This is torn after election code of conduct should not be for other reasons.
Just to hide Leaders face. Most places this has been covered with Tharpaai
Remaining which where as stickers were torn.?!!
தமிழகம் முழுவதும் உள்ள பொது கழிப்பிடங்கள், @CMOTamilnadu அவர்கள் பயன்படுத்தும் தரத்தில் சுத்தமாகவும் பராமரிப்புடனும் இருக்க வேண்டும்.
அதுதான் உண்மையான மக்கள் நலம்.👍
செய்வன திருந்தச்செய்😊👍
Should be the way!!
சென்னை, கொளத்தூர் அகரத்தில் அமைந்நுள்ள ஜெயின் பள்ளியில் இருந்து அதே பகுதியில் அமைந்துள்ள சேக்ரட் ஹார்ட்ஸ் பள்ளிகளுக்கு 350m இடையே 2 TASMAC கடைகள் உள்ளன, அவை மூடப்படும் தானே? பல ஆண்டுகால கடைகள்!!
#tvkgovernment
2021 தேர்தலின்போது செய்தி விவாதங்களில், யூட்யூபில் எல்லாம் ஜெயரஞ்சன், சூரியா, கருபழனியப்பன் போன்றவர்கள் தரவுகளுடன் அருமையாக திமுக ஆதரவாக பேசினர், மக்களிடம் வெகுவாக சென்றடைந்தது
இந்தமுறை இது சரிவர நடக்கலனு தோனுது?! ஊடகவியாளர்கல் திமுக சார்பு பேசியது தான் அதிகம்!!
@DMKITwing
Though a staunch DMK supporter, I have not tweeted much about Stalin in the past years. But he has delivered the best for TN in the last five years. He never name called any other party leader. He has always stood for the TN people and their growth. His absence will be felt😊
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Just In | The AIADMK is learnt to have sent feelers to the DMK seeking support to form a government in Tamil Nadu where the recent elections threw up a hung Assembly. The DMK leadership, however, gave short shrift to the proposal, sources said. The DMK “was firm on sitting in the Opposition”, as it was not interested in going against the people’s mandate.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.