பொறுப்பு ஆளுநருக்கு 'பொறுப்பு' வேண்டாமா?
…………………………………..
மதுரையில் நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர்
திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், "மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன்.
ஆறு உள்ளது, நீர் எங்கே? துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான்.
வைகையை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்" என்று பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தையும் நடத்தியுள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர்.
கேரளாவின் ஆளுநராக உள்ள அர்லேகர், கடந்த மார்ச் 12ஆம் தேதி தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார். பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு இருக்க வேண்டாமா என்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பும்படி அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன.
மும்மொழி கொள்கை எனும் பெயரில் இந்தி திணிப்பு, தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் குலக்கல்வியான
சனாதன கருத்தியலை கொண்ட புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றால் தான், ஒருங்கிணைந்த கல்வி' திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை வழங்குவோம் என்று ஒன்றிய அரசு சொல்லி வருகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்கும் வேலையில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.
அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு கொண்ட பொறுப்பு ஆளுநர் இது குறித்து வாய் திறப்பாரா?
தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரி ஆற்றை தடுத்து நிறுத்தி, எமது உரிமையை பறிக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு சொல்லி வருகிறது.
அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் கர்நாடக அரசுக்கு, இந்திய ஒன்றிய அரசு மறைமுகமாக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இசைவு இல்லாமல்,
கடும் எதிர்ப்பை மீறி மேகதாது அணை திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது.
தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் இத்திட்டத்தை எதிர்த்து பொறுப்பு ஆளுநர் வாய் திறப்பாரா?
தமிழ்நாட்டின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து எதுவும் பேசாத ஆளுநர் அர்லேகர் அவர்கள், அவருக்கு முன்பு இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி போலவே தமிழர்களுக்கு தொடர்பில்லாத, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார்.
கடந்த ஜூலை 1ஆம் தேதி தான் தில்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷாவை ஆளுநர் அர்லேகர் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் நலன்கள் குறித்து உள்துறை அமைச்சருக்கு ஏதேனும் கோரிக்கை வைத்தாரா?அல்லது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்பட வேண்டும் என 'ஆலோசனை' பெற்று வந்தாரா என்று கேள்வி எழுகிறது.
2014ல் ஒன்றிய பாஜக ஆட்சி அமைந்ததும், தூய்மை கங்கை திட்டத்தை கொண்டு வந்தனர். நீர்வளத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 2014 முதல் 2026 வரை செலவிடப்பட்ட மொத்த தொகை 26,824.86 கோடி ரூபாயாகும். 26 ஆயிரம் கோடியை கொட்டிய பின்பும் கங்கை ஆற்றின் நிலை என்ன? மனித பிணங்களும், ஆலை கழிவுகளும் தானே அதன் அடையாளமாக இன்றும் உள்ளது.
இது குறித்து வாய் திறப்பாரா பொறுப்பு ஆளுநர்?
காவிரி உரிமையை பாதுகாப்பது, வைகையை மீட்பது, தாமிரபரணியை போற்றுவது ஆகிய கடமைகளை தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ளும்.
எமது முதல்வர் மாண்புமிகு @CMOTamilnadu அவர்கள் அதற்கான திட்டங்களை உத்திகளை மேற்கொள்வார்.
ஆளுநர் முதல்வருக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லலாம்.
அதை விடுத்து,அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்த முயற்சிப்பது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
புதிய அரசை அவமதிப்பது மட்டுமல்ல; ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும்.
தமிழ் வளர்த்த மதுரையில் 'வசுதைவ குடும்பகம்' என்று தமிழர்களுக்கு பாடம் எடுத்துள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர்.
புறநானூறு சொல்லும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என எல்லோரையும் நேசிக்கும் தமிழர்களுக்கு தேச பக்தி குறித்து பாடம் எடுக்க தேவையில்லை.
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ளது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
ஆளுமையுள்ள புதிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து வருகிறார்.
தமிழ்நாட்டின் இறையாண்மைக்குள் - நிர்வாகத்துக்குள் ஆளுநர் தலையிடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
-வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
3.7.2026
ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு
தனி சட்டத்தை உடனே நிறைவேற்று!
*தலித் அமைச்சர்கள் 8 பேர் இருந்தும்! தமிழ்நாட்டில் 2 மாதங்களில் 8 ஆணவக் கொலைகள்!
*மனிதநேயத்தை வளர்த்து மானுடத்தை காப்பாற்று!
*தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் பயிற்சி மூலமாக இளைஞர்களை பெண்களை தலித்துகளை பாதுகாக்க முறையான செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும்!
"சங்கத்தமிழன்" Er. M. SARAVANA
https://t.co/d72PdFelTT
மின்துறை சார்ந்து நம் அலுவலகத்தில் மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களை நேரில் சந்தித்து வழங்குவதற்கு தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறைக்கு நேற்று (02.07.26) சென்றோம். மாண்புமிகு அமைச்சர் நிர்மல் குமார் அவர்களுடன், அவரது அறையில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. V. காந்திராஜ் மற்றும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன் ராஜா அவர்களையும் சந்தித்தோம்.
@CTR_Nirmalkumar
#Gandhiraj
#MathanRaja
மதச்சார்பற்ற நிலைப்பாட்டில்
மாண்புமிகு முதல்வர் அவர்களின் பாராட்டத்தக்க உறுதிப்பாடு!
பக்ரீத் திருநாளுக்கு
முதல் நாள், மாடுகளை கொல்வதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வந்தபோதே, இது முஸ்லீம் மக்கள் முன்னெடுக்கும்
பக்ரீத் எனும் ஒரு மத நம்பிக்கைக்கு எதிரானது மட்டுமில்லாமல், விலங்குகளை பலியிடும் வழக்கத்தை கொண்டுள்ள தமிழ் குல தெய்வ பண்பாட்டுக்கும் எதிராக அமைந்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சனநாயக - மதச்சார்பற்ற சக்திகள் சுட்டிக்காட்டினர்.
