.நல்லகண்ணுவை சந்தித்து அனகாபுத்தூர் அநீதியை விளக்கினோம். விவரங்களை கவனித்து கேட்டறிந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது 98ம் வயதில் சென்னை-ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகரில் வீடுகளை அநியாயமாக இடிப்பதாக கேள்விப்பட்டவுடன் நேரில் சென்றார். அதேபோன்று இன்றும் விவரங்களை கேட்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்தார். கூடவே, வீடுகள் இடிக்கப்படுவதை தடுக்க ஊடகத்தின் வாயிலாக செய்தி தெரிவிக்க தயாரானார்.
அய்யா நல்லகண்ணு அவர்கள் 100 வயதைக் கடந்து ஆறு மாதங்களா��ிறது. ஆனால் மக்கள் சிக்கலை குறித்து அக்கறை கொள்கிறார். எளியமக்களோடு நிற்க வேண்டுமெனும் உந்துதலை இழக்காமல் உறுதியாக இருக்கிறார்.
இன்று மாலையில் உடனடியாக ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தோம்.
மாலையில் அனகாபுத்தூர் மக்களைச் சந்தித்தார். அம்மக்களிடம்
'கடைசிவரை போராடுவோம்', என்ற நல்லகண்ணு அவர்கள், #அனகாபுத்தூர் பகுதி போராட்டம் 20 ஆண்டுகளாக நடக்கும் உரிமை போராட்டமென நினைவுகூர்ந்தார். 2 ஆண்டுக்கு முன் நடத்திய போராட்டத்தை நினைவுபடுத்தி தொடர்ந்து போராடுவோம் என வாக்குறுதி கொடுத்தது ஆச்சரியமளித்தது. 100 வயதை கடந்தவர், 'போராட்டம் தான் தீர்வு தரும்' என்கிறார்.
அனகாபுத்தூரில் வீடுகளை இடிப்பதை உடனே நிறுத்த திமுக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரிலும் இதேபோல கோரிக்கை வைத்தார், அதன்பின் நேரில் சென்று மக்களை சந்தித்தார்.
திமுக அரசு ��னகாபுத்தூர் வீடுகளை இடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும், மக்களுக்கு நீதிகிடைக்கும் வகையில் நடவடிக்கை, மாணவர்களுக்கு கல்வி இடைநிற்றல் இல்லாத நிலை வேண்டும், என கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக அரசு செவிசாய்க்குமா அல்லது அனகாபுத்தூருக்கு 100 வயது போராளியை நேரில் வரவைக்குமா என ��ெரியவில்லை. :தகைசால் தமிழர்' என பட்டமளித்து பெருமைப்படுத்திய திமுக அரசும், முதல்வரும் அய்யா.நல்லகண்ணு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா?
ஒட்டுமொத்த தமிழ்நாடும் மக்கள் பக்கம் நிற்கும் போது திமுக அரசு யார் பக்கம் நிற்கப்போகிறது?
ஈழ இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்றால் நாம் மக்கள் தரப்பில் மட்டும் தான் நிற்க வேண்டும் மக்களுடன் நின்று இனப்படுகொலைக்கான நீதியை கேட்டு நாம் பேச வேண்டும், விடுதலை புலிகளின் கொடி விடுதலை புலிகளின் அடையாளத்தை வைத்துக் கொ��்டு இனப்படுகொலைக்கான நீதியை ஒரு போதும் நம்மாள் பெற முடியாது.
2009ல் இதே நாளில் தூரக்கிழக்கில் பூந்தோட்டத்தின் இறுதிப் பூவை நசுக்கினார்கள். உலகில் இனிமேலும் பூக்கள் பூக்காதென்று ஆழப்புதைத்துவிட்டு சென்றார்கள். விதைகளை பிரசவித்துவிட்டு புதைந்து போயின பூக்கள். ஆயிரம் பூக்களை பூக்கும் செடிகள் ஒருநாள் முளைத்தே தீரும்.
பூக்களை நசுக்கிய பூட்��் கால்களால் என்ன செய்துவிட முடியும்?
