கொடுத்த வாக்குறுதியை கேட்டு அறவழியில் போராட்டம் நடத்திய ஆசிரியர் கையை போலீசார் உடைத்ததை கண்டித்து ஆசிரியர்கள் தர்ணா!!
கஞ்சா அடிக்கிறவன், கொலை பண்றவன் பாலியல் வன்கொடுமை பண்றவனலாம் பாதுகாப்பா பாத்துக்குவாங்க அப்பாவி பொதுமக்கள் கிட்ட தான் வீரத்தை காட்டுவானுங்க திமுகவின் ஏவல் துறை😡
@mkstalin வாக்களித்த கையை உடைப்பது தான் நியாயமா சமூக நீதி காவலரே?
8வது நாளாக போராட்டம்
சென்னையில் 8வது நாளாக `சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
#teachersprotest#DMKDestroyedTN#DMKFailsTN
#NewsTamil24x7NewsUpdate | தொடரும் ஆசிரியர்கள் கைது
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 8வது நாளாக தொடர்ந்து போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள்
சென்னையில் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராடி வரும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்
#Chennai#TeachersProtest#Arrest #TNPolice
#NewsTamil #Tamilnews #NewsTamil24x7
சமநிலைக்குச் சம ஊதியம் கேட்டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது - அறவழியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதைக் கைவிட்டு, தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி வளாகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமநிலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என 311ஆவது வாக்குறுதியில் உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும் அதனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதே இடைநிலை ஆசிரியர்களைத் தொடர் போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக மனு கொடுக்கும் போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், முற்றுகை போராட்டம் என, ஜனநாயகம் வழங்கியிருக்கும் உரிமைகளைப் பயன்படுத்தி, அறவழியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதும், கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைப்பதும் அரசு நிர்வாகத்தின் மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருப்பதாக ஆசிரியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, இனியும் கால தாமதம் ஏற்படுத்தாமல், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu