யாரும் மாற்றி அமைக்கவும் முடியாத, மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாத;
இறவாப் புகழ்பெற்ற,
மக்கள் மனங்களில் மகுடம் சூடிய மக்கள் நலத் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கும் வரை;
#திராவிடமாடல் அரசுதான் நீடிக்கிறது.. திராவிட பேரரசர்தான் ஆள்கிறார்; என்பதே நிதர்சனமான உண்மை!💪🔥🌅
@mkstalin@Udhaystalin
#DravidianModel
#DMK
நம் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு. @kalaivanandmk அவர்களின் இல்ல திருமண விழாவில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் இன்று கலந்து கொண்டோம்.
கழகத்தின் குடும்ப விழாவாக தஞ்சையில் நடைபெற்ற இந்த விழாவில், இல்லற வாழ்வில் அடி எடுத்து வைக்கும் மருத்துவர் க.கலையழகி - மருத்துவர் ந.ராம்பாலாஜி இணையரை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
திருவாரூர் மாவட்டக் கழகத் தூணாக விளங்கி, கழகத்தினர் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் அண்ணன் பூண்டி கே.கலைச்செல்வம் - மல்லிகா ஆகியோரின் அன்பு மகள் மருத்துவர் க.கலையழகி - மருத்துவர் ந.ராம்பாலாஜி இணையேற்பு விழா தஞ்சாவூரில் கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் கழக இளைஞர் அணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான திரு @Udhaystalin அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது அவர், ``பெரியாரும் பகுத்தறிவும் போல, அண்ணாவும் அழகுத்தமிழும் போல, கலைஞரும் போர்க்குணமும் போல மணமக்கள் என்றென்றும் வாழ்க, வளர்க!’’ என்று வாழ்த்தினார்.
கழக இளைஞர் அணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான திரு.உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய வாழ்த்துரையின் விவரம் வருமாறு:
இன்றைக்கு நம் கழகத் தலைவரின் தலைமையில், திருவாரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகமாக இருக்கக்கூடிய நம் அண்ணன் பூண்டி கலைவாணன் அவருடைய இல்லத் திருமண விழாவில், உங்களோடு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தேர்தல் முடிவுகள் எல்லாம் வந்த பிறகு, நம் தலைவர் அவர்கள் கலந்துகொள்கின்ற முதல் பொது நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சி.
மாவீரர், மறைந்த அண்ணன் பூண்டி கலைச்செல்வன் அவர்களின் அன்பு மகள், மருத்துவர் கலையழகி - மருத்துவர் ராம் பாலாஜி இணையரின் இந்தத் திருமண நிகழ்ச்சி, இன்றைக்கு ஒரு சாதாரண திருமண நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், நம் கழகத்தின் நிகழ்ச்சியாக மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மணமகள் திருவாரூர் மாவட்டம், மணமகன் திருச்சி மாவட்டம், திருமணம் நடைபெறுகின்ற இந்த இடம் தஞ்சாவூர் மாவட்டம். மொத்தத்தில் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டமும் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்து, இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. யார் எந்தப் பக்கம் போனாலும், எந்த மாவட்டம் எந்த முடிவு எடுத்தாலும், டெல்டா எப்போதுமே திராவிட முன்னேற்றக் கழகம் பக்கம்தான் என்பதை நிரூபித்துக் காட்டிய உங்கள் அத்தனைபேருக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
டாக்டர் கலைஞர் அவர்கள்
திருவாரூர் மாவட்டத்தில், நம் திராவிட முன்னேற்றக் கழகம் வளர்வதற்கு உறுதியான அடித்தளத்தைப் போட்டவர் நம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். அவரை நீங்கள் என்றைக்கும் விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். திருவாரூர் மாவட்டம் மட்டும் இல்லை, ஒட்டுமொத்த டெல்டாவுமே என்றைக்குமே கழகத்தின் கோட்டையாகத்தான் விளங்கிக் கொண்டிருக்கிறது.
