23.03.1999 அன்று, திமுக வின் சட்ட அமைச்சர் ஆலடி அருணா "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்று 5 இடத்தில் குறிப்பிட்டு பேசினார்!
அதற்கு அன்றைய முதலமைச்சர் கருணாநிதியோ, முஸ்லிம் லீக் உறுப்பினர்களோ, சபா நாயகரோ கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!
(04.01.2026 அன்று தந்தி தொலைக்காட்சி விவாதம்)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களையும், பொறுப்பாளர்களையும் குறித்து உண்மைக்குப் புறம்பான அவதூறு காணொள்ளி வெளியிட்டுவரும் ஆல்டன் பி. நெல்சன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் கொடுக்கப்பட்டது
வருங்காலங்களில் இந்த சிக்கல் வரும் போது நமது முன்னோர்கள் வேடிக்கை பார்த்து நின்றார்கள் என்ற வருங்கால தலைமுறை சொல்லிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த போராட்டம்!
செந்தமிழன் சீமான்
சென்னை, தி.நகரிலுள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர் கூட்டத்தின் அறப்போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையினரும், மாணவர் பாசறையினரும் இன்று (24.07.2026) கலந்துகொண்டு, போராடுபவர்களுக்கு ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
@Ntkyouthwing@ntkmaanavar
குட்டிக்கதையில் உங்க அப்பாவ காணோம் என்று கேட்ட அந்த முதியவரிடம் சிறுவன் கேட்டானாம்
"ஏன் நீங்களும் எங்க அப்பாவுக்கு கடன் கொடுத்தீங்களா தேடுறீங்கன்னு?!"
உலக வரலாற்றில் பெற்ற தாய் தந்தைக்கு கடன் கொடுத்ததாக சொன்ன ஒரே சிறுவன் அந்த மூளை வளர்ச்சி இல்லாத சிறுவன் தான்!
பொறுப்பேற்பு ( Accountability ) என்றால், என்னவென்றே தெரியாதா தவெகவுக்கு?
கரூர் பேரவலத்துக்கு இந்த நொடிவரைப் பொறுப்பேற்கவில்லை.
சட்டம் ஒழுங்குக்கும் முந்தைய ஆட்சியைக் கைக்காட்டியே தப்பித்துப் போக முற்படுகிறார்கள்.
கடைசியில் மின்வெட்டுக்கும் Fuse Carrier ஐ யாரோ சிலர் திருடிச் சென்று விடுவதாகவும், அதனால்தான் மின்வெட்டு ஏற்படுவதாகவும் கூறித் தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள்.
சென்னை எனும் இவ்வளவு பெரிய மாநகரத்தில் ஒருசில தனிநபர்கள் சேர்ந்து Fuse Carrierஐ திருடிச் சென்றுவிடுவதால் மாநகரம் முழுமைக்கும் மின்வெட்டை ஏற்படுத்திவிட முடியுமா?
இதென்ன விஜய் திரைப்படமா?
'கத்தி' திரைப்படத்தில் சிலர் விஜய்யோடு சேர்ந்து தண்ணீர் குழாய்களுக்குள் உட்கார்ந்துக் கொண்டு சென்னையை ஸ்தம்பிக்கச் செய்வார்களே, அதுபோல சிலர் Fuse Carrierஐ திருடி சென்னை மக்களையே ஸ்தம்பிக்கச் செய்ய?
சமூக வலைத்தளங்களில் கூறி வந்த ஜால்சாப்பை இப்போது சட்டமன்றம்வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தவெக.
மின்வெட்டுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்தால்தானே தீர்வை நோக்கி நகர முடியும்; இவர்கள் சிக்கலைத் தீர்க்க எங்கு நினைக்கிறார்கள்? பொய்யை, புரட்டைச் சொல்லி மக்களை ஏமாற்றவும், மடைமாற்றவும்தானே முயற்சிக்கிறார்கள்!
பிறகெங்கு, விளங்குவதற்கு?
திரைக்கலைத்துறையில் தம்முடைய ஒப்படைப்பு மிகுந்த நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகராக மக்கள் மனதில் நீங்காது நிலைத்திருக்கும், என் பேரன்பிற்குரிய அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும் உயரிய விருதான 'யுவ புரோஸ்கர்' விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.
கலைத்துறையில் அளப்பரிய சாதனைகள் புரிந்துள்ள அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
முதல்வரே!
‘சிங்கப்பெண் படை’ எனும் பல்லில்லா படையை வைத்துக் காலங்கடத்தப் போகிறீர்களா?
குற்றவாளிகளைக் கைதுசெய்யும் அதிகாரமோ, குற்றத்தின் பின்புலத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரமோ, விசாரணை செய்யும் அதிகாரமோ என எவ்வித அதிகாரமுமற்று வெறும் ரோந்துப்பணி செய்வதற்கு மட்டும் எதற்கு ஒரு தனிப்படை?
4 கோடி பெண்களின் தொகையைக் கொண்டுள்ள மாநிலத்தில் 5,000 பேரைக் கொண்ட சிங்கப்பெண் படை வெறும் ரோந்துப் பணிகளின் மூலமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமென்பது ஏமாற்று வாதமில்லையா? ஏற்கனவே, காவல்துறை வைத்திருந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ என்பதற்கும், ‘சிங்கப்பெண்’ படைக்கும் என்ன பெரிய மாறுபாடு?
