இன்று (27.08.26) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-2027ஆம் ஆண்டுக்கான சமூகநீதித்துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்க செல்லும் முன்னர், தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களுடன், புரட்சியாளர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்.
@thirumaofficial
Many many happy returns of the day, Thiru @thirumaofficial.
Wishing you good health, happiness and continued strength in your service to the people and in your fight to defend social justice, federalism and Constitutional values.
#ஆகஸ்ட்17#எழுச்சித்தமிழர் பிறந்த நாள்
#தமிழர்_எழுச்சி_நாள்
இன்று-
உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெறும்
#தமிழ்த்தேசிய_எழுச்சி_மாநாடு
வெற்றி பெற
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்
@CMOTamilnadu
வாழ்த்து செய்தி.
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு
விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நன்றி.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
17.8.2026
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மேனாள் முதல்வர் மரியாதைக்குரிய அண்ணன் தளபதி @mkstalin அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
ஆதித்தமிழ்க் குடியில் மிகவும் எளிய பின்புலத்தில் பிறந்து சாதிய அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி ஆழ்தளத்திற்குத் தள்ளப்பட்டபோதும் தனது ஒப்பற்ற செயல்திறனால் தலைவனாக வளர்ந்து உயர்ந்து சாதி பேதமற்ற சமூக விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்காகவும் அயராது களத்தில் நிற்கிற தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அன்பிற்குரிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளை உரித்தாக்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
அண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும்! தமிழ்ச்சமூகம் விடுதலையை எட்டட்டும்!
இன்று (17-08-2026) அண்ணன் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் தமிழ்த்தேசிய மாநாடு வெல்லட்டும்..!
@thirumaofficial
மேலும் சிறக்கட்டும்.
தங்களின் சிந்தனையும், போராட்டமும், ஜனநாயகப் பயணமும் தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாதைக்கு தொடர்ந்து வலுசேர்க்கட்டும்.
@thirumaofficial
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தங்களது பொதுவாழ்வுப்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு சகோதரர் திருமாவளவன் அவர்கள் தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளையில், அவர்களின் மக்கள் பணி, சமூகப் பயணம் தமிழ் மண்ணில் தொடர்ந்து ஆற்றிடவும், நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
@thirumaofficial
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அரசியல் களம் கண்டு, தந்தை பெரியாரின் சமூகநீதி, புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியலமைப்பு ஜனநாயகம், பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சி ஆகிய மக்களுக்கான அரசியலை நாற்பதாண்டுக்காலம் உயிர்மூச்சாகக் கொண்டிருப்பவர்; ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் என்றும் எனது அரசியல் ஆசானுமாகிய அண்ணன் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் @ThirumaOfficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட விழைகிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய, அண்ணன் திரு @thirumaofficial அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @thirumaofficial அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து தனது மக்கள் பணிகள் மேற்கொள்ள, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பிறப்பினால் எவரும் எவருக்கும் தாழ்ந்தவரும் அல்ல உயர்ந்தவரும் அல்ல எனும் மானுட சமத்துவத்தை அரசியல் சித்தாந்தமாகக் கொண்டு களமாடும் என் உடன் பிறவாச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து.
@thirumaofficial
இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடுகிற, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிறந்த நாடாளுமன்ற வாதியும், அன்பு அண்ணனாகிய தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிகாரத்தில் பங்கு என்கிற அண்ணனின் இலக்கினை எட்டிய இந்த பிறந்த நாளில் கூடுதல் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம்!
@thirumaofficial
#HBD | #Thirumavalavan | #ArunraajTVK
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @thirumaofficial அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அம்பேத்கர் - பெரியார் கொள்கைகளின் வழியே சமூகநீதிப் பாதையில் மக்கள் பணி தொடர்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.
தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay
மதிப்பிற்குரிய தோழர் திருமா அவர்களது அகவை நாளில் அவரது தலைமையில் , விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் 'தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு' பெருவெற்றியடைய எமது வாழ்த்துகள். தோழர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தமிழ்த்தேசியம் வெல்லட்டும்!
தமிழ்நாடு சிறக்கட்டும் !!
@thirumaofficial@VCK_in@VanniTamizhVCK@VckBalaji@aloor_ShaNavas@velichamtvtamil@sinthanaivck