@CHN_Metro_Water மதிற்பிற்குரிய ஐயா , நான் டே.ஜாக்சன் ஜெயராஜ் சென்னை,விருகம்பாக்கம், வேத நகர் 1 வது மேட்டுப்பகுதியில் வசித்து வருகிறேன் மூன்று ஆண்டுகளாக புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆதலால் நான் ஆன்லைன் மூலமாக புகாரை பதிவு செய்துள்ளேன். கழிவுநீர் தொட்டியை முறைக்காக பராமரிக்கப்படவில்லை உதாரணமாக (மண் எடுக்கவில்ல
/ மாதத்திற்கு யர்முறையாவது அடைப்பை சீர்செய்வதில்லை ) இது போன்ற சிறு காரணத்தினால் எலிகள் தொல்லை அதிகஅளவில் கழிவுநீர் தொட்டியை மண் அடைப்பு உள் ஆனது இதன் காரணமாக அதிகஅளவில் கழிவுநீர் வெள்ளம்போல் சாலையில் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறிது , துர்நாற்றம் வீசுகிறது / துர்நாற்றத்துடன் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சாலையில் நடுக்குகிறார்கள் / கொசுக்கள் தொல்லை / சாலையில் நடக்க முடியவில்லை ஆதாரமாக புகைப்படம் பதிவிட்டுள்ளேன். இதை சீர்செய்து தரும்படி மிக மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
A true leader who values people - Hon’ble @EPSTamilNadu !
பாட்டு பாடி மகிழ்விக்கும் போக்கில் செல்லும் சட்டமன்றத்தில், மக்கள் படும் பாடுகளை பேசும் ஒரே தலைவர் மாண்புமிகு புரட்சித் தமிழர் #எடப்பாடியார் !
7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மூலம், எளியோரின் தலைமுறைகளைத் தலைநிமிரச் செய்து, விளிம்புநிலை மாணவர்களின் நீண்டகால மருத்துவக் கனவை நனவாக்கி, தமிழ்நாட்டின் மருத்துவ வரலாற்றில் நூற்றாண்டு கடந்தும் நிலைத்து நின்று பேசப்படும் சரித்திர சாதனை புரிந்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
@Keerthana4VNR 49 லட்சத்துக்கு இந்த மாதிரி 5 பாக்ஸ் கட்டலாம்.
மிஞ்சி மிஞ்சி போனா எனக்கு தெரிஞ்சு ஒரு 5 லாக்ஸ் டு டென் லாக் ஆயிருக்கும்.
இதுல பணம் நன்றாக ஊழல் நடந்திருக்கு
Good News: பள்ளிக்கரணை சதுப்புநில ராம்சார் எல்லைக்குள் அமையவிருந்த பிரிகேட் (Brigade) நிறுவனத்தின் 1250 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) அல்லது சென்னை உயர் நீதிமன்றம் போன்ற உரிய நீதிமன்றத்தை அணுகாமல் உச்சநீதிமன்றத்திற்கு வந்தது ஏன் என்று கேள்வி ? தங்களால் விசாரிக்க முடியாது எனக் கூறி உச்சநீதிமன்றம் இன்று வழக்கை தள்ளுபடி செய்தது!
Good News: Brigade's challenge against revocation of Environmental Clearance for their 1250 multistoried real estate project within Ramsar Boundary of Pallikaranai marsh came up before the Supreme court. Supreme Court questioned why they have come to the apex court instead of going before the relevant courts. Supreme Court disposed their case saying they cannot hear this case.
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது.
இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி @thinak_ பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார்.
அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம்.
RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம்.
27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி!
அறப்போர் தொடரும்!