- @_ITWingNTK
சினிமாவுல ஒரு கூட்டு குடும்ப படம், பேய் படம், வில்லேஜ் படம், கேங்ஸ்டர் படம் ணு, ஒன்னு நல்லா ஓடிட்டா, அடுத்து 10 படம் அதே டெம்ப்ளேட்ல மத்த கம்பெனிகள் எடுப்பாங்க, அதுல பெரும்பாலும் ப்ளாப் ஆகும்.
அப்படி, ஒரு விஜய் அரசியலுக்கு வந்து ஜெயிச்ச உடனே, வரிசையா கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க..
பசும்பொன்!
ஐயா பாரதிராஜா அவர்களது காவியப்படைப்புகளில் ஒன்று! அண்ணன் சீமான் அவர்களுடைய கதை, வசனத்தில் ஐயா பாரதிராஜா இயக்கிய ஒப்பற்றப் படைப்பு!
தான் செய்துகொண்ட மறுமணத்தால் தனது மூத்த மகன் பிரிந்துவிட அந்த மகனைச் சேரத் துடிக்கும் தாயின் உணர்ச்சிப்பூர்வமான பாசப்போராட்டம்தான் கதைக்களம்!
ஐயா சிவாஜி, ஐயா சிவக்குமார், பிரபு, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இளவரசு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே திரைப்படத்தில் இருந்தாலும், எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுவது போல அம்மா @realradikaa அவர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பார்.
"முத்துக்கணக்கான மூத்தப் பிள்ளைய தொலைச்சுப்புட்டேன். அந்தப் புள்ளை உன்கிட்டதான்யா இருக்கு" என ராதிகா பிரபுவிடம் உருகும் காட்சியிலும், இறுதிப்பால் ஊற்ற தம்பிகள் அழைக்கும்போது"வாழ்ற காலத்துல எல்லாம் எங்க ஆத்தாள வந்து பாருன்னு சொல்லாத நீங்க, இத்தன வருசம் கழிச்சு எங்க ஆத்தாள சாகடிக்குறதுக்கா கூப்பிடுறீங்க?" எனப் பிரபு அழும்போதும் உயிரே உருகும்.
படத்தின் இறுதிக்காட்சியை எவரும் கண்ணீர் சிந்தாது பார்க்க முடியாது.
சிவக்குமாரின் காலில் விழுந்து, "ஆயிரம் ஆயிரம் கோயிலுக்குப் போனாலும் அறுத்துக் கட்டுனவளுக்கு திருநீறு கொடுக்கிற சாமிதான் இருக்கு. குங்குமம் கொடுக்குற சாமி உலகத்துல எங்கயும் இல்லப்பு. எங்க ஆத்தாளுக்கு குங்குமத்தையும் கொடுத்து, வாழ்க்கையையும் கொடுத்த சாமி அப்பு நீங்க.. நீங்கதான் என் சாமி. நீங்கதான் என் குலதெய்வம்" எனப் பிரபு நெகிழ்வதாய் படம் முடியும். அண்ணன் சீமான் எழுதிய வசனம் அது.
'எவனொருவன் தாய்மைக்குத் தலை வணங்குகிறானோ, விதவைக்கு பொட்டிட்டு பூச்சூட்டுகின்றானோ அவன்தான் மனிதத் தெய்வம் ' எனப் பாரதிராஜா ஐயாவின் குரலில் படம் நிறைவுறும்.
மறுமணத்தை வலியுறுத்திய திரைப்படம்! மனதை ரணமாக்கும் மகத்தானக் காவியம்!
(திரைப்பட இணைப்பு: https://t.co/xH7oXNVysY)
மாரிதாஸ் கைதில் நீதிமன்றத்தில் அசிங்கப்பிட்டிருக்கிறார் விஜய்.. தன்னிடம் காவல்துறை இருக்கிறது என்பதற்காக பழிவாங்க புறப்பட்டால் இப்படி தான் கேவலப்பட வேண்டும். எந்த சமூக ஊடகத்தால் ஆட்சிக்கு வந்தீர்களோ அந்த சமூக ஊடகத்தில் எழுதுபவர்களையும் பேசுபவர்களையும் அடக்காதீர்கள். கடந்த ஸ்டாலின் ஆட்சி வீழ்ந்ததற்கு தவறான அதிகாரிகளும் அதிகாரத் திமிரும் தான் பாதி காரணம் அதே வழியில் விஜய் செல்கிறார்.
#அசிங்கப்பட்ட🛺
எனக்கு தெரிஞ்சு பேக்ரவுண்டுல பாட்டு போட்டு விஜயின் மாநாடுகளுக்கு 3 நாள் முழுக்க கவர் பண்ணதும், அவர் வீட்டில் இருந்து வெளிய வர்றதில் தொடங்கி வீட்டுக்குள் போற வரை live ரீலே பண்ணதும், இதில் உச்சமாக ஆசிரியராக இருந்த சமஸ் விஜய்க்கு வெளிப்படையாக ஆதரித்து பேசியதும் புதியதலைமுறை தொலைக்காட்சியில் தான்..
முதல் அடி ஏன் அவர்களுக்கு என தெரியவில்லை… எனினும் ஊடக அடக்குமுறைக்கு கடும் கண்டனங்கள்…