விடுதலையுணர்வென்பது உயிர்களின் அனிச்சை செயல்தானே!
பூக்களை நசுக்கிய பூட்ஸ் கால்களால் என்ன செய்துவிட முடியும்?
விடுதலையுணர்வென்பது உயிர்களின் அனிச்சை செயல்தானே!
இன்று மாலை 5 மணிக்கு பெசன்ட் நகர் கடற்கரையில் ஒன்றுகூடுவோம்
@thiruja2009@may17iyakkam
தமிழீழ இனப்படுகொலைக்கான 16 ம் ஆண்டு நினைவேந்தல் - நிதிப் பங்களிப்பு கோருகிறோம்
தமிழீழத்தில் இனப்படுகொலைக்கு உள்ளான தொப்புள்கொடி உறவுகளுக்கு நீதி வேண்டி ஆண்டுதோறும் நினைவேந்தல் நடத்தி வருகிறோம். இனப்படுகொலையை தமிழர்கள் நாம் மறந்துவிடவில்லை என்பதை உலகிற்கு எடுத்து சொல்ல, வரும் மே 18, 2025 ஞாயிறு மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஒன்றுகூடுவோம். இந்நிகழ்வுக்கான பரப்புரையும் முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இதன் பொருட்செலவினை சந்திக்க நிதி பங்களிப்பினை உரிமையுடன் கோருகிறோம்.
மே பதினேழு இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடுகளில் உடன்பாடு கொண்ட தோழர்கள் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அல்லது ஜிபே எண்ணில் நிதிப் பங்களிப்பினை செலுத்தலாம்.
A/C Number: 99980118853691
A/C Name: PUGAZHENTHI
A/C Type: Savings
Bank: Federal Bank
Branch: Panruti
IFSC: FDRL0001968
Google Pay (GPay): 8098111543
or
Open upi://pay?pa=useupsidedown-1@okhdfcbank&tn=CandlelightVigil2025
Name: Pugazhenthi
பின்குறிப்பு: ஈழத் தமிழர்களிடம் நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். வெளிநாட்டு வாழ் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியாவில் உள்ள நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக அனுப்பி வைக்கலாம்.
-
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010
[email protected]
16/05/2025
ஐ.நாவின் 'போர் சூழலில் சிக்குண்ட குழந்தைகளுக்கான கண்காணிப்பு பொறுப்பாளர்' 2009ம் ஆண்டு இதே தினத்தில், தமிழ் குழந்தைகள் பெருமளவில் கொல்லப்பட வாய்ப்புள்ளது எனும் எச்சரிக்கையை ஐ.நாவின் தலைமைச் செயலகத்திற்கும், செயலாளருக்கும் தெரிவிக்கிறார். இதற்கு மாறாக இலங்கையிலிருந்த ஐ.நாவின் தலைமை பொறுப்பாளர் கார்டன்வைஸ் கோத்தபய ராஜபக்சே அழுத்தத்தில் போர் முனையின் தகவல்களையும், இறப்பு விகிதத்தையும் குறைத்தும், இருட்டடிப்பும் செய்கிறார். (போர் முடிந்த பின் புலிகளுக்கு எதிரான பொய் தகவல்களுடன் the cage என புத்தகம் எழுதியவர். இவரது தில்லுமுல்லுகளை ஐ.நாவினால் நியமனம் செய்யப்பட்ட உயர்மட்ட விசாரணைக் குழுவான சார்லஸ் பெட்ரியின் அறிக்கை வெளியிட்டது. இவரின் பொய்தகவல் புத்தகத்தை கால்ச்சுவடு பார்ப்ப���கும்பல் தமிழில் வெளியிட்டது. இப்புத்தகத்தை வைத்து பார்ப்பனிய-புலி காழ்ப்புணர்வாளர்கள் கட்டுக்கதைகளை எழுதி வருகிறார்கள்)
ஐ.நாவின் துணை பொது செயலாளராக இருந்த விஜய் நம்பியார், போர் முனையை முள்ளிவாய்க்காலில் ��ய்ந்து போர்நிறுத்த நடவடிக்கைக்காக, ஐ.நாவின் தலைமை செயலாளர் பான்-கீ-மூன் அனுப்புகிறார். இவரின் மருமகன் இந்திய அமைதிப்படையில் புலிகளின் தலைமைக்குழுவை அழிக்க யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இறக்கப்பட்ட சிறப்பு கமெண்டோ படையில் இருந்தவர். அந்த கமெண்டோ படை தரையிறங்கியவுடன் புலிகளால் அழிக்கப்பட்டது. அதில் தப்பிப்பிழைத்தவரே பான்-கீ-மூனின் மருமகன்.