கழகத்தின் வரலாற்றில், அதுவும் குறிப்பாக இந்த டெல்டா பகுதியின் அரசியல் வரலாற்றில், பூண்டி கலைச்செல்வம் அவர்களின் பெயர் என்றைக்குமே நிலைத்து நிற்கும்.
இன்றைக்கு அண்ணன் கலைச்செல்வம் அவர்களின் வழியில், அவருடைய தம்பி, நம் அண்ணன் கலைவாணன் அவர்களும், அவருடைய மகன், தம்பி கலைவேந்தனும், அவர்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும் இன்றைக்கு கழகத்திற்காகக் களத்தில் இறங்கி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்தக் குடும்ப நிகழ்ச்சிக்கு வருகை தந்திருப்பதில், எனக்கு மிகுந்த பெருமை.
கழகம் மீண்டும் வெற்றி
தமிழ்நாடு முழுவதும், இது மாதிரியான லட்சக்கணக்கான கழகக் குடும்பங்கள் இருப்பதனால்தான் கழகம் எவ்வளவு பெரிய புயலைச் சந்தித்தாலும், நாம் திரும்பத் திரும்ப மீண்டும் எழுந்து வந்துகொண்டிருக்கிறோம்.
இந்தத் திருமணத்தில் இருக்கக்கூடிய எழுச்சியையும், உங்களின் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் பார்க்கும்போது நிச்சயம் நம் தலைவர், நிச்சயம் நம் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிவாகை சூடும் என்பதில், எனக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னமாதிரி, திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் அரசியல்இயக்கம் கிடையாது, வெறும் ஒரு கட்சி கிடையாது. அது ஒரு சமுதாயஇயக்கம். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் சகஜம். மற்றக் கட்சிகளைத்தான் அவையெல்லாம் பாதிக்கும். சமுதாயஇயக்கமான நம் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போல மக்கள் பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கும், நாமும் அப்படித்தான் இருப்போம். நம் தலைவருடைய வழிகாட்டுதலின்படி, அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.
களப்பணி - மக்கள் பணி
ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், தேர்தல் அரசியலில்தான் நாம் தோற்றிருக்கிறோமே தவிர, வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோமே தவிர, கொள்கைஅரசியலில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தோற்றது கிடையாது, தோற்கவும் மாட்டோம்.
எனவே, கழக உடன்பிறப்புகள், நாம் மீண்டும் எப்போதும் போல நம் களப்பணியை, மக்கள் பணியைத் தொடர்வோம். நம் தலைவர் எப்போதும் சொல்வது போல, ஆளுங்கட்சியாக இருந்தபோது மட்டும் அல்லாமல், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், நமக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்லாமல், வாக்களிக்காமல் போன மக்களுக்கும் சேர்த்தே நாம் உழைப்போம்.
நாம் தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஆபத்துகளை எல்லாம் நிச்சயம் தடுத்து நிறுத்துவோம். மாநில உரிமைகளை நிச்சயம் காப்போம். இப்பொழுதே… இந்த 10 நாட்களிலேயே… மக்கள், பல பெண்கள், இளைஞர்கள், இன்றைய தலைமுறையினர் (ஜென்ஸி கிட்ஸ்), இந்த ஆட்சியின் உண்மையான முகத்தை உணர ஆரம்பித்துவிட்டார்கள். நாளாக நாளாக நிச்சயம் இந்த ஆட்சியாளர்கள், தாங்களாகவே நிறைய வெளிப்படுவார்கள் (எக்ஸ்போஸ் ஆவார்கள்). போகப் போக இன்னும் பலருக்குப் பல உண்மைகள் தெரிய வரும்.
