கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
#KarurTragedy
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, மதிமுக பொதுச் செயலாளர் அண்ணன் வைகோ அவர்கள், மக்களவை உறுப்பினர் சகோதரர் @duraivaikooffl மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த போது உடனிருந்தோம். அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்.
@evvelu
"உதயசூரியனின் உதயம்" குட்டி Story சொல்லட்டுமா?@TVKVijayHQ
1967ம் ஆண்டு…
தமிழ்நாட்டின் மக்கள், ஒருமாற்றத்தைத் தேடிக்காத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது, நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது.
அந்த போரில் முன்னிலை வகித்தது பெண்களின் பூவும் பொட்டையும் பறிக்கப்பட்ட துயர நினைவுகள்.
அவர்களது உரிமைக்காக, அடக்குமுறையை எதிர்த்து ஒருவர் குரல் கொடுத்தார்..
அவர் பெயர் – அண்ணா.
அவர் சொல் – “நம் மொழி, நம் மண், நம் மக்கள், நம் அடையாளம்.”
அவர் சின்னம் : உதயசூரியன் “இந்தி ஆதிக்கம் வேண்டாம்,
தமிழ் வாழவேண்டும்,
தமிழரின் உரிமை நிலைக்க வேண்டும்.”என்று முழங்கினார்.
வெயிலும் மழையும் பாராமல், வீதி வீதியாக நடந்துதான் அவர் பிரச்சாரம் செய்தார். பாட்டாளி மக்களின் வாக்கும் நெசவாளர்களின் வாக்கும் ஒரு புரட்சியை உருவாக்கும் என்று நம்பினார்.
அந்த உணர்வின் பேரில்,
உதயசூரியன் உதித்தது,
மக்கள் வாக்கு வென்றது,
அண்ணாவின் தலைமையில் 1967-ல் திமுக ஆட்சி அமைந்தது.
அன்று தொடங்கியது ஒரு புதிய யுகம்,
மக்களுக்காக, தமிழுக்காக, தமிழனுக்காக.
மீண்டும் தொடரும் மக்களின் மாபெரும் ஆதரவுடன் 2026 கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில்....
"உதய சூரியன் மக்களின் நம்பிக்கைச் சூரியனாய் உதிக்கும்." 🙏
நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, இன்று புகழ்பெற்ற உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ - மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினேன்.
மிகவும் பின்தங்கிய - துன்பங்களை அனுபவித்த குடும்பங்களில் இருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் அவர்களது கல்விப் பயணத்தையும் - கல்வி மீதான அவர்களது பற்றையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கினேன்.
கல்விதான் உண்மையான பெருமையைத் தேடித் தரும் என உயர்படிப்புகளுக்குச் சென்றுள்ள இவர்கள் வாழ்வின் அத்தனை உயரங்களையும் காண வேண்டும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன்! இப்படி கல்வியால் - உழைப்பால் முன்னேறிச் சாதனை படைப்பவர்களைத்தான் தமிழ்ச்சமூகம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்!
தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சம்மேளனம் சார்பில் புது டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் பெற்றன.
அந்த விருதுகளை, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம், மாண்புமிகு சுற்றுலா மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சர் அண்ணன் @SalemRRajendran உள்ளிட்டோர் இன்று காண்பித்து வாழ்த்து பெற்ற நிகழ்வில் நாம் உடனிருந்தோம்.
இந்நிகழ்வின் போது, கள்ளக்குறிச்சி மற்றும் அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இலாப பங்கீட்டு ஈவுத்தொகையாக 22 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
சர்க்கரைத் துறை மென்மேலும் சிறக்க என் அன்பும், வாழ்த்தும்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் அரசின் சாதனைகளை விளக்கி, இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தெருமுனைக்கூட்டங்களின் புகைப்படத் தொகுப்பு!
@Udhaystalin #DMK4TN #கழக_இளைஞர்_அணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் பண்பாட்டுச் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள 94 புலம்பெயர் தமிழ் இளைஞர்களின் பயணத்தை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்த போது, மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் பங்கேற்றார்கள்.
அயல்நாடுகளில் வசிக்கின்ற புலம்பெயர் தமிழ் இளைஞர்கள், தமிழ்நாட்டிலுள்ள தமிழின் தொன்மை, தமிழர் வாழ்வியல், கலாச்சாரம், சிற்பக்கலை, கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் விதமாக, ‘வேர்களைத் தேடி’ எனும் பண்பாட்டுப் பயணத் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் கீழ், இந்தாண்டு தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்ளவுள்ள 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 98 புலம்பெயர் தமிழ் இளைஞர்களின் பயணத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம்.
இப்பயணத்தை மேற்கொள்ளவுள்ள அயலகத்தமிழ் இளைஞர்களுக்கு பயண குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டை மற்றும் உடைகள் போன்ற பொருட்களை வழங்கி நம் முதலமைச்சர் அவர்கள் வாழ்த்தினார்கள்.
தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கும் நம் தாய்த்தமிழ் உறவுகள் தங்கள் வேர்களைத் தேடி புறப்படுகின்றனர். அவர்களின் பயணம் சிறக்க என் அன்பும், வாழ்த்தும்!
@Avadi_Nasar
#நலம்_காக்கும்_ஸ்டாலின்
🩺ஆகஸ்ட் 2 சென்னையில் தொடங்கி வைக்கிறேன். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் இந்த முகாம்களில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
🏥 தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன... வாரந்தோறும் சனிக்கிழமைகளில்!
💉 முகாம்களிலேயே பரிசோதனை முடிவுகள் SMS வாயிலாகப் பயனாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்.
🩸🩻 Blood Test, ECG, X-Ray, USG, மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனை முடிவுகளை உள்ளடக்கிய மருத்துவக் கோப்புகளும் (Folders) வழங்கப்படும்.
🤝 உங்கள் குடும்பத்தின் நலன்
அரசின் பொறுப்பு!
வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் மக்களை சந்திக்கும்போது மக்கள் உங்கள் தொண்டர்கள் முன் வைக்கும் இந்த கேள்விக்கு பதில் உள்ளதா @TVKVijayHQ
*தமிழ்நாட்டு மக்களாகிய நாங்க உயர ஒரு அரசியல் கட்சி தலைவரா இதுவரை உங்க விஜய் என்ன செஞ்சாரு?
*எங்க ஊருக்கு என்ன செஞ்சீங்க?
*எங்க வீட்டுக்கு என்ன செஞ்சீங்க?
*எங்க வீதிக்கு என்ன செஞ்சீங்க?
சரி..இதுவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக பத்திரிக்கையாளர் சந்திப்பாவது உங்கள் தலைவர் நடத்தி உள்ளாரா?
இந்த கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை என்றால்
நகைச்சுவை நடிகர் கூறியதுபோல்
“வெளியே போங்கடா... அயோக்கிய ராஸ்கல்களா…” என்று மக்கள் கூறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்