அதேநேரம் போர் நிறுத்தத்திற்க���க அனுப்பப்பட்ட விஜய்நம்பியாரின் உடன்பிறந்த சகோதரன் சதீஸ் நம்பியார் 2002முதலாக இலங்கை இராணுவத்தின் ஆலோசகராகவும், 2009போரின் வழிகாட்டுதல் ஆலோசகராகவும் இயங்கியவர்.
இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலர் சிவசங்கர்மேனன் என மொத்த குழுவும் அமெரிக்கா-இங்கிலாந்து குழுவுடன் இணைந்து போரின் இறுதிநாட்களை வடிவமைத்தார்கள். கடற்பரப்பில் புலிகள் வெளியேற இயலாமல�� இந்திய படை மட்டுமல்லாமல், உலகின் மிகவலுவான கடற்படையான அமெரிக்காவின் பசிபிக் கமெண்ட் நிலைகொண்டது. இதன் கமெண்டர் ஜெனரல் கொழும்பில் இதே தினத்தில் 2009ல் தரை இறங்கினார். இந்தியாவில் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற முதல் நாள் இது. மே 15,16ம் தேதிகள் 'இனப்படுகொலை தடுப்பு ஐ.நா பொறுப்பாளர்' எச்சரிக்கை அறிக்கைகள் விடுத்தவண்ணம் இருந்தார்.
இச்சமயத்தில் தமக்கான அரசியல் நகர்வுகள் குறித்து இந்திய-அமெரிக்க-இங்கிலாந்து அதிகாரிகள் தொடர்ந்து உரையாடினர். இதில்
எம்.கே.நாரயணன், விஜய் நம்பியார், சதீஸ் நம்பியார், ஜோசி, சிவசங்கர்மேனன், கோபாலன் அச்���ங்குளங்கரை என நீண்ட பார்ப்பன-மலையாளி மாபியா கட்டமைவு குறித்து விக்கிலீக்ஸ் இணையத்தில் அமெரிக்காவின் கேபிள்-ஆவணம் குவித்திருந்தன.
'நினைவேந்தல்' என்பது இந்த அரசியலை நினைவுகூர்வதும், அரசியலாக உணர்வதுமாகும். பார்ப்பன இந்தியாவும், ஏகாதிபத்திய மேற்குலகும் நடத்திய போரில் நாம் கற்றுக்கொள்ள ஏராளமுண்டு. இதில் திமுகவின் பின்வாங்கல்-சமரசம்-சரணடைதல்-ஒடுக்குமுறை-இரண்டகம், தமிழ் இயக்கங்களின் ஒற்றுமையின்மை, இடதுசாரிகளின் போதாமை, பெரியார் இயக்கங்கள் வெளிப்படுத்திய போர்க்குணம் என நாம் மீளாய்வு செய்யவும், முன்னகரவும் நினைவேந்தல் நமக்கான வாய்ப்பை கொடுக்கிறது. இவற்றை தற்போதய இசுரேல்-பால..ஸ்.தீ.னம் நிலையும், எகிப்து-துருக்கி-சவுதியின் சமரசமும், ஈரான்-யேமனின் போர்க்குணமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சமகால வரலாற்று பாடங்கள்.
நாளை கோவையில் நினைவேந்தல் பொதுக்கூட்டம், மே18ம் தேதி சென்னை பெசண்ட் கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வும் நடக்க உள்ளது. அவசியம் பங்கேற்க வாருங்கள்.
(-மேலதிகம் பேசுவோம்)