நிரந்தரமாக இருந்துவிடாது
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்ன ஒரு உதாரணத்தை, இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். தாயின் பாதுகாப்பில் இருக்கக்கூடிய ஒரு குழந்தை கிளுகிளுப்பை ஆட்டி விளையாட்டு காட்டுகின்ற ஒரு ஆளைப் பார்த்து நிச்சயம் மயங்கும், மகிழ்ச்சியடையும். தாயிடம் இருந்து தாவி, அந்தக் கிளுகிளுப்பு ஆட்டுபவனிடம் சென்று கொஞ்ச நேரம் அமர்ந்துகொள்ளும். ஆனால், அந்த குழந்தை கிளுகிளுப்பைக் காட்டுபவனிடம் நிரந்தரமாக இருந்துவிடாது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அதற்கு உண்மையான பாசம் என்றால், என்னவென்று தெரியும். தாயின் முகத்தை நிச்சயம் தேடிப் பார்க்கும். தாயிடம்தான் மீண்டும் திரும்பி வரும். அது மாதிரி இப்போது கவர்ச்சி மாயாஜாலத்தைக் காட்டி மக்களைச் சிலர் ஈர்த்து இருக்கிறார்கள். இந்த கவர்ச்சி, மக்களின் கஷ்டத்தைப் போக்காது. அடிப்படைப் பணிகளை நிறைவேற்றாது. எந்தப் பிரச்சினைக்கும் அது தீர்வு காணாது. எனவே, தாயின் அன்புக்கு ஈடாக எதுவும் இல்லை என்பதை, அந்தக் குழந்தை மீண்டும் உணர்ந்து தமிழ்நாட்டுக்குத் தாயாக இருக்கக்கூடிய நம் கழகத்தை, நம் தலைவரை நோக்கி, நிச்சயம் அந்தக் குழந்தை விரைவில் வரும்.
நம் தலைவர் அவர்கள் சொன்னது போல, ``சூரியன் ஒருபோதும் மறையாது, அது மறுபடியும் உதிக்கும், அதன் ஒளியில் தமிழ்நாடு மீண்டும் செழிக்கும்’’ என்று சொல்லி, மணமக்களுக்கு மீண்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
***
1949-இல் தொடங்கிய நம்முடைய கழகம், 1957-இல் நடைபெற்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 1962-இல் நடைபெற்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 1967-இல் நடைபெற்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 1971-இல் நடைபெற்ற தேர்தலாக இருந்தாரும் சரி, இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றிருக்கும் தேர்தல்களில் பல வெற்றிகளைக் கண்டதுண்டு; பல தோல்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம்.
ஆனால், தோல்வி அடையும் நேரத்தில்தான் தி.மு.க. எப்போதுமே ஒரு பீனிக்ஸ் பறவையைப் போன்று கிளர்ந்து எழும் நிலையில் வரும்.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK
முன்னாள் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் திரு. பொன்ராஜ் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு, மணமக்கள் திரு. P. சக்தி லிங்கேஸ்வரன் - S.சிவ பிரியா இணையரை வாழ்த்தினேன்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட என்னை 43,249 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெறச் செய்து, தொடர்ந்து 7-வது முறையாக மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த வாக்காளப் பெருமக்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் நேரில் சென்று நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தேன்.
என் மீது நீங்கள் வைத்துள்ள மாபெரும் நம்பிக்கைக்கும், காட்டும் அளவற்ற அன்பிற்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். உங்கள் எண்ணங்களை ஈடேற்ற, என் உழைப்பு தொடர்ந்து உங்களுக்காகவே இருக்கும்!
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கழகத் தலைவர் தலைவர் #மு_க_ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.#ஜி_ஆர்_வசந்தவேல்,BE.
அவர்கள்...🖤❤️
நேற்று சென்னையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு. #உதயநிதி_ஸ்டாலின் அவர்களை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர், திருநாவலூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், #ஜி_ஆர்_வசந்தவேல்,BE. அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்ற போது.
🖤❤️😍😍
உலகை இயக்கும் உன்னத சக்தி உழைப்பு!
கடின உழைப்பும், விடாமுயற்சியும் கொண்ட ஒவ்வொரு தனிமனிதனின் வெற்றியையும் இந்நன்னாளில் கொண்டாடுவோம். நாட்டின் வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எனது உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
உழைப்பால் உயர்வோம்!
உழைப்பால் உலகை வெல்வோம்!