இப்போது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நமது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. விலங்குகளை கொல்வதற்கும், அதனை ஒழுங்குபடுத்துவதற்கும், மேலும் விலங்குகளை பாதுகாப்பதற்கும் மாநில அரசு கொண்டுவந்து நடைமுறையில் உள்ள சட்டங்களை நீர்த்து போகச் செய்யும் வகையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது என்று தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டி உள்ளது.
நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்கும் தமிழ்நாட்டின் மதச்சார்பின்மை
பண்பினை பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, மதச்சார்பின்மை கொள்கையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்துகிறது.
முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆடு, கோழி பலியிடுவதற்கு எதிராக கொண்டுவந்த சட்டம் மக்கள் மன்றத்தில் வீழ்த்தப்பட்டது. இன்று நீதிமன்றத்தின் வழியாக அதனை மீண்டும் கொண்டு வர எடுக்கப்படும் முயற்சியும் உறுதியாக வீழ்த்தப்படும்.
நிச்சயம் வெல்வோம்!
- வன்னி அரசு
அமைச்சர் - சமூகநீதித்துறை
தமிழ்நாடு
02.07.26
மாநில அளவிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பங்களிப்பாளர்கள் (Stakeholders) கூட்டம் இன்று (02.07.26) ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் டாக்டர் என். சுப்பையன், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு. க.சு. கந்தசாமி, ஆதிதிராவிடர் நல இயக்குநர் டாக்டர் கி. செந்தில் ராஜ், பழங்குடியினர் நல இயக்குநர் திரு. எஸ். அண்ணாதுரை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் திருமதி உமா மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த பங்களிப்பாளர்கள், நமது துறையின் மூலம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களில் உள்ள சிக்கல்கள், தேவைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். அனைவரின் கருத்துகளும் கவனத்தோடு பரிசீலிக்கப்படும் என்றும், இத்தகைய பங்களிப்பாளர்கள் கூட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தோம்.
🔴 ஆணவ படுகொ*யை தடுக்க தனி சட்டம் இயற்றக்கோரி தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் விஜயை அவர்களை சந்திக்கிறார்.
#thiruma_army
கோவையில் நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனுகீர்த்தனாவின் குடும்பத்தினரை #CPIM சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். #CPIM கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் உடன் இருந்தனர்.
தரங்கம்பாடி பார்த்திபனின் பெற்றோருக்கு ஆறுதல்
தரங்கம்பாடி சாத்தங்குடியைச் சேர்ந்த மாரிமுத்து - விஜயலட்சுமி இணையரின் மகன் பார்த்திபனும் இன்னொரு சாதியைச் சேர்ந்த அவரது காதலியும் தூக்கில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தலைவர் @thirumaofficial அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க பார்த்திபனின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி நிதி வழங்கினேன். சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டேன்.
மண்டலச் செயலாளர் அறிவழகன்; மாவட்டச் செயலாளர்கள் அன்பரசன், தாமு இனியவன்; நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, மதி, தேவா, செந்தில் செல்வகுமாரி, சசிகலா, சந்தியா, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்தேன்
தரங்கம்பாடி சாத்தங்குடி பார்த்திபன் ஆணவக் கொலை புகார் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் பேசினேன். வழக்கை எவ்வித பாரபட்சமும் இல்லாமல் விசாரித்துக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அந்த ஊரில் பட்டா இல்லாதவர்களுக்கு மனைப் பட்டா வழங்குவது, தலித் குடியிருப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகக் கட்டப்படும் மீன் குளிரூட்டும் ஆலை தொடர்பான விஷயங்களையும் எடுத்துக்கூறினேன்.
மண்டலச் செயலாளர் அறிவழகன், சீர்காழி மாவட்டச் செயலாளர் தாமு இனியவன், நிர்வாகிகள் உமா காந்தன், தேவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில் குஜராத்திலுள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஜே.எம்.வியாஸ் மற்றும் உயர் அலுவலர்களுடன் சந்தித்துப் பேசினேன்.
The rhythm is rising.
The stage is set.
A cultural movement begins.
From the soul of folk traditions to the pulse of contemporary expression, the Kerala Grand Cultural Festival celebrates the spirit, stories, and creativity of Kerala.
Presented by Neelam Cultural Centre Kerala.
Coming Soon.
The countdown begins.
@neelamkerala
#KeralaGrandCulturalFestival #NeelamCulturalCentreKerala #NeelamCulturalCentre #CultureLives #KeralaCulture #FolkMusic #Dance #Theatre #VisualArts #Heritage #CommunityArts #ComingSoon #StayTuned
இன்று (01.07.26) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) தலைமை அலுவலகத்தில், தாட்கோ செயல்படுத்தி வரும் பணிகள் மற்றும் புதிய திட்ட பணிகள் குறித்து தாட்கோ மாவட்ட மேலாளர்கள் மற்றும் செயற் பொறியாளர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்குபெற்றோம்.
இக்கூட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் டாக்டர்.என். சுப்பையன், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு. க.சு. கந்தசாமி, பழங்குடியினர் நல இயக்குநர் திரு. எஸ். அண்ணாதுரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
@tahdco
சென்னை சோழிங்கநல்லூர் தோகுது - திருவள்ளுவர் நகர் மக்கள் பட்டா கோரி - தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayhqOff கோரிக்கை பொதுக்கூட்டம் @Theekkathir
#vck#thiruma#Cpim https://t.co/Vx3v2w9PED